பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இளவேனில் காலம் பூமி - பூரான் மார்ச் 21ஆம் நாள் குளிர் காலம் ஜூன் 21ஆம் நாள் சூரியன் டிசம்பர் 22ஆம் நாள் செப்டெம்பர் 23ஆம் நாள் 35 கோடை காலம் இலையுதிர் காலம் பூமி நேர்குத்தாக இல்லாமல், 234' சாய்வான நிலையில் சுழன்று, சூரியனைச் சுற்றிவருகிறது. இந்தச் சாய்வினால்தான் உலகில் பருவங்கள் மாறிமாறி வருகின்றன. பூமியின் வட பாதியில் வெவ்வேறு காலத்தில் ஏற்படும் பருவ மாறுதல்களை இந்தப் படம் காட்டுகிறது. மற்றக் கிரகங்களின் உள்ளமைப்பைப் பற்றி நாம் அறியமுடியவில்லை. பூமியின் உள்ளமைப்பு பற்றிய பல உண்மைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். பூமியின் மேற்பகுதியான புறணி (Crust) குறைந்தது 30 கி.மீ. கனமுள்ளது. இது பல வகைப் பாறைகளாலும், அவை நொறுங்கி உண்டான மணல், மண் முதலியவற்றா லும் ஆனது. புறணியின் அடியிலுள்ள மற்றொரு பகுதி 2,800 கிலோமீட்டர் கனமுள்ளது. இது இறுகிய பாறைகளால் ஆனது. இதற்கும் கீழே உள்ள பூமியின் மையப்பகுதியை இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கலாம். மேலே உள்ள முதல் அடுக் இல் பாறைகள் உருகிய நிலையில் உள்ளன. இதற்கும் கீழே பூமியின் நடு மையத்தில் சுமார் 1,280 கிலோமீட்டர் கனத்திற்கு நிக்கல், இரும்பு ஆகிய உலோகங்களா லான உருண்டையான கடினமான பகுதி உள்ளது என்றும், இந்த உலோகங்கள் மிகுந்த வெப்பத்திற்கும், அழுத்தத்திற் கும் உட்பட்டிருப்பதால் இப்பகுதி மிகவும் கெட்டியாக இருக்கவேண்டும். என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பூமி எவ்வாறு உண்டாயிற்று என்பது பற்றிப் பல கருத்துகள் உள்ளன. இவற் றுள் முக்கியமான இரண்டைக் குறிப்பிட லாம். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நட்சத்திரமொன்று சூரியன் அருகில் வந்து கடந்துசென்றதாம். அப்பொழுது அதன் ஈர்ப்பு சக்தியால் சூரியன் பாதிக்கப் பட்டது. சூரியனிலிருந்து வெப்பம் மிகுந்த வாயுப்பகுதியொன்று நீள்வடிவம் பெற் றுப் பிரிந்து சென்றது. பின்னர் சிறிதும் பெரிதுமான பகுதிகளாகப் பிரிந்து, குளிர்ச்சியடைந்து இறுகி வெவ் அது வேறு கிரகங்கள் உண்டாயின. பூமியின் தோற்றத்தைப் பற்றி இது ஒரு கருத்து. மற்றொரு கருத்து, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் விண்வெளியில் ஒரு பெரும்பரப்பில் தீப் பிழம்பான வாயுவும் துகன்களும் சுழன்று கொண்டிருந்தன வாம். ஓடும் வெள்ளத்தில் உண்டாகும் சுழிகள் போன்று, இப்பரப்பில் ஆங்காங்கே சுழிகள் உண்டாயின. பின்னர் இச்சுழிகள் ஈர்ப்பு சக்தியால் அவற்றைச் சுற்றியுள்ள வாயுவையும் துகள்களையும் கவர்ந்து திரண்டு வெவ்வேறு கிரகங்களாயின. இவற்றில் ஒன்று நமது பூமி. இப்பெரும் பரப்பின் மத்தியில் சூரியன் அமைத்து சுழன்று கொண்டிருக்கிறது. இக்கருத்தும் முடிந்த முடிவாகாது. இன்னும் விஞ்ஞானி கள் இதுபற்றி ஆராய்ந்து வருகிறார்கள். கிரகங்கள்; பருவங்கள்: பிர பார்க்க : பஞ்சம். பூரான் (Centipede) : தோட்டத்தில் கற்களை நகர்த்தும்போது அடியி லிருந்து வெளிவரும் பூரானை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உயிரினங்களில் கணுக் காலிகள் (த.க.) என்னும் தொகுதியைச் சேர்ந்தது பூரான். இது உலகெங்கும் காணப்படுகிறது. உடலில் பல பூரான்களில் சில ஆறு மில்லிமீட்டருக் கும் சிறியவை. சில முப்பது சென்டிமீட் டர் வரை நீளமிருக்கும். பூரானின் உடல் தட்டையாக இருக்கும். வளையங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந் துள்ளன. தலையும், அதில் இரண்டு உணர் இழைகளும் காணப்படும். ஒவ்வொரு வளையத்திலும் இரண்டு கால்கள் உள்ளன. உடலின் முதல் வளையப் பகுதியில் உள்ள