பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிளாஸ்ட்டிக் தங்கம் கலந்த பிளாட்டினத்தை வெண் தங்கம் என அழைக்கிறார்கள். பிளாட் டினம் மற்ற உலோகங்களுடன் எளிதில் சேர்ந்து பயன்மிக்க உலோகக் கலவைகள் (த.க.) ஆகிறது. பிளாட்டினமும் இரிடிய மும் சேர்ந்த உலோகக் கலவை துல்லிய மான எடைக்கற்களையும், பேனா முள்ளின் முனைகளையும், ஒரு சில ரண சிகிச்சைக் கருவிகளையும் தயாரிக்கப் பயன்படுகிறது. ரஷ்யாவிலும் கானடாவிலும் பிளாட் டினம் கிடைக்கிறது. பல்லேடியம், ரோடி யம், இரிடியம், ஆஸ்மியம், ருதீனியம் முதலிய உலோகங்களுடன் கலந்து காணப் படுகிறது பிளாட்டினம். இந்த உலோகங் களுக்குப் 'பிளாட்டின உலோகங்கள்' என்று பெயர். பினாட்டினத்தின் பண்பு களில் பலவற்றை இவையும் கொண்டிருக் கின்றன. பிளாஸ்ட்டிக் இன்று பிளாஸ்ட்டிக் கினால் செய்த பல பொருள்களை நாம் பயன்படுத்துகிறோம். தட்டு, குவள்ை, வாளி, கரண்டி, கத்தி, கதவுக் கைப்பிடி, பொம்மை, பித்தான், சீப்பு, மேசை விரிப்பு இப்படி எத்தனையோ பொருள்கள் பிளாஸ்ட்டிக்கினால் செய்யப்படுகின்றன. பஞ்சு, நீர், மரத்தூள். சுண்ணாம்புக்கல், கரித்தார் (Coal tar) ஆகியவற்றைக் கொண்டு ரசாயன முறையில் தயாரிக்கப் படும் ஒரு பொருள் பிளாஸ்ட்டிக் ஆகும். முதன் முதலாகத் தயாரான பிளாஸ்ட் டிக் செலுலாய்டு (Celluloid) என்பதாகும். இது, பருத்தி இழைகள். கர்ப்பூரம், நைட் ரிக அமிலம் இவற்றைக் கொண்டு 1869-ல். 5 தயாரிக்கப்பட்டது. இது தந்தம், எலும்பு: கடின ரப்பர், கண்ணடி இவற்றுக்குப் பதிலாகப் பயன்பட்டது. பின்னர் 1909-ல் பேக்கலைட் (Bakelite) என்ற ஒரு வகைப் பிளாஸ்ட்டிக் தயாராகியது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது இன்னும் பலவளகப் பினாஸ்ட்டிக்குகளைச் செய்தார்கள். எல்லாப் பிளாஸ்ட்டிக்குகளையும் இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். பேக்க லைட் போன்ற லெ பிளாஸ்ட்டிக்குகளைக் கடினமாக்குவதற்கு, அவற்றைச் சூடாக்க வேண்டும். இதில் உருவாக்கிய பொருள் களை மீண்டும் இளக்கவோ, வேறு பொருள் களாகச் செய்யவோ இயலாது. பாலித் தீன் (Polythene) போன்ற வேறு சில வகைப் பிளாஸ்ட்டிக்குகளை, வார்ப்படம் செய் வதற்கு ஏற்ற அளவு சூடாக்கி, பின் அவற் றைக் கடினமாக்குவதற்கு மீண்டும் குளிர வைக்கவேண்டும். இந்த வகையில் உருவான பொருள்களை மீண்டும் இனக்கி வேறு பொருள்களாகத் தயாரிக்கலாம். இதை மீண்டும் மீண்டும் சூடாக்கி மென் மையாக்கலாம். பிளாஸ்ட்டிக் மலிவானது. எளிதில் சுத்தப்படுத்தி வைக்கக்கூடியது. எனவே, மரம், தோல், கண்ணாடி, துணி. உலோகம். தந்தம், ரப்பர் முதலிய வற்றுக்குப் பதிலாகப் பல வழிகளில் இது பயன்படுகிறது. சில வகைப் பிளாஸ்ட்டிக்குகள் ரசாயனப் பொருள் களால் பாதிக்கப்படுவதில்லை. அதனால், அவை பல பரிசோதனைச் சாலைகளில் பொருள்களைச் செய்யப் பயன்படுகின்றன. பிளாஸ்ட்டிக் பொருள்கள் சில