பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 ஓட்டகம் ஒட்டகம் : ஆடு, மாடு, குதிரை போன்று ஒட்டகமும் மனிதனுக்கு மிகவும் பயனுள்ள விலங்கு. இது வறண்ட பாலை வனங்களில் வாழக்கூடியது. பாலைவனப் பகுதிகளில் வாழ்வோர் இதனை வளர்க் கிறார்கள். இதைப் 'பாலைவனக் கப்பல்' என்றும் அழைப்பதுண்டு. பாலைவனத்தில் வாழ்வதற்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்டது ஒட்டகம். பொதுவாகப் பாலைவனங்களில் உணவும் நீரும் அதிகமாக இல்லை என்பது உங் களுக்குத் தெரியும். ஆகவே ஓட்டகம் உணவு கிடைக்கும் பொழுது தேவைக்கு மேல் தின்னும்; மிகுதியான உணவைத் தன் திமிலில் கொழுப்புப் பொருளாகச் சேமித்து வைத்துக்கொள்ளும். அது போலவே நீரையும் கிடைக்கும்போது நிறையக் குடிக்கும். இது ஒரே சமயத் தில் 90 லிட்டர் (20 காலன்) தண்ணீரைக் குடித்துவிடும். அதிகமான நீரைத் தன் இரைப்பையிலுள்ள சிறிய அறைகனில் தேக்கி வைக்கும். சேமித்த உணவையும், நீரையும் இது பின்னர் பல நாள் வரைப் பயன்படுத்திக் கொள்ளும். ஒட்டகத்தின் பாதங்கன் அகன்று மெத் தென்று இருக்கும். இதனால் மணலில் நடக்கும்போது இதன் கால் புதைந்து ஒட்டகத்தின்மீது அமர்ந்து குழந்தைகள் சவாரி செய்கிறார்கள். பாக்ட்டிரிய ஒட்டகம் போகாது. பாலைவனத்தில் அடிக்கடி புயல் வீசும்; மணலை வாரி அடிக்கும். அப் போது ஒட்டகத்தின் கண், காது ஆகிய வற்றில் வளர்ந்துள்ள அடர்ந்த மயிர், அந்த உறுப்புகளை மூடிக்கொள்ளும். மூக் கில் அமைந்துள்ள தசைகள் மூக்கை அடைத்துவிடும். இதனால் இதன் உடலினுள் எவ்வகையிலும் மணல் புகாது. ஓட்டகம் 40 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஒட்டகத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாக்ட்டிரிய ஒட்டகம். இது மத்திய ஆசியாவில் வறண்ட பகுதிகளில் வாழ் கிறது. இதற்கு இரு திமில்கள் உள்ளன. குளிர்ப் பிரதேசத்தில் இருப்பதற்கு ஏற்ப இதன் தோல் தடிப்பாகவும், மயிர் அடர்ந் தும் இருக்கும்; மலைகளில் ஏறுவதற்குத் தக்கவாறு கால்கள் குட்டையாகவும், உறுதியாகவும் உள்ளன. மற்றென்று அராபிய ஒட்டகம். இதற்கு ஒரு திமில் தான் உண்டு. இந்தியாவில் இந்த வகை ஒட்டகங்களே உள்ளன. இவற்றை மகா ராஷ்டிரம், ராஜஸ்தான், பஞ்சாப், உத் தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணலாம். இந்தியா தவிர, வட ஆப்பிரிக்காவிலும், அரேபியாவிலும் இவை காணப்படுகின்றன. பாலைவனத்தில் பொதி சுமக்க ஓட்டகம் பயன்படுகிறது. பொதி சுமக் கும் ஒட்டகம் 300 கிலோகிராம் சுமை யோடு நாள் ஒன்றுக்கு 40 கிலோமீட்டர் தூரம் நடக்கும். சவாரி ஒட்டகம் ஒரு நாளில் 100 கிலோமீட்டர் வரை செல் லும். ஒட்டகத்திடமிருந்து பால் கிடைக் கிறது. இதன் இறைச்சி உணவாகின்றது. இதன் மெல்லிய மயிரால் ஆடை நெய் கிறார்கள். இதன் தோலும் பல விதங்களில் பயன்படுகிறது.