பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 ஓட்டு முறை - ஒரிஸ்ஸா யின் உடலானது காளான்வேர் போல ஒரு விதப் பிரண்டை அல்லது திராட்சைச் சாதிச் செடியின் வேர்த் திசுக்களுக்குள் புகுந்து சத்துப் பொருள்களை உறிஞ்சி வளரும். ஒட்டு முறை (Grafting): ஆப்பிள் மரத்தின் சிறுகிளை ஒன்றை இலைக் குருத்தோடு வெட்டி எடுத்துக்கொள்ளுங் கள். ஒரு பேரிக்காய் மரத்தின் அதே அளவுள்ள கிளை ஒன்றை வெட்டி அகற்றி விட்டு அந்த இடத்தில் ஆப்பின் கிளையை வைத்து நன்கு பொருந்துமாறு இணைத்துக் கயிற்றினால் இறுகக் கட்டிவிடுங்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பேரிக்காய் மரத்தோடு ஆப்பிள் கிளை நன் றாக இணைந்து துளிர்த்து வளரும். பழம் கொடுக்கும் காலத்தில் ஆப்பிள் கிளையில் ஆப்பிள் காய்க்கும். மற்றக் கிளைகளில் பேரிக்காய் உண்டாகும். இப்படி ஒரே மரத்தில் இரண்டு வகைப் பழங்களை விளை விக்கலாம். இந்த முறைக்கு ஓட்டு முறை என்று பெயர். புதுவகைத் தாவரங்களைத் தோற்றுவிக் கும் வழிகளில் ஒட்டு முறையும் ஒன்று. தரம் குறைந்த செடி அல்லது மரத்தி லிருந்து தரம் உயர்ந்த பழம் உண்டாக்கு வதற்கு ஒட்டு முறை பயன்படுகிறது. செடிகளையும் மரங்களையும் ஓட்டி வளர்ப் பதற்குப் பல முறைகளைக் கையாள்கிறார் கள். அவற்றுள் சிலவற்றைப் படத்தில் காணலாம். ஒட்டுமுறை எதுவாக இருந்தாலும் ஒட்டிய இடத்தில் களிமண்ணும், சாண மும் கலந்து பூசித் தண்ணீர் தெளித்து வர வேண்டும். ஒட்டுமெழுகு என்ற ஒருவகை மெழுகையும் இதற்குப் பயன்படுத்தலாம். சில சமயங்களில் ஒட்டை இறுகக் கட்ட வேண்டும். இங்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. அதாவது, ஒரே இனத் தாவரங்களைத்தான் ஒட்ட முடியும். ஆப்பிளும் பேரியும் ஒரே இனம். எனவே இவற்றை ஒட்டலாம். ஆனால் ஆப்பிள் மரத்துடன் ஆரஞ்சு மரத்தை ஓட்ட முடியாது. தக்காளியுடன் உருளைக்கிழங்குச் செடியை ஒட்டுவது எளிது. ஆனால் உருளைக் கிழங்குச் செடி யுடன் ரோஜாச் செடியை ஒட்ட முடியாது. ஒட்டு மரங்கள் வேகமாக வளர்கின் றன. விதையிலிருந்து உண்டாகும் மரங் களைவிட இவை விரைவாகப் பழம் கொடுக் கின்றன. எளிதில் நோய் பற்றும் மரங்களை வலுவான மரங்களுடன் ஓட்டிவிட்டால், அவற்றில் நோய் உண்டாவதில்லை. உயர்ந்து வளரும் தாவரங்களைக் குட்டை யான தாவரங்களுடன் ஒட்டிக் குறுகலாக வளரச் செய்யலாம். ஒரு மண்ணில் செழித்து வளராத தாவரத்தை அம்மண் ணில் நன்கு வளரும் அதே இனத் தாவரத் துடன் ஒட்டலாம். பழ மரங்கள் பழங் கொடுக்கும் காலத்தையும், பருவத்தையும் அப்பழங்களின் அளவு, நிறம், ருசி முதலிய பண்புகளையும் இம்முறையால் மாற்றிவிட லாம். இன்று நகரங்களிலுள்ள வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் மாமரங் கன் பெரும்பாலும் இந்த ஒட்டுமுறையில் உண்டாக்கப்பட்டவை தாம். இன்று ஒட்டுமுறை தோட்டக் சுலையில் முக்கிய இடம் பெற்றுள்ளது. ஒரிஸ்ஸா : இந்தியாவின் மாநிலங்களில் ரிஸ்ஸா ஒன்றாகும். இதற்கு வடக்கே பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களும் மேற்கே மத்தியப் பிரதேசமும் தெற்கே ஆந்திரப் பிரதேச மும் உள்ளன. கிழக்கு எல்லை வங்காள ஒட்டுமுறைகளில் சிலவகை