பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிலாய் பிளாட்டினம் பிலாய்: இந்தியாவின் தொழில் நகரங்களுள் ஒன்று பிலாய். இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிருவாகத்திலுள்ள இரும்பு. எஃகுத் தொழிற்சாலைகளுள் ஒன்று இங்கு இருக்கிறது. இந்தத் தொழிற் சாலை ரஷ்யாவின் உதவியுடன் தொடங் கப்பெற்றதாகும். இங்குள்ள ரெயில் தண்டவாள உற்பத்தி உற்பத்தி ஆலை உலகின் மிகப் பெரிய ஆலைகளுள் ஒன்று. மற்றும் பலவகையான இரும்பு, எஃகு சாதனங் களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. பிலிப்பீன் தீவுகள் (Philippines) : ஆசி யாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆயிரக் கணக்கான தீவுகளடங்கிய ஒரு கூட்டத் திற்கே பிலிப்பீன் என்று பெயர்.இந்நாட் டில் சிறிதும் பெரிதுமாக சுமார் 7,000 தீவு கள் அடங்கியுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பு சுமார் மூன்று லட்சம் சதுர கிலோ இவற்றுள் தீவுகளே பெரியவை. சிறு தீவுகள் பலவற்றில் மக்களே வாழ்வதில்லை. பெரும்பாலான மக்கள் லூசான், மிண்டனாவோ என்ற இரு தீவுகளில் தான் வாழ்கின்றனர். நாட் டின் மக்கள்தொகை சுமார் 2 கோடி. மீட்டர். I 1 எரி கடலுக்கு அடியிலுள்ள மலைத்தொட ரின் முகடுகளே தீர்மட்டத்திற்கு மேலே தோன்றித் தீவுகளாகிவிட்டன. மலைகளிலிருந்து வெளிப்பட்ட குழம்பு, பல தீவுகளிலும் படர்ந்துள்ளது. பருவக் காற்றுகள் வீசும் பகுதியிலிருப்பதால் இந் நாட்டில் மழை அதிகம். புயலும் அடிக்கடி வீசுவதுண்டு இந்நாட்டில் காடுகள் அதிகம். நெல், கரும்பு சோளம், காப்பி, புகையிலை, அன்னாசிப்பழம் முதலியவை பெருமளவில் இங்கு பயிராகின்றன. தீவுகள் எங்கும் கொப்பரைத் தேங்காய்கள் விளைகின்றன. தங்கம், இரும்பு. நிலக்கரி ஆகியவை இங்கு கிடைக்கும் கனிவளங்கள். மக்களுள் பெரும்பாலோர் கத்தோலிக் கக் கிறிஸ்தவர்கள். 80க்கும் மேற்பட்ட மொழிகள் இங்கு வழங்குகின்றன. எனினும் டகலாக் என்பதே தேசீய மொழி. ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளும் வழக்கில் உள்ளன. மணிலா இந்நாட்டின் மிகப் பெரிய நகரம். இதுவே முன்பு தலைநகராக இருந்தது. இப்போதைய தலைநகரம் மணிலா அருகி லுள்ள கியூஸான் சிட்டி (Quezon City ) ஆகும்: 16ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில் ஸ்பானியர்கள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியேறினர். 1898-ல் ஸ்பெயினுக்கும் அமெரிக்காவுக்குமிடையே நடந்த போருக் தென் சீனக் கடல் லூசான் கியூஸான் சிட்டி மணிலா பிலிப்பீன் தீவுகள் பிலிப்பீன் தீவுகள்

    • சமுத்திர

மிண்டனவோ குப் பின் இந்நாடு அமெரிக்கர்களின் வசமாகியது. 1946-ல் இது விடுதலை பெற் நுக் குடியரசாகியது. பிளாட்டினம் (Platinum) : தங்கத் தைவிட மூன்று மடங்கு விலையுயர்ந்த ஓர் உலோகம் பிளாட்டினம். வெள்ளி போன்று வெள்ளைநிறம் கொண்ட பிளாட் டினம் ஒரு தனிமம் (த.க.). இது நீரின் எடையைப் போல 21 மடங்கு எடையுள் ளது. பிளாட்டினத்தை மெல்லிய தகடு களாக அடிக்கலாம்; கம்பிகளாக நீட்ட லாம். இதில் துருப்பிடிக்காது. அமி லங்கள் முதலிய ரசாயனப் பொருள்களால் பிளாட்டினம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நைட்ரிக் அமிலமும் ஹைடிரோ குளோரிக அமிலமும் சேர்ந்த ராஜத் திரவம் (Aqua regia) என்னும் கவலையில் பினாட்டினம் கரையும். 1773. வெப்பநிலையில்தான் பிளாட்டினம் உருகத் தொடங்குகிறது; இக்காரணங்களால் பிளாட்டினம் ரசாயனச் சோதனைகள் பலவற்றிலும், மின்சார சாதனங்களிலும் பெரிதும் பயன் படுகிறது. மின்சார பல்புகளிலும் வானொலி வாய்வுகளிலும் பிளாட்டினம் சும்பிகள் பயனாகின்றன. பிளாட்டினம் மங்குவதேயில்லை. அழகிய நகைகள் செய்யப் பிளாட்டினம் பயன்படுகிறது. வெளிநாடுகளில் சிறிது