பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


10 அடி இடைவெளி இருப்பது போலவும் இணையாக இருப்பது போலவும், இரண்டு நீண்ட கோடுகளைப் போடவும்.

ஒவ்வொரு கோட்டின் மீதும், ஒவ்வொரு குழுவும் தன் ஆட்டக் காரர்களை, 6 அடி இடை வெளி விட்டு. ஒருவர் மாற்றி ஒருவர் உட்பக்கம் வெளிப்பக்கம் பார்த்திருக்குமாறு, உட்காரச் செய்ய வேண்டும்.

சைகை கொடுத்தவுடன், ஒரு முனையில் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு குழு ஆட்டக்காரரும், ஒடத் தொடங்கி, தன் குழு ஆட்டக்காரர்களின் முதுகுப்புறமாக ஓடிக் கடந்து கடந்து ஓடி, எல்லோரையும் கடந்த பிறகு, திரும்பவும் அதே போல் சுற்றி வந்து, தனக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் ஆட்டக்காரரைத் தொட்டு, கோ கொடுத்து விட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஓட்டம் தொடரும்.

முதலில் ஒடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.

3.2. கால் பந்தாட்டம்

கால் பந்தாட்டத்தில், பந்தை உதைத்தல்; பந்தைத் தடுத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல்; பந்தை