பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 பிளேகு - பிளேட்டோ பிளாஸ்ட்டிக் மின்சாரத்தைக் கடத்துவ தில்லை. ஆகவே, மின்சாரக்கம்பியில் இது காப்புறையிடப் பயனாகிறது. கார், விமானம். படது, எந்திரங்கள் ஆகியவற் றின் சில பகுதிகளையும், போட்டோ பிலிம், புருசுகள். செயற்கை இழைகள் முதலிய வற்றையும் பிளாஸ்ட்டிக்கினால் செய்கிறார் கள். பாரஷ ரட் பணப்பை, மூக்குத் கண்ணுடிச் சட்டம் (Frame), இசைக் கருவிகள், இசைத்தட்டுகன், பேனா, பென் சில்கள், வானொலிப் பெட்டிகள், தொலை பேசி உறுப்புகள், விளையாட்டுச் சாமான் கள் போன்றனவும் பிளாஸ்ட்டிக்கினால் தயாரிக்கப்படுகின்றன. பிளேகு (Plague) : சில நோய்கள் உண்டாவதற்குச் சிறு பிராணிகள் காரண மாகின்றன. இவற்றுள் எலிகளால் உண்டாகும் ஒருவகை நோய் பிளேகு ஆகும். இது ஒரு கொடிய நோய். யாக முதலில் இந் நோய் எலிகளைத் தாக்கு கிறது. எலியின் உடலில் ஒட்டுண்ணி (த.க.) வாழும் தெள்ளுப்பூச்சி நோயுற்ற எளியின் இரத்தத்தை உறிஞ்சு கிறது. அப்போது அந்த இரத்தத்தோடு பிளேகு கிருமிகளும் பூச்சியின் உடலுக்குள் செல்லுகின்றன. அங்கு அவை விரைவில் பெருகுகின்றன. இந்த எலி செத்து விழுந்த தும் தெள்ளுப்பூச்சிகள் அதன் உடலி லிருந்து இறங்கி மற்ற எலிகளையும் மனிதர் களையும் கடிக்கின்றன. அதனால் மனிதர் களுக்கும் இந்நோய் உண்டாகின்றது. நோயுற்ற மனிதனுக்குத் திடீரென்று காய்ச்சல் காணும். பின்னர் தொடையில் அல்லது கக்கத்தில் கட்டிகள் உண்டாகும். இரண்டாம் வாரத்தில் இவை சீழ்பிடித்து மரணத்தை உண்டாக்கும். பிளேகு வராமல் தடுக்கத் தடுப்பு ஊசிபோட்டுக் கொள்ளவேண்டும். ஒருமுறை போட்டுக் கொண்டால் ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டு வரை பிளேகு வராமல் தடுக்கலாம். இந்நோய் கண்ட உடனே மருத்து வரிடம் சென் ன்று சிகிச்சை செய்து கொள்ளவேண்டும். நோயாளியைத் தனியே வைப்பது நல்லது. இதனால் மற்ற வர்களுக்குப் பிளேகு தொற்றிக்கொள்ளா மல் தடுக்கலாம். இந்நோய் எலிகளின் வழியாகப் பரவுவதால் எலிகளை ஒழிப்பது அவசியமாகும். எலிகளை பிடிக்கக் கூடு களும் பொறிகளும் உள்ளன. எலிகளுக்கு நச்சுணவு வைத்தும் கொல்லலாம். வனைகளில் புகையடித்தும் எலிகளை அழிக் சுலாம். பிளேகு கீருமிகன் எலிகளைமட்டு மின்றி அணில் முதலிய மற்ற கொறிக் கும் பிராணிகளையும் (த.சு.) தொற்றும். பிளேட்டோ பிளேட்டோ ( Plato, கி.மு. 427- கி.மு.347) : உலகப் புகழ்பெற்ற கிரேக் கச் சிந்தவையாளர்களில் பிளேட்டோ ஒருவர். இவர் சாக்ரட்டீஸ் (த.க.) என்ற கிரேக்க ஞானியின் மாணவர். அரிஸ்டாட் டில் (த.க.) என்னும் கிரேக்க அறிஞருக்கு ஆசிரியர். ஆதன்ஸ் நகரத்தில் ஒரு செல்வக் குடும் பத்தில் பிளேட்டோ பிறந்தார். சிறு யைதிலேயே இசை, கவிதை, ஒலியம், தத்துவம் ஆகியவற்றைக் சுற்றார். இருபதாம் வயதில் இவர் சாக்ரட்டிலின் சீடரானர். அரசியலில் ஈடுபட விரும் பினார். ஆனால், அரசியல் காரணமாகச் சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டதும், இவர் அரசியலை வெறுத்துத் தத்துவத்துறையில் ஈடுபட்டார். .மு.387-ஸ் 'அக்காடமி' என்னும் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இதைத் தத்துவ விசாரணைக்கும், விஞ்ஞான ஆராய்ச்சிக்குமான ஒரு நிலைய மாக வளர்த்தார். இங்கு அரிஸ்டாட்டில் போன்ற சிறந்த சிந்தனையாளர்களை உருவாக்கினார். பல பிளேட்டோ சிறந்த தத்துவஞானியாக வும் கவிஞராகவும் விளங்கினர். நூல்களை எழுதினர். அவை பெரும்பாலும் உரையாடல்களாக அமைந்துள்ளன. இவற்றில், தம் தத்துவக் கருத்துகளைச் சாக்ரட்டீஸ் கூறுவதுபோல் வெளி யிட்டுள்ளார். உளவியல். கல்வி, அரசியல் பற்றியும் இவற்றில் ஆராய்ந்துள்ளார். குடியரசு என்னும் உரையாடல்