பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒலி

________________

84 ஒலி - ஒலிபரப்புதல் குரல் நாண்கள் 03 மெல்லப் பேசுதல் உரக்கப் பேசுதல் குரல் நாண்கள் குரல்வளை ஒலி பரவும். வெற்றிடத்தில் ஒளி பரவாது. காற்றைவிட நீரில் ஒலி வேகமாகச் செல்லும். காற்றில் ஒலி விநாடிக்கு 330 மீட்டர் தூரம் செல்கிறது. நீரில் இதன் வேகம் விநாடிக்கு 1,450 மீட்டர். கண்ணடி, எஃகு போன்ற திடப்பொருள் களில் ஒலியின் வேகம் மேலும் அதிகம். ஒளியின் வேகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒலியின் வேகம் மிக மிகக் குறைவு. ஒலி விநாடிக்கு 330 மீட்டர் தூரம் செல்கிறதல்லவா? ஆனால் ஒளியோ விநாடிக்கு 3,00,000 கிலோமீட்டர் தூரம் செல்கிறது! இதனால்தான் இடியும் மின்னலும் ஒரே சமயத்தில் ஏற்பட்டா. லும் இடியோசை கேட்கு முன்னரே நாம் மின்னலைப் பார்த்துவிடுகிறோம். தரைமட்டம் எவ்வளவு தொலைவிலுள்ளது என்பதை அறிய எதிரொலி உதவுகிறது. கப்பலின் அடிப்புறத் திலிருந்து ஓர் ஒலியை எழுப்பி, அது பரவிச் சென்று மீண்டும் கப்பலை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது என்று பார்ப்பார்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தில் கடலின் ஆழம் என்னவென்று இம்முறையால் கணக் கிட்டு விடலாம். குரல் நாண்கள் சுவரில் ஒரு பந்தை அடித்தால் அது சுவரில் பட்டுத் திரும்பிவிடுகிறது. இதைப் போலவே ஒலி அலைகளும், அவை செல் லும் திசையில் உயரமான மலைகள் இருந் தால், அவற்றின்மேல் மோதித் திரும்பி விடுகின்றன. இதற்கு எதிரொலி (த.சு.) என்று பெயர். குகைகளிலும், மூடப்பட்ட அறைகளிலும் எதிரொலி உண்டாகும். தரை மட்டத்துக்கு அருகில் கப்பல் சென்றால் அது தரை தட்டி நின்றுவிடும். தரை மட்டம் எவ்வளவு தொலைவிலுள் னது என்பதை அறிய எதிரொலி உதவு கிறது. கப்பலின் அடிப்புறத்திலிருந்து ஓர் ஒலியை எழுப்பி, அது பரவிச்சென்று மீண் டும் கப்பலை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது என்று பார்ப்பார்கள். இதன் மூலம் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கடலின் என்னவென்று கணக்கிட்டுவிட ஆழம் லாம். ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்ற முடியும். இந்த மின்சக்தியை மின்சாரக் கம்பிசுனின் மூலம் நெடுந்தூரம் செலுத்தி அங்கு இந்த மின்சக்தியை மீண்டும் ஒலி அலைகளாக மாற்ற முடியும். நாம் தொலை பேசியில் பேசுவது இப்படித்தான். வானொலிப் பெட்டியில் பல நிகழ்ச்சிகளை யும் நாம் இம்முறையில்தான் கேட்கிறோம். ஒலியைப் பதிவுசெய்து வைத்துக்கொள்ள லாம். அதை விரும்பியபொழுது கேட்க லாம். இதற்குக் கிராமபோன் (த.க.). டேப் ரிக்கார்டர் போன்ற சாதனங்கள் உள்ளன. பார்க்க : எதிரொலி; ஒலிபரப் புதல்: ஒலிபெருக்கி; காது; கிராமபோன்; குரல்; வானொலி. ஒலிபரப்புதல்: வானொலிப் பெட்டி யில் குழந்தைகள் நிகழ்ச்சிகளைக் கேட்டு நீங்கள் இன்புறுகிறீர்கள் அல்லவா? உங்கள் தாயும் தந்தையும் இசை நிகழ்ச்சிகளை

ஒலிபரப்புதல்