பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 மலை ஏற்றம் மேலும் மேலும் வெளிப்பட்டு இறுகும் போது மலை உயர்கிறது. இதுவே எரிமலை (த.க.) எனப்படும். ஒரு மலை எல்ளிதம் தோன்றியது, எவ்வளவு காலத்திற்கு முன் தோன்றியது என்ற விவரங்களை அம் மலையின் பாறை களைப் பரிசோதித்துப் புவியியல் அறிஞர் கள் கூறிவிடுவார்கள். கடலுக்கு அடியிலும் மலைகள் உள்ளன. சிலவற்றின் மேல் பகுதி கடல் மட்டத் திற்கு மேல் காணப்படும். அவை கூம்பு போலன்றி சமதளமாக உள்ளதால் தீவு கனாக இருக்கின்றன. பசிபிக் சமுத்திரத் திலுள்ள பல தீவுகள் இத்தகைய மலை களின் உச்சிசுளேயாகும். மலை ஏற்றம்: நீங்கள் கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் என்று பலவிதமான விளையாட்டுகளில் பங்கு கொள்கிறீர்கள் அல்லவா? உடஸ்நலத்துடன் வாழ் இது போன்ற விளையாட்டுகளும் உடற்பயிற்சி யும் தேவை. நீந்துவதும் படகு ஓட்டு வதும் நல்ல பொழுதுபோக்கும் உடற் பயிற்சியுமாகும். அதுபோல, மலைமீது ஏறுவதும் உடல்நலத்திற்கு ஏற்றதாகும். பனி மூடிய மிக உயரமான மலைச் சிகரங் களில் ஏறிப் புகழ்பெறுவது மனிதர்களின் நீண்ட கால விருப்பமாக இருந்து வருகிறது. இம்முயற்சியில் பலர் வெற்றி பெற்றுள்ளனர். மிக உயர்ந்த மலைகளின் மீது ஏறுவது எளிய செயல் அல்ல. நடுக் கும் குளிரில், உறைந்த பனிமீது ஏறிச் செல்ல வேண்டியிருக்கும். அப்போது பல நேரிடலாம். திடீரென்று தீங்குகளும் பனிக்கட்டிப்பாறைகள் சமிந்து விழுவ துண்டு. பனிப் புயலும் வீசக் கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக அவ்வளவு உயரத்தில் சுவாசிப்பதற்குப் போதுமான மலையில் ஒரு முகாம் மலை ஏற்றம் ஆக்சிஜன் இருக்காது. இவ்வளவு தொல்லை களையும் சமானித்து மலைமீது ஏறவேண்டு மென்றால் உறுதியான உள்ளமும் திடமான உடலும் தேவை. பட்ட மலை ஏறுபவர்கள் தனியாகச் செல்லுவ தில்லை. ஏழெட்டுப் பேர்களுக்கும் மேற் செல்வர். குழுவினராகவே குளிரைத் தாங்குவதற்கேற்ற உடைகள், வழுக்காத காலணிகள், கண்களுக்குப் பாதுகாப்பான கண்ணாடி முதலியன அணிந்துகொண்டு, கயிறு. பனிப் பாறையை வெட்டிக்கொண்டே மேலே ஏறுவதற்கு உதவும் பனிக்கோடரி, ஆக்சிஜன் பெட்டி முதலிய சாதனங் களுடன் ஏறுவார்கன். மிகுந்த அனுபவம் உள்ளவர் முன்னே சென்று வழிகாட்டு வார். சிகரத்தை அடையப் பல நாட் களாகலாம். உலகிலே மிக உயரமான எவரஸ்ட் (த.க.) சிகரம் மீது ஏறுவதற்குப் பலர் பல முறை முயன்றபோதிலும் 1953-ல் தான் வெற்றிபெற முடிந்தது. டென் சிங் நார்க்கே (Tenzing Narkey) என்ற இந்தியரும், எட்மண் ஹில்லாரி (Edmund Hillary) என்ற நியூ ஜீலாந்து நாட்டினரும் முதன்முதலாகச் சிகர உச்சியை அடைந்த னர். அதற்குப் பின் பல நாடுகளிலிருந்து தனித்தனிக் குழுக்கள் முயன்று எவரஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளன. மலை ஏற்றத்திஸ் பயிற்சி அளிப்பதற் காகப் பல நாடுகளில் தனிப் பள்ளிகள் உள்ளன. இந்தியாவில் டேராடூன் நகரில் மலைஏற்றப் பயிற்சிப் பள்ளி ஒன்று உள்ளது.