பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓரிஸ்ஸாவில் நெல், கரும்பு, புகையிலை, சோளம், கோதுமை, பருத்தி ஆகியவை விளைகின்றன. இங்கு மூங்கில் காடுகள் அதிகம். இரும்பு, மாங்கனீஸ், சுண்ணாம்பு, நிலக்கரி முதலிய தாதுக்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. ரூர்க் கேலா என்னுமிடத்தில் பெரிய இரும்பு- எஃகு ஆலை உள்ளது. ஒரிஸ்ஸாவின் படத்தை முதல் தொகுதி யில் 84-ஆம் பக்கத்திலுள்ள இந்தியா தேசப்படத்தில் காணலாம். ஓரிஸ்ஸா - ஒலி விரிகுடா. ஒரிஸ்ஸாவின் பரப்பு 1,56,000 சதுரகிலோமீட்டர். இங்குச் சுமார் இரண்டு கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஒரிஸ்ஸாவில் செழிப்பான சமவெளிகள் உள்ளன. இம்மாநிலத்தில் மகாநதி பாய் கிறது. ஆறு பாயும் சமவெளியில் நெல், கரும்பு, புகையிலை, சோளம், கோதுமை, பருத்தி ஆகியவை விளைகின்றன. ஒரிஸ்ஸா வில் மூங்கில் காடுகள் அதிகம். இங்கு மூங்கிலிலிருந்து காகிதம் உற்பத்தி செய் கிறார்கள். இரும்பு, மாங்கனீஸ், கண்ணாம்பு, நிலக்கரி முதலிய தாதுக்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு பல தொழில்கள் நடைபெறு கின்றன. இம்மாநிலத்தில் ரூர்க்கேலா என்ற இடத்தில் இந்துஸ்தான் இரும்பு- எஃகு ஆலை உள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய இரும்பு ஆலைகளுள் இதுவும் ஒன் றாகும். நூற்பாலைகளும், நெசவாலைகளும், சிமென்ட், காகிதம், கண்ணாடி, சர்க்கரை முதலியன உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளும் உள்ளன. கடலிலும் கடற் கரையை ஒட்டியுள்ள சில்கா என்ற ஏரியி லும் மீன் பிடிக்கிறார்கள். ஹீராக்குட் என்னுமிடத்தில் மகாததியின் குறுக்கே ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. இது உலகி லேயே மிக நீளமான அணையாகும். ரிஸ்ஸா மக்களில் பெரும்பாலார் உழவர்கள். மக்கள் பேசும் மொழி ஓரியா இங்குள்ள பெரிய நகரம் கட்டாக் என்பது. இம்மாநிலத்தின் தலைநகரம் புவனேசுவரம், பூரி, புவனேசுவரம் ஆகிய இடங்களி லுள்ள கோயில்கள் புகழ்பெற்றவை. கொனார்க்கா என்னுமிடத்திலுள்ள கோயி லில் உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் பல உள்ளன. 83 ஒலி: காலையில் கோழி கூவுகிறது. கோயில் மணி அடிக்கிறது. தெருவில் செல்லும் மோட்டார் வண்டிகளின் இரைச் சலும் கேட்கிறது. இப்படிப் பலவிதமான ஒலிகளை நாம் நாள்தோறும் கேட்கிறோம். ஒலி எப்படி உண்டாகிறது? ஒரு பொருள் அதிர்வதால் ஒலி உண்டாகிறது. மேசை யைத் தட்டினால் மேசை அதிர்கிறது; அதில் ஒலி உண்டாகிறது. வீணையின் கம் பியை மீட்டினால் அந்தக் கம்பி அதிர் வதைக் காணலாம். நாம் நம் காதினால் ஒலியை உணரு கிறோம். ஒலி நம் காதுக்கு எப்படி எட்டு கிறது என்று பார்ப்போம். ஓர் இடத்தில் எழுப்பப்படும் ஒலி காற்றில் அலை வடிவில் சுற்றிப் பரவுகிறது. குளத்தில் சிறு கல் ஒன்றைப் போட்டால் கல் விழுந்த இடத் தைச் சுற்றி வட்ட வடிவமாக அலைகள் உண்டாகிப் பரவுவதைப் பார்க்கலாம். இதைப்போலத்தான் ஓரிடத்தில் எழுப் பப்படும் ஒலியும் அவ்விடத்திலிருந்து அலை வடிவில் சுற்றிலும் பரவி நம் காதை எட்டு கிறது. காது சில நரம்புகளின் மூலம் ஒலி அலைகளை மூளைக்கு உணர்த்துகிறது. இதைக் காது என்ற தலைப்பிலுள்ள கட் டுரையில் விரிவாகக் காணலாம். நாம் பேசும்போது எவ்வாறு ஒலி உண் டாகிறது? நம் தொண்டையினுள் அடிப் புறத்தில் குரல்வளை என்று ஒன்று உண்டு. நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது குரல்வளை வழியாகத்தான் காற்று உள்ளே செல்கிறது; வெளிவிடும்போது குரல்வளை யின் வழியாகவே வெளியேறுகிறது. குரல் வளையில் குரல்நாண்கள் என்ற இரண்டு மெல்லிய தோல்கள் உள்ளன.' குரல்வளை யின் வழியாகக் காற்று செல்லும்போது குரல் நாண்கள் V வடிவில் விரிந்து கொடுக் கின்றன. நாம் பேசும்போது இந்தக் குரல் நாண்களின் தசைகள் நெகிழ்ந்து விடுகின் றன. நுரையீரல்களிலிருந்து வரும் காற்று குரல் நாண்களை அதிரச் செய்கிறது. குரல் நாண்களின் அதிர்வால் ஒலி பிறக்கிறது. அதிர்வுகளின் தன்மைக்கேற்றவாறு ஒலி யும் வேறுபடும். ஒரு விநாடிக்கு 20க்குக் குறைவான அதிர்வுகள் உள்ள ஒலி நமக் குக் கேட்காது. 20,000 அதிர்வுகளுக்கு மேற்பட்ட ஒலியையும் நம்மால் கேட்க முடியாது. வௌவால்கள் கத்துவதில்லை என்று சிலர் சொல்வர். வௌவால்களும் கத்துகின்றன. அவற்றின் குரல் ஒலியின் அதிர்வுகள் விநாடிக்கு 30,000 முதல் 70,000 வரை இருக்குமாம்! அதனால்தான் நாம் வௌவாலின் குரலைக் கேட்க முடிவ தில்லை. ஒலி அலைகள் பரவுவதற்கு ஓர் ஊடகம் வேண்டும். காற்றிலும், வாயுக்களிலும், திரவங்களிலும், திடப்பொருள்களிலும்