பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 பொதுவுடைமை தன்மைகளைக் கொண்டது. ஆனால் இது சோடியத்தைவிட அதிக வினைத்திறன் கொண்டது. காற்று, ஈரம் இவற்றுடன் எளிதில் வினைப்படுவதால் பொட்டா சியத்தை எப்போதும் மண்ணெண் ணெயிலேயே வைத்திருப்பார்கள். பொட்டாசியம் தனியே கிடைப்ப தில்லை. மற்ற தனிமங்களுடன் சேர்ந்தே கிடைக்கிறது. பெல்ஸ்ப்பார் (Felspar) எனும் பாறைகளிலும், கடல், ஏரி முதலிய நீர்நிலைகளில் கரைந்தும் பொட்டாசியம் காணப்படுகிறது. மின்பகுப்பு (Electrolysis, த.க.) மூலம் பொட்டாசியத்தைத் தனியே பிரித்தெடுப் பார்கள். பொட்டாசியத்தின் கூட்டுப் பொருள்களைப் பற்றிப் பழங்காலத் திலேயே மக்கள் அறிந்திருந்தார்கள். எனினும் 1808-ல்தான் முதன்முதலாக டேவி (த.க.) என்னும் ஆங்கில விஞ்ஞாளி மின்பகுப்பு முறையால் பொட்டாசியத் தைத் தனியே பிரித்தெடுத்தார். பொட்டாசியம் தனிநிலையில் அவ்வள வாகப் பயன்படுவதில்லை. ஆனால் பொட்டா சியம் அடங்கிய கூட்டுப் பொருள்கள் பல வழிகளில் பயனாகின்றன. பொட்டா சியம் குளோரைடைக் கொண்டு வேறு பல பொட்டாசியம் கூட்டுப் பொருள் களைத் தயாரிக்கலாம். பொட்டாசியம் பெர்மாங்கனேட் ரசாயனப் பரிசோதனை களில் பயன்படுகிறது. பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைட் இவற்றைக்கொண்டு வெடிமருந்து, நீக்குச்சி. பட்டாசு முதலியவை செய்கிறார் கள். பொட்டாசியம் அயோடைடும், பொட்டாசியம் புரோமைடும் மருந்து தயாரிப்பதிலும் போட்டோத் தொழிலி லும் பயனாகின்றன. பொட்டாசியம் கார்பனேட்டைக்கொண்டு கண்ணாடி, சோப்பு முதலியன செய்யலாம். பொட்டா சியம் சல்பேட் உரமாகப் பயன்படுகின்றது. பொட்டாசியம் டைக்ரோமேட் ரசாய னப் பரிசோதனைகளில் உதவுகிறது. மேலும் இது தோல் பதனிடவும், உலோகங்களுக் குப் பளபளப்பான குரோமியப் பூச்சு கொடுக்கவும், சாயமேற்றவும் பயன்படு கிறது. பொட்டாசியம் சயனைடு நச்சு மிருந்தது. இது பூச்சி கொல்லியாக இருப் பதோடு, போட்டோத் தொழிலிலும் தங்கம், வெள்ளி உலோகவேலைக் கலையி லும் பயன்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பொட் டாசியம் பெருமணவில் கிடைக்கிறது. பொதுவுடைமை (Communism) : உல் கில் இன்று நிலவும் பொருளாதாரக் கோட்பாடுகளில் ஒன்று பொதுவுடைமை யாகும். ஒரு நாட்டின் உற்பத்தி சாதனங் கள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமாக இருக்கவேண்டும் என்ற கொள்கைக்குப் பொதுவுடைமை என்று பெயர். இக் கோட் பாட்டின் அடிப்படையில் அமைந்த ஆட்சி யைப் பொதுவுடைமை ஆட்சி என்பர். பொதுவுடைமை ஆட்சியில் நாட்டின் சாகுபடி நிலங்கள் யாவும் அரசுக்குச் சொந்தமாகும். காடுகள், இயற்கை வளங் கள் அனைத்தும் நாட்டின் பொதுவுடைமை யாகும். ஆலைகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து, சுரங்கம் முதலிய எல்லாத் தொழில்களும் அரசாங்கத்தினால் நிருவகிக் கப்படும். அப்போது ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல், எல்லோரும் சமம் என்ற சமதர்ம சமுதாயம் உருவாகும். இச் சமுதாயத் தில், ஒவ்வொரு மனிதனும் தன்னல் இயன்ற அளவு உழைக்கவேண்டும். ஒவ்வொருவரும் தன் தேவையை நிறை வேற்றிக்கொள்வதற்குப் போதுமான பொருள்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய சமுதாயத்தில் மனிதனை மனிதன் ஆளும் முறை இருக் காது. சமூக அமைப்பே அரசாங்கமாக இருந்துவரும். இந்தக் குறிக்கோளை அடைய யும்வரை இடைக்கால ஏற்பாடாகத் தொழிலாளர்களின் சர்வாதிகார ஆட்சி (Proletarian Dictatorship) நடைபெற்றுவரும். இவ்விடைக்கால ஆட்சியைச் 'சோஷலிச ஆட்சி' என்றும் கூறுவர். நவீன பொதுவுடைமைக் கொள்கை யின் தந்தை எனக் கருதப்படுபவர் கார்ல் மார்க்ஸ் (Karl Marx) என்னும் ஜெர்மானிய ராவார். அவர் தம் நண்பர் பிரடரிக் எங்கெல்ஸ் (Friedrich Engels) என்பவரோடு சேர்ந்து 1848-ல் பொதுவுடைமைக் கொள்கை அறிக்கை'யை வெளியிட்டார். இதில் பொதுவுடைமைத் தத்துவங்கள் விளக்கப்பட்டிருந்தன. முதன் முதலாகப் பொதுவுடைமைக் கொள்கையைக் கையாண்ட நாடு ரஷ்யாவாகும். அங்கு 1917 நவம்பரில் லெனின் (த.க.) தலைமையில் புரட்சி ஏற்பட்டது. அப்போது முடியாட்சி ஒழிக்கப்பட்டு, தொழிலாளர்களின் ஆட்சி தொடங் கியது. லெனின் ஆட்சித் தலைவராகி அங்குப் பொதுவுடைமை ஆட்சியை அமைத்தார். இரண்டாம் உலக யுத்தத் திற்குப் பிறகு, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, பல்கேரியா, ருமேனியா, ஆல்பேனியா ஆகிய நாடு களிலும், பின்னர் சீனா, வட கொரியா, வட வியட்நாம், கியூபா முதலிய நாடு