பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பின்லாந்து - பிஸ்கோத்து நூலில், இவர் தாம் கனவு கண்ட இலட் சிய அரசு ஒன்றைச் சித்தரித்துள்ளார். இன்றைய ஐரோப்பியத் தத்துவக் கொள்கைகளில் பெரும்பகுதி பிளேட்டோ வின் போதனைகளின் அடிப்படையில் உருவானதேயாகும். ஐரோப்பிய நாகரிகத் தில் பிளேட்டோவின் கருத்துகள் இடம் பெருத எந்தத் துறையும் இல்லை எனலாம். பின்லாந்து : ஐரோப்பாவின் வட கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு குடியரசு நாடு பின்லாந்து. இந்நாட்டின் பரப்பு 32 லட்சம் சதுர கிலோமீட்டர். ஐரோப்பா வின் பெரிய நாடுகளுள் இதுவும் ஒன்றாயி னும், இங்கு மக்கள்தொகை குறைவு. இங்கு 46 லட்சம் மக்களே வாழ்கின்ற னர். ஹெல்சிங்க்கி (Helsinki) இந்தாட் டின் தலைநகரம். பின்னிஷ் மொழி இந் நாட்டின் முக்கிய மொழி. ஆர்க்டிக் சமுத்திரத்தையொட்டி இருப் பதால் இந்நாட்டில் குளிர் மிகுதி. கோடை யைவிடக் குளிர்காலம் நீண்டது. குளிர் காலத்தில் துறைமுகங்களில் நீர் உறைந்து விடும். கடற்கரை நெடுகிலும் தீவுகள் நிறைந்துள்ளன. இந் தீவுகளின் எண்ணிக்கை சுமார் 8,000. பின்லாந்தில் காடுகள் அதிகம். நாட் டின் பரப்பில் பெரும்பகுதி காடுகளே. இக் காடுகளை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை உள்ளது. பலர் மரம் அறுத்துப் பிழைக்கின்றனர்; மற்றும் பலர் காகிதம், ஒட்டுப்பலகை போன்று மரத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். மரம், மரக்கூழ், காகிதம் ஆகியவை இந்நாட் டின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள். மரவேலை காகிதம் பன்றி வளர்த்தல் ஆடு பால் பண்ணை பின்லாந்து நார்வே பின்லாந்து, ரஷ்யா ஹெல்சிங்க்கி 7 பின்லாத்தில் ஏரிகள் அதிகம். சுமார் 60,000 ஏரிகள் இங்கு உள்ளன! ஏரிகளும் ஆறுகளும் கால்வாய்களினால் இணைக்கப் பட்டுள்ளன. இது உள்நாட்டுப் போக்கு வரத்துக்கு ஒரு சிறந்த நீர்வழியாக அமைந்துள்ளது. காடுகளில் வெட்டப் படும் மரங்களைத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டுசேர்ப்பதற்கும் இந்த நீர்வழி மிகவும் பயன்படுகிறது. இந்நாட்டில் கனிவளம் குறைவு. செம்பு, காரீயம், இரும்பு முதலியவை சிறிதளவு கிடைக்கின்றன. பயிரிடப்படும் நிலப்பரப்பு மிகக் குறைவு. எனினும் பலர் உழவுத்தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். கால்நடை வளர்த்தலும், மீன்பிடித் தலும் மற்ற முக்கியத் தொழில்கள். பால் பண்ணைத் தொழில் சிறந்து விளங்குகிறது. ரெயின்டீர் என்னும் மான்களை வளர்க் கும் லாப் (Lapps) மக்கள், நாட்டின் வட பகுதியில் வாழ்கின்றனர். வகை பீஸ்கோத்து: பிஸ்கோத்து என்றால் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பம். பிஸ்கோத்து செய்யப் பலவிதமான பொருள்கள் தேவை. இவற்றுள் கோதுமை மாவு முதன்மையானது. சில பிஸ்கோத்துகளுக்குக் கோதுமை மாவுடன் ஓட்ஸ், அரிசி, கூவற்கிழங்கு மாவு (Arrowroot ) முதலியவற்றையும் சேர்ப்பார்கள். இனிப்பு பிஸ்கோத்து செய்யச் சர்க்கரையையும், உப்பு பிஸ் கோத்து செய்ய உப்பையும் சேர்ப்பார் கள். வெண்ணெய், முட்டை, உலர்ந்த நிராட்சை, வாதுமைப் பருப்பு, சாக் கலேட், பால்பொடி, தேங்காய், தேன், இஞ்சி, வாசனைப் பொருள்கள் முதலிய வற்றையும் சேர்ப்பதுண்டு. பிஸ்கோத்து செய்வதற்கு வேண்டி பொருள்களையெல்லாம் தக்க அளவில் எடுத்து நன்றாகக் கலக்கிப் பிசைவார்கள். இவ்வாறு கலக்கி கலக்கிப் பிசைந்த மாவை நன்றாகத் தட்டி ஒரே சீராகவும் தட்டை யாகவும் இருக்கும்படிப் பரப்புவார்கள். பிறகு இதைத் தேவையான வடிவங்களில் பிஸ்கோத்துகளாக வெட்டி, நன்கு சூடேறும் விதத்தில் கணப்பு அடுப்பில் வைப்பார்கள். தொழிற்சாலைகளில் செய் யப்படும் பிஸ்கோத்துகளுக்கு, கணப்பு அடுப்பில் வைக்கும் முன்பு முத்திரையிடு வர். முத்திரையீடும்போது பிஸ்கோத்து களில் சிறிய துளைகளையும் இடுவதுண்டு. பிஸ்கோத்துகளைக் கணப்பு அடுப்பில் வைத்து எடுக்கும்போது. அவற்றிலிருக் கும் நீராவி எனிதில் வெளியேற இத்துளை கள் உதவுகின்றன.