பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 உறைதல் -உஜ்ஜயினி உறைதல்: பனிக்கட்டியை தீங்கள் பார்த்திருப்பீர்கள். தண்ணீரை மேன் மேலும் குளிர வைத்தால், அது ஒரு குறிப் பிட்ட வெப்பநிலையில் பனிக்கட்டியாக மாறுகின்றது. இப்படித் திரவப்பொருள் திடப்பொருளாக மாறுவதைத்தான் உறை தல் என்று சொல்லுகிறோம். சிறு தொட்டியில் பனிக்சுட்டிகளையும் உப்பையும் கலந்து நிரப்பி, நடுவில் கண் ணாடிக் குழாய் ஒன்றைச் செருகி, அதில் தண்ணீர் ஊற்றினால் இந்தத் தண்ணீரும் உறைந்து பனிக்கட்டியாக மாறிவிடும். வெப்பமானியை இந்தப் பனிக்கட்டியில் வைத்தால், அது 0' யைக் காட்டும். தண்ணீர் 0" வெப்பநிலையில் பனிக்கட்டி யாக உறைந்துவிடும் என்று இதனால் தெரி கிறது. இக்குழாயை வெளியே எடுத்துத் தண்ணீரில் அமிழ்த்தினால் அதற்குள் இருக் கும் பனிக்கட்டி உருகத் தொடங்கும். பனிக்கட்டி முழுவதும் உருகிய பிறகுதான் வெப்பமானி 0 டிகிரிக்கு மேல் ஏறத் தொடங்கும். தண்ணீர் உறையும் நிலையும், பனிக் கட்டி (உறைந்த நிலையிலுள்ள தண்ணீர்) உருகும் நிலையும் ஒன்றுதான் என்று இச் சோதனையால் நாம் அறிகின்றோம். உ மெழுகு, கண்ணாடி ஆகியவற்றைப் போன்ற பொருள்களைக் காய்ச்சினால் அவை மெல்ல மெல்லத்தான் உருகும். முதலில் அவை வெண்ணெய் போலாகும். பிறகு தண்ணீர் போல ஓடும். இவற் றுக்கு உருகும் நிலை இன்னதென்றும், உறையும் நிலை இன்னதென்றும் திட்ட மாகக் கூற முடியாது. எந்தப் பொருளும் உறையும்போது தன் அளவில் குறையும். ஆனால் தண்ணீர் மட்டும் உறையும்போது தன் அளவில் அதிகமாகும். பாறைப் பிளவுகளில் தேங்கி யுள்ள தண்ணீர் உறைந்தால் தன் அளவில் அதிகமாகின்றது. அதனால் பாறையின் பிளவும் அதிகமாகும். அதிகமாகும். அழுத்தத்தினால் பனிக்கட்டி உருகும். அழுத்தம் குறைந் தால் அது மீண்டும் உறைந்துவிடும். உறைபனி (Frost ) : மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகம் உயர்ந்த மலைகளின்மேல் குளிர் மிகவும் கடுமையாக இருக்கும். உதகமண்டலம் சுமார் 2,300 மீட்டர் உயரம். குளிர்காலத்தில் அவ் ஆரில் குளிர் கடுமையாக இருக்கும். அங்கு வெப்பமானி சில சமயம் 0• காட்டும். வெப்பநிலை இதற்குக் கீழேயும் இறங்கு வதுண்டு. அத்தாள்களில் புல்வெளிகளின் மேல் உறைபனி வெள்ளை வெளேரென்று படித்து கிடக்கும். உப்பை வாரி இறைத் ததைப் போலவும், பஞ்சைத் தூவியதைப் காச்மீரத்தில் ஒரு காட்சி. எங்கும் உறைப வெள்ளை வெளெரென்று படிந்து கிடக்கிறது. போலவும் அக்காட்சி பார்க்க மிக அழகாக இருக்கும். சம தட்பவெப்ப நாடுகளிலும் உறை பனி பெய்யும். அவ்விடங்களில் அது பல வகையான பூ வடிவங்களில் படியும். வெயில் வந்தவுடன் உறைபனி உருகிவிடும். கன காற்றில் நீராவி கலந்துள்ளது. இரவில் அது குளிர்ந்து தண்ணீர்த் துளிகளாகின் றது. இத்துளிகள் இத்துனிகள் காற்றைவிடக்' மானவை; ஆகையால் தரையின் மேல் உதிர்கின்றன; உடனே பனியாக உறைந்து விடுகின்றன. இரவில் காற்றடித்தால் உறைபனி பெய்யாது. பயிர்களுக்கும், பழ மரங்களுக்கும் உறைபனியால் தீங்கு நேரும். ஆகையால் அவற்றைத் துணியினால் மூடிவிடுவார்கள். புகை எழுப்பியும் அவற்றுக்கு வெப்ப மூட்டுவதுண்டு. ஆதி உஜ்ஜயினி: இந்தியாவின் புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுள் உஜ்ஜயினி ஒன்று. இந்நகரம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. புராணங்களிலும், பண்டைய வரலாற்றிலும் இந்நகரம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. காலத்தில் அவந்தி, மாளவம் ஆகிய நாடு களின் தலைநகராக இது விளங்கியது. வட மொழி நூல்களிலும் சிலப்பதிகாரம், யசோதர காவியம், பெருங்கதை முதலிய தமிழ் நூல்களிலும் இந்நகரத்தைப் பற்றிய அழகான வருணனை உண்டு. தமிழ் நூல்களில் இந்த நகரத்திற்கு உஞ்சை அல் லது உஞ்சேனை என்று பெயர். சிவன் கோயில் ஒன்று இங்கு உள்ளது. அழகிய ஓவியங்கள் சிற்பங்கள் நிறைந்த கோயில் களும், மசூதிகளும், அரண்மனைகளும் இங்கு நிறைய உள்ளன. விக்கிரமாதித்தன் கதை கள்(த.க.) சிலவற்றை நீங்கள் படித் திருக்கலாம். அம்மன்னனைப் பற்றிய கதை கள் மிக வேடிக்கையானவை. விக்கிர மாதித்தனுக்கு உஜ்ஜயினி தலைநகராக இருந்தது.