பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதலை 52 எஃகு - எக்ஸ் கதிர்கள் பல்லி இனத்தைச் சேர்ந்த பச்சோந்தி ஆமை வெப்ப ரத்தப் பிராணிகளும்; தூயத் தாரா; பல்லி; பழங்கால உயிர்வாழ்க்கை; பாம்பு: முதலை; முதுகுத்தண்டுள்ளன. வகை எஃகு: இரும்பில் மூன்று உண்டு. அவற்றுள் ஒன்று' எஃகு. இது ஓர் உலோகக் கலவை (த.க.). மிகவும் கடின மானது. ஊசி முதல் ரெயில் தண்டவாளங் கள் வரை பல பொருள்கள் எஃகினால் செய்யப்படுகின்றன. இரும்பும் எஃகும் என்ற தலைப்புடைய கட்டுரையில் எஃகைப் பற்றிய விவரங்களை அறியலாம். எக்ஸ் - கதிர்கள் ( X-Rays ) : நீங்கள் போட்டோ எடுத்துப் பார்த்திருப் பீர்கள். போட்டோப் படங்கள் எடுப் பதற்கு ஒலி (த.க.) தேவை, போட்டோ வில் உங்கள் உருவம் மட்டுந்தான் தெரியும்; உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகள் எதுவும் தெரிவதில்லை. ஒளிக்குப் பதில் எக்ஸ் கதிர்களைக் கொண்டு ஒரு போட்டோ எடுத்தால் உடம்பினுள்ளே உள்ள உறுப்பு கள் அதில் தெரியும். இந்த எக்ஸ்-கதிர்களை ரன்ட்கன் (Ronigen) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1895-ல் கண்டுபிடித்தார். எக்ஸ்-கதிர்கள் தற்செயலாகக் கண்டு பிடிக்கப்பட்டவையே. குறைந்த அழுத் தத்தில் வாயு திரப்பிய ஒரு குழாயில் மின்சாரத்தைச் செலுத்திய பொழுது, அதன் அருகிலிருந்த சில பொருள்கள் ஒளிர்வதை ரன்ட்கன் கண்டார். குறுக்கே ஒரு திரையை நிறுத்தி மறைத்தபோதும் அந்த ஒளிர்வு தொடர்ந்து காணப்பட் டது. இவ்விளைவு ஒருவகைக் கதிர்களால் தாள் ஏற்படுகிறது என்பதை அவர் அறிந் தார். ஆனால் அக்கதிர்கள் எங்கிருந்து வந்தன, அவை எப்படி உண்டாயின என்று அவருக்கு அப்போது விளங்கவில்லை. தெரியாத ஒன்றை X என்ற ஆங்கில எழுத் தால் குறிப்பது வழக்கம். எனவே, அவரும் அக்கதிர்களை 'எக்ஸ்-கதிர்கள்' என்று குறிப்பிட்டார். ஒளியைப் பார்க்க முடியும்; ஆனால் ளிக்கதிர்களைப் பார்க்க முடியாது. எக்ஸ்-கதிர்களையும் நாம் பார்க்க முடியாது. ஒளிக்கதிர்கள் ஊடுருவ முடியாத சில திடப்பொருள்களையும் எக்ஸ்-கதிர்கள் ஊடுருவிச் செல்லும். இந்த அரிய இயல் பினால் எக்ஸ்-கதிர்கள் பல வழிகளில் நமக் குப் பயன்படுகின்றன. சிறுவன் ஒருவனுடைய உணவுக் குழாயில் சிக்கிக் கொண்ட கோலிக் குண்டு. வரி வரியாக உள்ளவை மார்பு எலும்புகள். பாம்பு