பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புலாலுண்ணிகள் -புலாலுண்ணித் தாவரங்கள் யடைந்த பிறகு, புழு பூச்சிகளை மட்டுமே தின்னும். மீன்களில் சுறாமீன் புலாலுண்ணி யாகும். இது பொரும்பாலும் சிறு மீன் களைப் பிடித்து உண்ணும், வேறு பிராணி கள் சிக்கினால் அவற்றையும் விழுங்கிளிடும். வேறு சில மீன்களும், சிறு மீன்களை மட்டுமே நின்று வாழ்கின்றன. கருளிலுங்கி என்னும் மீன் தன்னைவிடப் பெரிய மீனையும் நின்றுவீடும்! நீர்நாய், சீல் போன்றவையும் மீன்களை உண்டு வாழ் கின்றன. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, தேரை, தவளை, மீன்கள் யாவும் முதுகெலும்பு உள்ள பிராணிகள். முதுகெலும்பு இல்லாத பிராணிகளிலும் பல புலாலுண்ணிகள் உண்டு. இவற்றுள் சில பூச்சிகளாகும். ஈப்புலி (Praying Mantis) என்ற பூச்சி இவற்றுள் முக்கியமானது. சிலந்திகள் யாவும் புலாலுண்ணிகளே. இவை தம் வலைகளில் சிக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்கின்றன. முதுகெலும் பில்லாத நட்சத்திரமீன் சிப்பிகத் நின்னும். எண்காலீ (Octopus) என்ற சுடல்பிராணி நண்டுகளை உண்ணும். புலாலுண்ணிகள் சில 19 மனிதரிலும் சிலர் இறைச்சியை உண்கின்றனர். ஆனால் மனிதர் புலாலுண் ணிகள் அல்லர். ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் தாவர உணவுகளையே உண்கின்றனர். தாவர உணவையும் இறைச்சியையும் உண்ணும் உயிரினங் களைத் தாவரம் புலாலுண்ணிகள் (Omnivores) என்பர். புலாலுண்ணித் தாவரங்கள் (Carmi- vorous plants) : பொதுவாகத் தாவரங்கள் நிலத்திலிருந்து கிடைக்கும் நீர், உப்புப் பொருள்கள், காற்றிலிருந்து கிடைக்கும் கார்பன் டையாக்சைடு இவற்றைக் கொண்டுத் தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக்கொள்கின்றன. உயிரினங்களை உண்டு வாழும் சில தாவரங் களும் உள்ளன என்று சொன்னால் வியப் இருக்கிறதல்லவா? ஆம். பாக சில தாவரங்கள் உணவு தயாரித்துக்கொள்வ துடன் சிறு புழுபூச்சிகளையும் உட்கொள் கின்றன. இவை புலாலுண்ணித் தாவ ரங்கள் எனப்படும். எல்லா புலாலுண்ணித் தாவரங்கள் இடங்களிலும் காணப்படுவதில்லை, நைட் ரஜன் குறைவாக உள்ள பகுதிகளில், அதாவது சதுப்பு நிலம், சேற்று நிலம், முட்புதர்க்காடுகள் போன்ற இடங்களில் இவை பெருமளவில் காணப்படுகின்றன. தாமே தயாரிக்கும் உணவு இவற்றுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே இவை புழு பூச்சிகளை உண்கின்றன. புலாலுண்ணித் தாவரங்களில் சுமார் 500 வகைகள் உண்டு. பூச்சிகளைப் பிடிப் பதற்கு ஏற்றவாறு இவற்றில் பலவித அமைப்புகள் உள்ளன. சில செடிகளின் இலைகளிலுள்ள நுண்ணிய மயிர்களில் ஒரு வகைப் பசை சுரந்துகொண்டிருக்கும். இலையின் மேல் வந்து உட்காரும் பூச்சிகன் அந்தப் பசையில் ஒட்டிக்கொள்ளும். அப்போது இலையில் உண்டாகும் வகைச் சீரண நீர் பூச்சியைச் சீரணித்து விடும். பனிச்செடி (Sundew plants) போன்ற தாவரங்கள் இவ்வகை அமைப்புடையவை. நெப்பெந்த்திஸ். சாரசீனியா, ஒரு போன்ற சாடிச்செடிகளின் (Pitcher plants ) இலைகள் சர்டியைப்போல் அமைந்திருக் கும். இச் சாடியின் அடியில் சிறிது நீர் தேங்கி நிற்கும். இலைகளில் உட்காரும் பூச்சிகள் இந்த நீரில் மூழ்கிவிடும். மூழ்கிய பூச்சிகள் வெளியேற முடியாதபடி, முள் போன்ற மயிர்கள் தடுத்துவிடுகின்றன. இப்பூச்சிகள் இறந்து அழுகும்போது உண்டாகும் பொருள்களை அச்செடிகள் உறிஞ்சிக்கொள்ளும்.