பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொம்மலாட்டம் 51 களிலும் பொதுவுடைமை ஆட்சி ஏற்பட் டது. பார்க்க : சோஷலிசம். பொம்மலாட்டம்: பொம்மலாட்டம் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கு மல்லவா? நீங்கள் மட்டுமல்ல, பெரியவர் களும் இதைக் கண்டு மகிழ்கிறர்கள். பொம்மைகளே நாடகப் பாத்திரங்களாக வந்து இதில் நடிக்கின்றன. மறைவில் இருந்துகொண்டு அந்தப் பொம்மைகளை நடிக்கும்படி மெல்லிய கயிறுகளைக் கொண்டு ஆட்டுகிறார்கள்! இதைப் 'பாவைக் கூத்து' என்றும் சொல்வார்கள். இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் நீண்ட காலமாகவே இது ஒரு கலையாக இருந்து வருகிறது. கி.மு. 3.ஆம் நூற்றாண் டில் ஒரேக்க நாட்டிலும் கி.பி. 100-ல் இத்தாலியிலும் பொம்மலாட்டம் நடந்த தாகத் தெரிகிறது. பின்னர் காலப் போக்கில் இது மிகவும் வளர்ச்சியடைத் துள்ளது. இந்தியாவில் புராணக் கதைகளின் பாத்திரங்களைப் பொம்மைகளாக உருவாக் கித் தக்கவாறு அலங்கரித்து கை, கால் முதலிய உறுப்புகளைக் கயிறுகளால் பிணைத் திருப்பார்கள். இக்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் திரைக்கு மேலே இருந்து கொண்டு பொம்மைகளை ஆட்டிவைப்பார் கள். பொம்மைகளைப் பெரும்பாலும் மரத்தினாலும் துணியினாலும் செய்து வர்ணம் பூசியிருப்பார்கள். பொம்மலாட்டத்தில் ஒரு காட்சி பொம்மைகளை இயக்குவதற்குப் பயிற்சி பெறுகிறார்கள்