பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எகிப்து கீழே விழுந்துவிட்ட ஒருவருடைய கால் எலும்பு நன்றாக இருக்கிறதா அல்லது முறிந்துவிட்டதா, எந்த இடத்தில் முறிந் திருக்கிறது என்ற விவரங்களை எக்ஸ்-கதிர் களைக் கொண்டு எடுக்கப்பட்ட போட்டோ விலிருந்து தெரிந்துகொள்ளலாம். காசு ஒன்றை மிட்டாய் என்று எண்ணிக் குழந்தை விழுங்கிவிடலாம். அந்தக் காக குழந்தையின் உடலில் எங்கிருக்கிறது. என்பதையும், துப்பாக்கிக் குண்டு பாய்ந்த எங்கு உடலில் குண்டு ஒருவனுடைய தங்கியிருக்கிறது என்பதையும் எக்ஸ்-கதிர் போட்டோவில் கண்டுபிடித்துவிடலாம். எக்ஸ்-கதிர்கள் அதிக சக்தி வாய்ந்தவை. உடலில் எழும்பியுள்ள கட்டிகளின் மேல் எக்ஸ்-கதிர்களைப் பாய்ச்சி சிகிச்சை செய் கிறார்கள். எக்ஸ்-கதிர்களினால் இன்னும் பல பயன்கள் உண்டு. தொழிற்சாலைகளில் எந்திரங்களின் உறுப்புகளில் பழுது ஏதேனும் ஏற்பட் டிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க லாம். ரேடியோ வால்வு போன்ற நுட்ப மான கருவிகளின் உள் அமைப்பு ஒழுங் காக இருக்கிறதா என்று அறிந்து கொள்ள லாம். ஆகாய விமானங்களின் எஞ்சின் களில் ஏற்படும் மிதச் சிறிய பழுதுகளையும் கண்டுகொள்ளலாம். இவை மட்டுமன்றி நேரில் கண்ணுக்குப் புலப்படாத இன்னும் பல குறைபாடுகளையும் எக்ஸ்-கதிர் போட்டோ நமக்கு வெளிப்படையாகக் காட்டிவிடுகிறது. எக்ஸ்-கதிர் நிறமாலைகாட்டி ( X - Ray Spectrograph ) என்று ஒரு கருவி உள்ளது. இதன் மூலம் ஒரு திடப்பொருளில் அதன் அணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன (அணு அமைப்பு - Atomic Structure) என் பதை விளக்கமாகத் தெரிந்துகொள்ள லாம். எக்ஸ் - கதிர்களால் பல நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றன. ஆனால் அவற்றை மிகவும் எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும். தவறினால் அவற்றல் கேடு விளையும். ஏனெனில் எக்ஸ் - கதிர்கள் உடல் திசுக்களையே அழித்துவிடக் கூடியவை. எக்ஸ்-கதிர்களைக் கையாள்ப வர்களுக்குத் தோல் நோய்களும், புண் களும் உண்டாகக்கூடும். அவற்றைத் தவிர்க்க அவர்கள் பாதுகாப்பான உடை சுனை அணிந்துகொள்ளுவார்கள். அடிக் கடித் தம் உடலைப் பரிசோதனை செய்து கொள்வார்கள். எகிப்து: ஆப்பிரிக்காக் கண்டத் தின் வடகிழக்குக் கோடியில் உள்ள நாடு எகிப்து. பழங்காலத்தில் நாகரிகத்தில் சிறந்து விளங்கிய நாடுகளுன் இது ஒன்று. நாட்டின் பரப்பு 10,04,000 சதுர கி.மீ. மத்தியதரைக் கடல்& க யெஸ் கோல்வாய். சூயெஸ் கைரோ பகுத்தி க எகிப்து துணி வகைகள் க ஆப்பிரிக க செங் கடல் சூடான் கப்பல் வணிகன் அச்சி கபழம் மக்காச் சோளம் கோதுமை எண்ணெய் சர்க்கரை 53 மக்கள் தொகை 27 கோடி. லேயே மிக நீளமான நைல் ஆறு இந் நாட்டில் பாய்கிறது. நைல் பாயும் நீண்ட பள்ளத்தாக்கைத் தவிர மற்றப் பகுதி களெல்லாம் வறண்ட பாலைவனமாகும். எகிப்திய மக்களுள் பெரும்பாலோர் செழிப்பான இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியில்தான் வாழ்கின்றனர். வேளாண்மை இங்கு முக்கியத் தொழில். கோதுமை, பார்லி, சோளம், கரும்பு, நெல், காய்கறிகள் முதலியன முக்கிய விளைபொருள்கள். உயர்தரமான பருத்தி இங்கு மிகுதியாக விளைகிறது. இதைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறர்கள். செங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக் கும் இடையே வெட்டப்பட்ட சூயெஸ் கால்வாய் (த.க.) மூலம் எகிப்துக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இக்கால்வாயின் மூலம் ஐரோப்பாவுக்கும் ஆசிய நாடுகளுக் கும் இடையே உள்ள கடல்வழி நீளம் குறைந்துவிட்டது. மிகப் எகிப்தின் தலைநகர் கைரோ. ஆப்பிரிக்கா கண்டத்திலேயே இதுதான் பெரிய நகரம். கைரோவுக்கு அருகில் உள்ள பிரமிடுகள் உலகப் புகழ் பெற் றவை. கூம்பு சதுர வடிவமுள்ள இக் கோபுரங்கள் உலக அதிசயங்கள் (த.க.) ஏழினுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவற்றுக்குள்ளே தான் பண்டைய எகிப் திய மன்னர்களின் சடலங்கள் கெட்டுப் போகாமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பிரமிடுகள் இன்னும் சிதையாமல் உள்ளன. இக்கோபுரங்களின் உட்புறத்தில் சுவர்களின்மேல் சித்திரங்களும், வண்ண ஓளியங்களும் தீட்டப்பட்டுள்ளன. ஒரு விதச் சித்திர எழுத்துகளால் விவரங்களை யும் குறிப்புகளையும் எழுதியுள்ளனர். 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பல