பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இன்கா நாகரிக இன்று ஈக்வடார், பெரு, பொலீவியா, சிலி ஆகிய நாடுகள் இருக்கும் பகுதி யில் இன்கா மக்கள் வாழ்ந்து வந்த னர். கூஸ்க்கா என்பது இவர்களுடைய தலைநகர். வட அமெரிக்காவில் மெக்சிக்கோ வில் இவர்கள் காலத்திலேயே வாழ்ந் திருந்த ஆஸ்ட்டெக் (த.க.) மக்களைப் போல இவர்களும் சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந் தனர். இன்கா மக்கள் கட்டடக் கலையில் சிறந்து விளங்கினர். கற்களைக் கொண்டு பல பெரிய கோயில்களையும் அரண்மனை களையும் கட்டினர். கற்களுக்கிடையில் சுண் ணாம்புச் சாந்தைப் பூசவில்லை. கற்களைத் தகுந்தவாறு இழைத்து ஒன்றோடு ஒன்றைப் பொருத்திக் கட்டடங்களைக் கட்டினர். ஆண்டீஸ் மலைத்தொடரில் வாழ்ந்த இவர்கள் மலைச்சரிவின் மீது நீண்ட சாலை களை அமைத்தனர். மலைக் கணவாய்களின் மேல் தொங்குபாலங்கள் அமைத்தனர். ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டித் தண்ணீரைத் தடுத்து விவசாயத்திற்குப் பயன்படுத்தினர். உருளைக்கிழங்கை முதன் முதல் பயிரிட்டவர்கள் இவர்களே. இவர் கள் லாமா என்ற ஒருவகை விலங்கையும், பன்றி முதலியவற்றையும் வளர்த்தனர். இன்கா மக்களுக்கு எழுதத் தெரியாது. கல்வியறிவு இல்லையென்றாலும் கைத் தொழில்களில் இவர்கள் சிறந்து விளங் கினர். சித்திர வேலைப்பாடு கொண்ட பல வண்ண ஆடைகளை இவர்கள் நெய்தனர். அழகிய மண்பாண்டங்களையும் செய் தனர். தங்கம், வெள்ளி ஆகியவற்றின் பயனையும் இவர்கள் தெரிந்திருந்தனர். சூரியனைப் பற்றியும், சந்திரனைப் பற்றியும், மற்ற கிரகங்களைப் பற்றியும் இன்கா மக்கள் அறிந்திருந்தனர். இவர்கள் சூரியனைத் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இன்கா மக்களின் பெருஞ் செல்வத் தைப் பற்றிக் கேள்விப்பட்ட பிஜாரோ என்ற ஸ்பானிய வீரன் படையெடுத்துச் சென்று, இன்கா மக்களை அழித்து அவர் களது அரசனையும் கொன்றான். அத்துடன் இன்கா நாகரிகமும் படிப்படியாக அழிந்து ம் - இன்ஷூரன்சு போயிற்று. இன்கா மக்களின் வழிவந்த வர்கள் சிலர் இன்றும் தென் அமெரிக்கா வில் வாழ்ந்துவருகின்றனர். இன்ஷூரன்சு : இக்காலத்தில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இவற்றால் சிலர் இறக்கிறார்கள். இன்னும் சிலர் மாரடைப்பு போன்ற நோய்களினால் எதிர்பாராமல் இறந்துவிடுகிறார்கள். இப்படி ஒரு குடும்பத்தின் தலைவர் திடீரென மரணம் அடைந்துவிட்டால், அவருடைய மனைவி மக்கள் ஆதரவில்லாமல் அல்லல் படுவார்கள் அல்லவா? அதைத் தவிர்க்க ஒரு வழி உண்டு . குடும்பத்தின் தலைவர் முன்னேற் பாடாக ஒரு நிறுவனத்துடன் ஓர் ஒப்பந் தம் செய்துகொள்ளலாம். அதன்படி, அவர் ஒரு குறிப்பிட்ட பெரிய தொகைக் காகச் சிறு கட்டணத் தொகை ஒன்றைத் தவணை முறையில் நிறுவனத்துக்குச் செலுத்தி வரவேண்டும். இடையில் அவர் எதிர்பாராமல் இறந்துவிட்டால், அவரு டைய குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகையை அந்நிறுவனம் கொடுக்கும். இந்த ஏற்பாட்டுக்கு ' இன்ஷூரன்சு ' என்று பெயர். இத்தகைய ஒப்பந்தம் செய்யும் நிறுவனத்தை 'இன்ஷூரன்சுக் கம்பெனி' என்கிறோம். இந்த ஒப்பந்தத் திற்குப் பாலிசி' எனப் பெயர். கம்பெனிக் குத் தவணை முறையில் செலுத்தும் தொகை 'பிரீமியம்' எனப்படும். இத் தொகையை மாதந்தோறுமோ மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ செலுத்தி வரலாம். இன்ஷூரன்சில் பலவகை உண்டு. எதிர் பாராத மரணத்தைக் கருதிச் செய்வது ' ஆயுள் இன்ஷூரன்சு ' ஆகும். ஆயுள் இன்ஷூரன்சு செய்தவர் இறந்த பின் தான் ஈட்டுத் தொகை கிடைக்கும் என்பதில்லை. அவர் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பணம் செலுத்தி வரலாம். அக்காலம் முடிந்தவுடன் அவர் இன்ஷூர்