பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 ஒளரங்கசீபு ஒளவையார் (மொகலாய ஓவியம் ) இவர் சொந்த இன்பங்களைப் பாராமல் குடிமக்களுக்குச் சேவை செய்வதிலேயே கண்ணாக இருந்தார். மதப்பற்று மிகவும் உடையவர். இஸ்லாமிய வேதமாகிய குர்ஆன் முழுவதையும் மனப்பாடமாகக் கற்றிருந்தார். முஸ்லிம் சட்டங்களை முறைப்படுத்தினார். தீவிர மதப்பற்று காரணமாக இவர் இந்து சமயத்தினரைத் துன்புறுத்தினார். இந்துக்களிடம் மட்டும் இவர்' ஜிரியா என்ற வரியைத் தண்டினர். வரி கொடுக்காதவர்களைக் கடுமையாகத் நண்டித்தார். இந்துக்களின் கோயில்கள் பலவற்றை இடிக்கச்செய்தார். இவருடைய கடுமையான ஆட்சிக்கு மக்கள் மிகவும் அஞ்சி வாழ்ந்தனர். எவரையும் இவர் நம்பமாட்டார். இசை, இலக்கியம் போன்ற கலைகளில் இவருக்குச் சிறிதும் விருப்பம் இல்லை. பகை இவருடைய தீவிர மதப்பற்றும், குறுகிய மனப்பான்மையும் நாடெங்கும் மையை வளர்த்தன. நாட்டில் குழப்பங் கள் தோன்றின. போர்கள் ஓயாது நடந் தன. அரசாங்க வருமானம் குறைந்தது; ஆளும் திறமை தமக்கு இருந்தபோதிலும் ஒளரங்கசீபு அதனைத் தக்க முறையில் பயன் படுத்திக்கொள்ளவில்லை. அதற்காக இவர் தம் இறுதிக்காலத்தில் மிகவும் மனம் வருந்தினார். இவர் 1707-ல் உயிர் துறந்தார். ஒளவையார்: அறஞ் செய விரும்பு, ஆறுவது சினம்' என்னும் நீதி மொழிகளை நீங்கள் படித்திருப்பீர்கள். இவை ஆத்திசூடி என்ற நூலில் உள்ளவை. இந்த நூலை இயற்றியவர் ஒளவையார் என்னும் பெண் புலவர். இவர் கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி என்ற புகழ் பெற்ற நீதி நூல்களை யு எழுதியுள்ளார். இவை குழந்தைகளுக்கு ம் உயர்ந்த நீதிகளைப் புகட்டுபவை. ஒளவையார் 900 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் காலத்தில் சும்பர், ஒட்டக்கூத்தர் என்ற பெரும் புலவர்களும் வாழ்ந்தனர். ஒளவையார் என்ற பெயருள்ள பெண் புலவர்கள் வேறு இருவர் இருந்தனர். அவர்களுள் ஒருவர் 'விநாயகர் அகவல்' என்ற யோகநூல் ஒன்றை எழுதியுள்ளார், இவர் தமிழ்ப் புலமையும், யோகப் பயிற்சி யும் உடையவர். மற்றொருவர் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு இருந்தவர். அப்போது மதுரையில் தமிழ்ச் சங்கம் தடைபெற்று வந்தது. சிறந்த புலவர்கள் அச்சங்கத்தில் இருந்தனர். அதியமான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளல் அப்போது தகடூரை அரசாண்டு வந்தான். இந்த ஒளவையாரின் புலமையில் அவனுக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. இந்தச் சங்க கால ஒளவையார் பல சிறந்த பாடல்கள் எழுதியுள்ளார். புற நானூறு முதலிய சங்க நூல்களில் அவை சேர்க்கப்பட்டுள்ளன. சிறந்த பொருள் உடையவை அவை. அவை, உயர்ந்த கருத்துக்க ளோடு மேலான நீதிகளையும் அவை புகட்டு கின்றன. ஒளவையார் என்ற பெயருடைய இம் மூவர் பாடல்களிலும் சிறந்த நீதிகளைக் காணலாம். இவர்கள் தமிழின் வளர்ச்சிக் குப் பெரிதும் உதவியவர்கள். ஒளவையார் என்ற பெயருடைய இப்புலவர்களின் பிறப்பு வளர்ப்பு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் அவர்களைப் பற்றிக் கதைகள் பல உண்டு. ஒளவையார் ஒருவரே என்றும், அவரே நெடுங்காலம் வாழ்ந்து இந்த நூல்களை எல்லாம் இயற்றினார் என்று கூறுவாரும் உளர். சென்னைக் கடற்கரையில் உள்ள ஒளவையார் சிலை