பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 6.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரான்ஸ் - பிரிட்டன் களுக்கு முன்பு ரோமானியர்கள் இந்நாட் டைக் கைப்பற்றி ஆண்டனர். பின்னர் பிராங்க்குகள் (Franks) என்போர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். பிராங்க்குகள் வாழும் நாடு பிரான்ஸ் எனப் பெயர் பெற்றது. அரக 18ஆம் நூற்றாண்டின் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சிவரை பல அரசர்கள் ஆண்டனர். புரட்சியின்போது சனை நீக்கிவிட்டு மக்களின் பிரதி நிதிகளே ஆளத் தொடங்கினர். நாடு ஒரு குடியரசாகியது. பிரதிநிதிகளின் தலைவ ராசுப் பதவி ஏற்றவர் நெப்போலியன் (த.க.). நெப்போலியனின் தலைமையில் பிரான்ஸ் மிகுந்த வலிமை பெற்று விளங் கியது. பல நாடுகளையும் இவர் வென்றார். சில ஆண்டுகளில் இவரே பேரரசராகப் பட்டம் குட்டிக்கொண்டார். இவருக்குப் பின்வந்த அரசர்கள் திறமையற்றவர்கள். 1871-ல் நாடு மீண்டும் குடியரசாகியது. கலை, சிற்பம், ஓவியம், பண்பாடு ஆகிய துறைகளில் பிரான்ஸ் சிறப்புமிக்கது. நாடெங்கும் பெரிய கட்டடங்களையும் அழகிய சிற்பங்களையும் காணலாம். ஓவியக் காட்சிசாலைகள் பல உள்ளன. பாரிஸ் நகரில் லூவர் அரண்மனையில் உள்ள கலைப் பொருட்காட்சிசாலை உலகப் புகழ் பெற்றது. ஜீன் கூழான் என்ற பிரெஞ்சுச் சிற்பி வடித்த சிற்பம் 95 பிரெஞ்சுமொழி இனிமையானது; இசை திரம்பியது. இது தெளிவும் சொல் வளமும் பெற்றிருப்பதால் சர்வதேச மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது. வால்ட்டேர், ரூசோ, பால்ஸாக், விக்ட் டர் ஹியூகோ, அலெக்சாண்டர் டூமாஸ், சோலா, மோப்பஸான். ரோமெயின் ரோலந்து முதலியோர் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர்களுள் சிலர். பிரிட்டன், கிரேட் (Great Britain): உலக நாடுகள் பலவற்றில் பேசப்படும் ஆங்கில மொழியின் தாயகம் எது தெரியுமா? கிரேட் பிரிட்டன் ஐரோப் பாக் கண்டத்தின் வடமேற்கில் இந்நாடு இருக்கிறது. இது பல தீவுகளாலாகியது. பெரிய தீவுக்கு கிரேட் பிரிட்டன் என்று பெயர். இதில் இங்கிலாந்து ஸ்காட் லாந்து, வேல்ஸ் என மூன்று பகுதிகள் உள்ளன. இத்தீவுக்கு மேற்கேயுள்ள அயர் லாந்து (த.சு.) தீவின் வட பகுதியும் கிரேட்பிரிட்டனைச் சேர்ந்ததாகும். இவை நான்கும் சேர்ந்து ஐக்கிய அரசாங்கம் (UK-United Kingdom) என அழைக்கப் படுகிறது. இந் நாட்டின் பரப்பு 2 22 லட்சம் சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை சுமார் ஐந்து கோடி. நாட்டின் வடகரையையொட்டி வெப்ப நீரோட்டம் செல்வதால் இங்கு மிதமான தட்ப வெப்பம் நிலவுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது. தேம்ஸ், ஹம்பர்,டீஸ், டைன், டுவீடு முதலியன இங்கு பாயும் முக்கிய ஆறுகள். ' இந்நாட்டின் தலைநகரம் லண்டன். இது உலகின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்று. மிகப் பெரிய துறைமுகமும் இங்கு உள்ளது. பர்மிங்காம், லிவர்ப்பூல், மான்செஸ்ட்டர், ஷெபீல்டு, லீட்ஸ், கிளாஸ்கோ, எடின்பரோ முதலியவை பிற முக்கிய நகரங்கள். கிரேட் பிரிட்டன் வரலாற்றுப் புகழ் கொண்ட ஒரு நாடாகும். கி.மு. 50 முதல் சுமார் 450 ஆண்டுகள் இது ரோமானியர் ஆட்சியின்கீழ் இருந்தது. பிறகு வேறு சில ஐரோப்பியர்களும் பிரிட்டனில் குடியேறி ஆட்சி செலுத்தினர். பிரிட்டனுக்குள் ஒவ்வொரு பகுதியும் பகுதியும் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன. மன்னர்கள் ஆண்டனரெனினும் மக்களாட்சி (Democracy) முறையும் படிப்படியாக வளர்ந்தது. மக்களின் பிரதிநிதிகளடங்கிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. நாளடைவில் அதிக அதிகாரங்களையும் அது பெறலாயிற்று. இவ்வாறு உலகெங் கும் மக்களாட்சிமுறை பரவ வழிகாட்டி யது பிரிட்டனுகும். பலர்