பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஊர்வன ஊர்வன ( Reptiles ) : மனிதர்கள் நடந்து செல்கின்றனர். விலங்குகள் நான்கு கால்களால் நடக்கின்றன. பறவை கள் இறகுகளால் பறக்கின்றன. பல்லி, பாம்பு, ஆமை முதலிய பிராணிகள் ஊர்ந்து ஊர்ந்து செல்லும். அரணை, ஓணான், உடும்பு, முதலை ஆகியவையும் ஊர்ந்துதான் போகும். இவ்விதம் ஊர்ந்து செல்லும் உயிரினங்களை ஊர்வன என்று சொல்கிறோம். மண்புழு, மரவட்டை போன்றவை ஊர்ந்து சென்றாலும் அவை இப்பிரிவைச் சேர்ந்தவையல்ல. ஊர்வனவற்றில் இன்று ஏறத்தாழ 5,000 வகைகள் உள்ளன. பாம்புகள், பல் லிகள் ஆமைகள், முதலைகள், தூயத்தாரா (Tuatara ) இவை யாவும் ஊர்வனவற்றுள் அடங்கும். இவற்றுக்குத் தனித்தனியே கட்டுரைகள் உண்டு. பாம்புகள் நீண்டு கயிறு போன்ற உடலுடையன; இவற்றுக் குக் கால்கள் இல்லை; நீர், நிலம், மரம் முதலிய இடங்களில் வாழும். பல்லிகளுக்கு நான்கு கால்கள் உண்டு. பல்லிகள் பெரும்பாலும் நிலத்தில் வாழ்கின்றன. நீரில் வாழும் சில வகைப் பல்லிகளும் உண்டு. ஆமைகள் உருவத்தில் வேறு பட்டலை. இவற்றுக்கு முதுகுப்புறத்தில் கடினமான ஓடு உண்டு; குட்டையான கால்களும், தலையும் இருக்கும். இவையும் நிலத்திலும், நீரிலும் வாழும். இவை அனைத்திலும் முதமைகள் பெரியவை; நீரில் மட்டும் வாழ்பவை. தூயத்தாரா இனம் மிகப் பழைமையான இனம். இது நியூஜீலாந்துக்கு அருகிலுள்ள தீவு களில் மட்டுமே காணப்படுகிறது. போதுள்ள ஊர்வனவற்றில் பாம்பு, பல்லி இனங்களைச் சேர்ந்தவையே அதிகம். இப் ஊர்வன எல்லாம் முதுகுத்தண்டுள்ள (த.க.) உயிரினங்களாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன. சூழ் நிலையின் வெப்பநிலைக்கேற்ப இவற்றின் உடல் வெப்பநிலையும் மாறுபடும். எனவே இவை குளிர் ரத்தப் பிராணிகள் (த.சு.) என்றும் அழைக்கப்படும். இவற்றின் தோல் முழுவதும் செதில்கள் நிறைந்திருக் கும். இந்தப் பிராணிகளுக்குப் பற்கள் உண்டு. ஆனால் அவை இரையை மெல்லு வதற்குப் பயன்படுவதில்லை; இரையைத் துண்டாக்கவும், வாயிலிருந்து இரை தப்பிப் போகாமல் பிடித்துக்கொள்ளவும். மட்டுமே உதவுகின்றன. பெரும்பாலும் இப்பிராணிகள் இரையை அப்படியே விழுங்கிவிடுகின்றன. வெப்பமண்டலத்தில் மட்டுமே ஊர்வன அதிகமாகக் காணப்படுகின்றன. ஊர்வனவற்றில் பெரும்பாலான பிராணி கள் நிலத்தில்தான் வாழ்கின்றன. நீரில் U.G.301 51 வாழும் ஊர்வன சிலவும் உண்டு. எனினும் அவை உணவுக்கும். முட்டை இடவும் நிலத்திற்கே வருகின்றன. ஊர்வன யாவும் முட்டையிடும் உயிரினங்களேயாகும். பெரும்பாலானவற்றின் முட்டைகள் சூரிய வெப்பத்தில் பொரிகின்றன. பாம்புகள் சிலவற்றின் முட்டைகள் தாயின் வயிற் னுக்குள்ளேயே தங்கிவிடும்; அங்கேயே பொரிக்கப்பட்டுக் குட்டிகளாக வெளியே வரும். இகுவானொடான் பல டிப்ளொடோக்கஸ் பழங்கால ஊர்வன ஸ்டெகொசாரஸ் ஆதிகாலத்தில் இருந்த ஊர்வன யாவும் காலப் போக்கில் மறைந்துவிட்டன. அவற்றுள் இன்று எஞ்சியிருப்பது, படத்தில் உள்ள தூயத்தாரா மட்டுமே. இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஊர்ந்து வாழும் உயிரினங்கள் இன்றிருப் பதைவிடப் பல நூறு மடங்கு அதிகமாக இருந்தன. அவற்றில் பல மிக மிகப் பெரியவை. டிரோடாக்ட்டைல் போன்ற சில பிராணிகள் பறந்து திரிந்தன; பிளெசியொசாரஸ் போன்றவை மீனைப் போல் நீரிலே வாழ்த்தன. மாறிவந்த தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப வாழ முடியாமல் அவை காலப்போக்கில் மறைந்துபோயின இந்த ஆதிகால இனங்களுள் இன்று எஞ்சி இருப்பது தூயத்தாரா ஒன்றுதான் ! பார்க்க: ஆமை ; குளிர் ரத்தப் பிராணிகளும்,