பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐரோப்பா பல துறைகளிலும் முன்னேற்ற மடைந்த பல தனித்தனி நாடுகளைக் கொண்டது ஐரோப்பா. இவற்றுள் பெரும்பாலான நாடுகளில் அவற்றுக்கே உரிய மொழி வழங்குகிறது. இயற்கை வளமும், சரித்திரச் சிறப்பும், விஞ்ஞான வளர்ச்சியும், கலையுணர்ச்சியும் நிறைந்த கண்டம் ஐரோப்பா. புகழ்பெற்ற பல இலக்கிய மேதைகளையும், ஓவியர்களை யும், இசைக் கலைஞர்களையும் உலகுக்குத் தந்துள்ளது ஐரோப்பா. ஆசிரியர்கள், இலக்கிய எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், சிற்பிகள், கணிதவியல், வானவியல் அறிஞர்கள் ஆகிய பலர் வாழ்ந்திருந்தனர், பிளேட் டோ (த.க.), அலிஸ்டாட்டில் (த.க.), ஆர்க்கிமிடீஸ் (த.க.) ஆகிய அறிஞர்கள் கிரேக்க நாட்டில் வாழ்ந்திருந்தவர்கள், அடுத்து, ரோமானிய நாகரீகம் ஐரோப்பா முழுவதும் பரவிற்று. ரோமா னியர் நல்ல சாலைகள் அமைத்தனர். முறையான அரசியலை நிறுவினர். மத்திய காலத்தில் அதாவது கி.பி. 500 ஆண்டு முதல் 1000 வரையில் இஸ் லாமிய நாடுகளிலிருந்து பல புதிய கருத்து கள் ஐரோப்பாவில் புகுந்தன. ஐரோப்பாவில் புதிய நாகரிகம் ஒன்று உருவாயிற்று. கொலம்பஸ் அமெரிக்காவுக் கும்,வாஸ்க்கோ-ட-காமா இந்தியாவுக்கும் வழி கண்டுபிடித்தனர். இந்தியாவுடன் வாணிகத் தொடர்பு ஏற்பட்டவுடன் இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல். ஹாலந்து ஆகிய நாடுகளில் செல்வம் ஏராளமாகப் பெருகிற்று. அமெரிக்காக் கண்டங்களிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ் திரேலியாவிலும் ஐரோப்பிய மக்கள் குடி யேறினர். பல நாடுகளைச் சொந்தமாக்கிக் கொண்டனர். வெளிநாட்டு வாணிகத் தால் அவர்களுடைய செல்வம் அதிகரித் தது. கடற்கொள்ளைகளும், நீக்ரோக்களைச் சிறைப்பிடித்து தடத்திய விற்பனையும் மேலும் ஏராளமான செல்வத்தை அவர் களுக்கு வழங்கின. இதனால் ஐரோப்பிய மக்களிடையே போட்டியும், பூசலும், போர்களும் விளைந்தன. ம் சென்ற அறுபது ஆண்டுகளில் இரு உலக யுத்தங்கள் நடந்தன. முதல் உலக யுத்தம் 1914-ல் தொடங்கி நான்கு ஆண்டுகள் நடைபெற்றது. இரண்டாம் உலசு யுத்தம் 1939 முதல் 1945 வரை நடைபெற்றது. இவ்விரு யுத்தங்களையும் ஜெர்மனியே தொடங்கி வைத்தது: ஆனால் இரண்டிலும் அது தோல்வியடைந்தது. ஐன்ஸ்ட்டைன் 77 இந்த நூற்றாண்டில் ஐரோப்பிய மக் களின் எண்ணங்களிலும், வாழ்க்கையிலும் பெரும் புரட்சிகள் தோன்றியுள்ளன. பல நாடுகளில் மன்னர்கள் முடி இழந்தனர். ரஷ்யாவில் பொது உடைமைக் கட்சியின் அரசாங்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடு களுக்குச் சொந்தமாக இருந்த பல ஆப் பிரிக்க, ஆசிய நாடுகள் சுதந்தரம் பெற் றுள்ளன. விஞஞானத்தின் கண்டுபிடிப்புகளை ஐரோப்பிய மக்கள் தம் வாழ்க்கை நலத் துக்குப் பெரிதும் பயன்படுத்தி வருகின் றனர். மேலும் மேலும் விஞ்ஞானம் வளர்ந்து வருகின்றது. உற்பத்தித் தொழில்களுக்கு அணுசக்தி பயன்படு கிறது. முதன் முதல் விண்வெளிப் பயணத்தை ஐரோப்பிய நாடான ரஷ்யா தொடங்கி வைத்தது. இயற்கை வளமும், சரித்திரச் சிறப்பும், விஞ்ஞான வளர்ச்சி யும், கலையுணர்ச்சியும் நிறைந்த கண்டம் ஐரோப்பா. இப்போது ஐரோப்பாக் கண்டத்தில் 30 நாடுகளுக்கு மேல் உள்ளன. அவற்றுள் மிகவும் சிறியது மானக்கோ என்பது. உலகிலேயே மிகச் சிறிய நாடும் இதுதான். இதன் பரப்பு ஒன்றேகால் சதுர கிலோ மீட்டர். மிகவும் பெரியது ரஷ்யப் பகுதி. அதன் பரப்பளவு 46,92,000 சதுர கிலோமீட்டர். ஐன்ஸ்ட்டைன், ஆல்பர்ட் (1879- 1955): இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானி களுள் தலைசிறந்தவர் ஆல்பர்ட் ஜன்ஸ்ட் டைன் ஆவார், பௌதிக விஞ்ஞானத்தில் இவர் ஒரு திருப்பத்தை உண்டாக்கினர், இவர் கணிதத்திலும் பெரிய மேதைகலை யுணர்ச்சி நிறைந்தவர். காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர். ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டைன்