பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 ஐரோப்பா நள்ளிரவில் சூரியன்; நமக்கு அரை நாள் பகல், அரை நாள் இரவு அல்லவா ? துருவத்தையொட்டியுள்ள பகுதிகளில் அரை ஆண்டு பகலாகவும். அரை ஆண்டு இரவாகவும் இருக்கும். ஆறு மாதம் தொடர்ந்து சூரியன் வானத்தில் தெரிந்துகொண்டே இருக்கும். நார்வே நாட்டில் நள்ளிரவில் எடுக்கப்பட்ட படத்தைத்தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள். ஒரு கோதுமை, பார்லி, ஓட்ஸ், ரை, பீட்டுக்கிழங்கு, உருளைக் கிழங்கு ஆகியவை இக்கண்டத்தில் விளையும் முக்கிய உணவுப் பொருள்கள். மத்தியதரைக் கடலோரங் களில் பலவகைப் பழமரங்கள் உள்ளன. அகன்ற புல்வெளிகளில் பால் பண்ணைகள் உள்ளன. ஐரோப்பிய மக்களுக்கு மீன் ஒரு முக்கிய உணவு. ஆதலால் மீன் பிடிப்புத் தொழில் பெருமளவில் நடை பெறுகிறது. ஐரோப்பாவில் காட்டு வனம் அதிகம் இல்லை. ஆனால் ரஷ்யப் பகுதிகளில் பெரிய பெரிய காடுகள் உண்டு. அங்குக் கட்ட டத்திற்குப் பயன்படும் மரங்கள் ஏராள மாகக் கிடைக்கின்றன. இக்காடுகளில் பெரிய வன விலங்குகள் எதுவும் இல்லை. ஆனால் ஆர்க்டிக் கடலையடுத்துள்ள கரை யோரங்களில் பனிமான், கரடிகள், குள்ள நரிகள் ஆகியவை வாழ்கின்றன. நாட்டுக் காடுகளில் ஓநாய்களும், முயல் களும் காணப்படுகின்றன. உள் இக்கண்டத்தில் இரும்பு, அலுமினியம், நிலக்கரி கிடைக்கின்றன. தொழில் வளர்ச் சிக்கு இவை மிகவும் தேவை. இத்தாலி யில் உயர்தரமான சலவைக்கல் கிடைக் கிறது. ஜெர்மனியில் நிலக்கரியும், ருமேனியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் எண்ணெயும் மிகுதியாகக் கிடைக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந் தில் நீராவி எந்திரம் கண்டுபிடிக்கப்பட் டதைத் தொடர்ந்து உற்பத்தித் தொழிலி லேயே பெரியதொரு புரட்சி ஏற்பட லாயிற்று. ஐரோப்பா முழுவதிலும் மிகப் பெரிய தொழிற்சாலைகள் ஏற்பட்டன. அவற்றைச் சுற்றிப் பெரிய நகரங்களும் வணர்ந்துள்ளன. இன்று ஐரோப்பாவில் தொழில்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. இங்கு வாழும் மக்களுள் மூன்றில் ஒரு பங்கினர் உற்பத்தித் தொழில்கனில் ஈடுபட்டிருப்ப வர்கள்தாம். கவிட்ஸர்லாந்து கடிகாரத் துக்குப் புகழ்பெற்றது. மிகமிக நுண்ணிய எந்திரக் கருவிகள் இங்கு செய்யப்படு கின்றன. ஜெர்மனியில் மிகப் பெரிய எந்திரத் தொழிற்சாலைகள் நடைபெறு இன்றன. ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் நெடுஞ்சாலைகளுக்கும், ரெயில் பாதை களுக்கும், விமானப் போக்குவரத்துக்கும் குறைவில்லை. ஐரோப்பிய நகரங்களுக்கும் உலகத்திலுள்ள பிற பெரிய நகரங்களுக்கு மிடையே விமானப் போக்குவரத்து நடை பெறுகிறது. இன்று இவ்விதம் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள ஐரோப்பா, ஆதிகாலத்தில் இருந்த நிலையைக் கேட்டால் வியப் படைவீர்கள். இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஐரோப்பா வில் நாடு நகரங்களே இல்லை. மக்களும் வாழவில்லை. மலைபோன்ற பனிக்கட்டி களுக்குள் இக்கண்டம் முழுவதும் மூழ்கிக் கிடந்தது. பிறகு உறைபனி சிறிது சிறிதாக உருகி ஓடியபின் ஆசியாவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும் மக்கள் இங்கு வந்து குடியேறினர். தனித்தனி நாடுகள் பல அமைத்தனர். கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் இரு சிறந்த நாகரிகங்கள் தோன்றின. அவற்றிலிருந்துதான் ஐரோப்பிய நாகரிகம் பிறந்தது. ஆதியில் ஐ ரோப்பாவில் பெரும் பாலான மக்கள் யூத மதத்தைச் சேர்ந் திருந்தார்கள். பிறகு கிறிஸ்தவ மதம் தோன்றிற்று. இதைத் தொடங்கியவர் இயேசு கிறிஸ்து. அவர் பிறந்து 1970 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பிறந்த நாளிலிருந்துதான் ஆங்கில ஆண்டு கணக் கிடப்பட்டு வருகிறது. இப்போது கிறிஸ்தவ மதத்தில் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று ரோமன் கத்தோலிக்க மதம், மற்றென்று பிராட் டெஸ்டென்டு மதம். முதல் பிரிவினரின் உலக குரு போப்பாண்டவர். இவர் இத்தாலியில் ரோமாபுரியின் ஒரு பகுதி யாகிய வாடிக்கனில் இருக்கிறார். ஐரோப்பாவில் முதன் முதல் கிரீட் என்ற தீவில் நாகரிகம் தோன்றியது. அது பிறகு கிரீஸ் முழுவதும் பரவிற்று. பாபி லோனியா, அசிரியா, எகிப்து ஆகிய பண் டைய ஆசிய நாடுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் கிரேக் கர்கள் கற்றுக்கொண்டனர். மன்னர் இல் லாத குடியரசாட்சி முதன் முதல் கிரீஸில் தான் ஏற்பட்டது. ஆதன்ஸ் என்ற புகழ் பெற்ற பண்டைய கிரேக்க நகரில் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் அறிஞர்கள், தத்துவ ஞானிகள், நாடக