பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓவியம் ஒளரங்கசீபு 95 ஆங்கில ஓவியர் சர் ஜோஷுவா ரெயினால்ட்ஸ் வரைந்த ஓவியம் பிரெஞ்சு ஓவியர் ரன்வார் வரைந்த ஓவியம் ஆங்கில ஓவியர் கன்ஸ்டபிள் வரைந்த ஓவியம் நெதர்லாந்து ஓவியர் ரெம்பிரான்ட் வரைந்த ஓவியம் ஔரங்கசீபு (1618-1707): டெல்லியிலிருந்து இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர் ஒளரங்கசீபு. இவர் சக்கரவர்த்தி ஷா ஜகானின் மூன்றாம் மகன். நல்ல கல்விமான். போரில் வல்லவர். ஷா ஜகான் மேற்கொண்ட பல போர் களில் இவர் உதவியாக இருந்தார். சக்கர வர்த்தி ஷா ஜகான் முதுமையினாலும், நோயினாலும் தளர்ந்திருந்தபோது அவருடைய மூத்த மகன் தாரா என்பவர் அரசைக் கைப்பற்றிக்கொண்டார். அப்போது ஔரங்கசீபு டெல்லியில் இல்லை. இந்தச் செய்தியைக் கேள்வியுற்று ஒளரங்கசீபு டெல்லிக்கு விரைந்து தம் தந்தையைச் சிறையிட்டார். தம் சகோ தரர்களைச் சூழ்ச்சியால் கொன்றுவிட்டுப் பிறகு தாமே சக்கரவர்த்தியாக முடி சூட்டிக்கொண்டார். ஆனாலும் பதவி ஏற்ற பின் ஒளரங்கசீபு எளிய வாழ்க்கை நடத் தினார்.