பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 பீகார் அடுப்பிலிருந்து எடுத்த பிஸ்கோத்து களைக் குளிரவைத்து. விற்பனைக்கேற்ற வகையில் அட்டைப்பெட்டிகளிலும் தகரப் பெட்டிகளிலும் காற்றுப் புகா தபடி அடுக்கு வார்கள். இன்றைய பிஸ்கோத்துத் தொழிற்சாலைகளில் மாவைப் பிசைவதி லிருந்து பீசா பீகார் மாநிலத்தின் படத்தை முதல் தொகுதியில் 84ஆம் பக்கத்திலுள்ள இந்தியா தேசப்படத்தில் காணலாம் இம்மாநிலத்தின் (த.க.). பிஸ்கோத்துகளை விற்பனைக்கு ஏற்ற விதத்தில் பெட்டிகளில் அடுக்குவது வரை எல்லா வேலைகளும் எந்திரங்களா லேயே நடைபெறுகின்றன. பீகார் : இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மாநிலம் பீகார். கிழக்கில் மேற்கு வங்காளமும் தெற்கில் ஓரிஸ்ஸா வும் மேற்கில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் எல்லை களாக உள்ளன. வடக்கில் நேப்பாள நாடு உள்ளது. பீகார் மாநிலத்தின் பரப்பு 1.73,970 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 5,63,87,300 (1971). இந்தியா வில் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்து அதிக மக்கள்தொகையுள்ள மாநிலம் இதுவே. இம்மாநிலத்தின் முக்கிய மொழி இந்தி, கங்கையும் அதன் துணையாறுகளும் பாய்வதால் பீகார் நீர்வளமும் நிலவளமும் நிறைந்திருக்கிறது. நெல். கோதுமை. சோளம், பார்லி, கரும்பு, பருத்தி, புகை விலை, சணல் முதலியன பயிராகின்றன. மலைப் பகுதியில் தேயிலை விளைகிறது. இம் மாநிலம் கனிவளமும் நிறைந்தது. இந்தி யாவில் இங்குதான் இரும்பும் நிலக்கரியும் பெருமளவில் கிடைக்கின்றன. உலகில் அப்பிரகம் (த.க.) அதிகமாகக் கிடைக்கும் இடங்களுள் இம் மா நிலமும் ஒன்று. பாக் சைட், மக்னீசியம் ஆகிய தாதுப்பொருள் களும் கிடைக்கின்றன. இந்தியாவில் பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழிலில் இம் மாநிலம் முதலிடம் பெறுகிறது. இரும்பும் நிலக்கரியும் கிடைப்பதால் இம் மாநிலத்தில் தொழிற்சாலைகளும். நிறைந்துள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு - எஃகுத் தொழிற்சாலை களுள் ஒன்றான டாட்டா இரும்பு - என்கு நிறுவனம் இம்மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் என்னுமிடத்தில் உள்ளது. இந்திய அரசாங்கம் நிறுவியுள்ள பொக்காரோ இரும்பு எஃகுத் தொழிற்சாலையும் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய உரத் தொழிற்சாலைகளும் ஒன்று பீகாரில் சிந்திரி என்னுமிடத்தில் இருக்கிறது. ரான்ச்சியில் சுனரக எந்திரத் தொழிற்சாலைகள் உள்ளன. பரௌனியில் பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இருக்கிறது. தலைநகர் பாட்னா உள்ள பாட்னா இடத்தில் முற்காலத்தில் பாடலிபுத்திரம் என்னும் நகர் இருந்தது. மௌரியர். சுங்கர், குப்தர் முதலிய பேரரசுகளுக்கு அது தலைநகராக இருந்தது. பாட்னா, கயா இரண்டும் இந்துக்களுக்குப் புண்ணியத் தலங்கள். கயாவிற்கு அருகில் பௌத்தர் களின் புண்ணியத் தலமான புத்த இருக்கிறது. மாங்கீர், முசாபர்பூர், பாகல் பூர், தர்பங்கா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். கயா பீசா (Pisa ) : 'சாய்ந்த கோபுரத்' தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது இத்தாலி நாட்டிலுள்ள பீசா நகரத் தில் உள்ளது. இந்தகரம் ஆர்ஜோ என்ற ஆற்றின் கரையிலிருக்கிறது. இது முற்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியது. இடைக்காலத்தில் குடியரசு ஒன்றின் தலைநகரமாகவும் இருந்தது. பீசா நகரின் வடக்கில் புகழ்பெற்ற சில கட்டடங்களும் கோவில்களும் இருக்கின் றன. இவற்றுள் சாய்ந்த கோபுரம் உலகம் பீசா நகரிலுள்ள சாய்ந்த கோபுரம்