பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓட்டுண்ணி ஒட்டுண்ணி (Parasite) : மனிதர்களா கிய நாம் நம் உணவை நாமே தேடி உண்கிறோம். ஆடு, மாடு முதலிய விலங்கு களும் தம் உணவைத் தாமே தேடி உண் கின்றன. இவ்வாறு உலகிலுள்ள பலகோடி உயிரினங்களில் பெரும்பாலானவை தத்தம் உணவைத் தாமே தேடி உண்டு வாழ் கின் றன. ஆனால் சில உயிரினங்கள் மட்டும் வேறோர் உயிரினத்தின் உடல் மீதோ அல்லது அதன் உடலுக்குள்ளோ தங்கி அங்கிருந்து தம் உணவைப் பெறு கின்றன. இவ்வாறு பிற உயிர்களில் ஒட்டி இருந்து உண்பதால் இவற்றுக்கு ஒட்டுண் ணிகள் என்று பெயர். இவற்றுக்கு உண வைத் தரும் உயிருக்கு ஆதார உயிர் என்று பெயர். ஒட்டுண்ணி உயிர்கள் தாவரங் சுனிலும் உண்டு; விலங்குகளிலும் உண்டு. ஒட்டுண்ணியில் பல வகை உள்ளன. உண்ணி, பேன் போன்றவை உடலின்மேல் ஒட்டி வாழும். நாடாப்புழு, கொக்கிப்புழு போன்றவை உடலுக்குள்ளேயே வளரும். அட்டை முதலியன உணவு வேண்டும் போது மட்டுமே ஆதார உயிரைப் பற்றும். ஆனால் நாடாப்புழு போன்றவை எப்பொழுதும் ஆதார உயிரை விடாமல் பற்றிக் கொண்டே இருக்கும். புஸ்தூருவி என்னும் செடி வேறொரு தாவரத்தின்மீது வளரும். ஆனால் அது ஆதாரத் தாவரத் தின் சத்து நீரை மட்டுமே உறிஞ்சும். தன் உணவைத் தானே தயாரித்துக்கொள் ளும். சந்தன மரம் ஒருவகை ஒட்டுண் ணியே. இதன் வேர்கள் அருகிலுள்ள மரஞ் செடிகலின் வேர்களைப் பற்றி அவற்றி லிருந்து சில பொருள்களை உறிஞ்சிக்கொள் ளும். முடித்தாளி என்னும் தாவர ஒட்டுண்ணியோ தன் உணவு முழுவதையும் ஆதார உயிரிலிருந்தே பெறுகிறது. நாக்குப் பூச்சி போன்ற சில ஒட்டுண்ணிகள் ற 81 தம் வாழ்நாள் முழுதும் ஒரே ஆதார உயிரிலேயே ஒட்டி வாழும். தெள்ளு, பேன் முதலிய வேறு சில, ஒன்றைவிட்டு ஒன்றுக்குத் தாவிக்கொண்டே இருக்கும். பொதுவாக ஒட்டுண்ணிகளால் தீங்கு தான் விளைகிறது. இலை ஆதார உயிரின் சத்தை உறிஞ்சிவிடும்; தவிர, உடலில் தஞ்சை ஏற்றும். பல கொடிய உயிருண்ணி கள் ஆதார உயிர்களுக்குத் தீங்கு விளைவிக் இன்றன. ஆனால் பெரும்பாலானவை ஆதார உயிர்களைக் கொல்வதில்லை; ஏனென் றால் அவற்றுடன் தாமும் இறந்துவிடும். உலகில் ஒட்டுண்ணி பற்றாத தாவரமும் இல்லை; விலங்கினமும் இல்லை. எவ்வளவு சிறிய உயிரினமாக இருந்தாலும் அதில் ஒட்டுண்ணியைக் காணலாம். ஒரு வியப்பு என்னவென்றால் ஒட்டுண்ணிகளுக்குள்ளும் பல ஒட்டுண்ணிகள் வாழ்கின்றன! சங் கிலித் தொடர்போலப் பல ஒட்டுண்ணி கள் ஒன்றையொன்று உறிஞ்சி வாழ்கின் றன. ஒட்டுண்ணிகளில் பெரும்பாலானவை உணவு தேடி அலைவதில்லை; இருக்கும் இடத்திலேயே தங்கி உணவை உறிஞ்சும். ஆகையால் இவற்றுக்குக் கால்கள், இறகு போன்ற உறுப்புகள் நன்றாக வளரவில்லை, கண், காது போன்ற உறுப்புகளும் இல்லை. இவை நன்றாகச் செரித்த உண வையே உண்பதால், இவற்றின் உடலில் உணவுப் பாதையும் வளர்ச்சி அடைய வில்லை. சதையைக் கீறிச் சத்தை உறிஞ்ச உதவும் ஊசி போன்ற உறுப்புகள் மட்டுமே இவற்றுக்கு உண்டு. உலகத்திலேயே மிகப் பெரிய பூவைப் பூக்கும் தாவரம் ராப்லீசியா என்பது. இப் பூவின் அகலம் மூன்றடி முதல் ஐந்தடி வரை இருக்கும். ஆனால் இத்தாவரமும் ஓர் ஒட்டுண்ணியேயாகும். இந்தச் செடி ஒருவகைப் புல்லுருவி, மரத்தினுள் நன்கு வேர் விட்டுப் படர்ந்திருக்கிறது. ராப்லீசியா - சுமத்ராவிலுள்ள காடுகளில் இது காணப்படுகிறது.