பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 6.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 பிரிட்டன் அட்லாண்டிக் சமுத்திரம் வட M. அயர்லாந்து, "எடின்பரோ கிளாஸ்கோ அயர்லாந்து (ஏரே) ஐரிஷ் கடல் கிரேட் பிரிட்டன் லீட்ஸ் வட கடல் மான்செஸ்ட்டர் வர்பூல் "ஷெபீல்டு. வேல்ஸ் பர்மிங்காம் இங்கிலாந்து தேம் 'லண்டன் கோதுமை பார்லி ஓட்ஸ் பீட் கிழங்கு கால்நடை கம்பளி மீன் நிலக்கரி இரும்பு கப்பல் கட்டுதல் எந்திரங்கள் உருளைக்கிழங்கு இங்கிலீஷ் கால்வாய் வலிமை மிகுந்த கப்பற்படையை அமைத்து உலகின் பல பகுதிகளுடனும் பிரிட்டன் வாணிகம் செய்தது. பிறகு இந்தியா உள்படப் பல நாடுகளை வென்று ஆட்சி செலுத்தி வந்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் 1947-ல் இந்தியா விடுதலை பெற்றது; பிற நாடு களும் விடுதலை அடைந்தன. 18ஆம் நூற்றாண்டிலிருந்தே தொழில் துறையிலும் பிரிட்டன் வளர்ச்சி அடையத் தொடங்கியது. தொழிற் சாலைகள் பெருகின. இவ்வாறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து உலகின் பெரிய வல்லரசாக இது விளங்கு கிறது. பல இது அரசர் அல்லது அரசி ஆளும் ஒரு முடியாட்சி நாடு. எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் உள்ளது. அமைச்சரவையின் ஆலோசனை யின்படி அரசர் ஆட்சி செலுத்துகிறர், சுலை, சிற்பம், ஓவியம் ஆகிய துறைகளி லும் பிரிட்டன் புகழடைந்துள்ளது. ஆங்கிலம் (த.சு.) இந்நாட்டின் மொழி. பிரிட்டனில் கோதுமை, பார்லி, ஓட்ஸ், உருளைக் கிழங்கு, பீட் கிழங்கு முதலியன விளைகின்றன. தொழில் வளர்ச்சி ஏற்படு வதற்கு முன்பு வேளாண் மையே இங்கு முக்கியத் தொழில். இன்று உழவர் களைக் காட்டிலும் தொழி லாளர்களே அதிகம். மக்க ளில் 80% நகரங்களில் வாழ்கின்றனர். பிரிட்ட னில் கால்நடைகள் பெரு மளவில் வளர்க்கப்படுகின் றன. கம்பளி ரோமம் உடைய ஆடுகளும் அதி கம். இந்நாட்டின் மற்றொரு முக்கியத் தொழில் மீன் பிடித்தல் ஆகும். இந்நாட் டில் நிலக்கரி மிகுதியாகக் கிடைக்கிறது. வெள்ளீயம் காரீயம், இரும்பு முதலியன இங்கு கிடைக்கும் தாதுப் பொருள்கள். நிலக்கரியும் இரும்பும். கிடைப்பதால் இரும்பு எஃகுத் தொழில் இங்கு சிறப்பாக நடை பெறுகிறது. பஞ்சு, ரோம ஆடை நெசவு மற்றொரு முக்கியத் தொழில். கப்பல் கட்டும் தொழிலும் சிறந்து விளங்குகிறது. இது உலகெங்கும் வழங்கும் சர்வதேச மொழியாக விளங்குகிறது. ஷேக்ஸ்பியர், மில்ட்டன், வர்ட்ஸ்வொர்த், பைரன், ஷெல்ஸி, கீட்ஸ், டெனிசன், டிக்கென்ஸ், பெர்னார்டு ஷா, கால்ஸ்வொர்தி, சர்ச்சில் முதலிய பிரிட்டிஷ் கவிஞர்களும் எழுத் தாளர்களும் ஆங்கில மொழியை வளர்த் தவர்களுள் முக்கியமானவர்களாவர், லண்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம்