பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொங்கல் - பொட்டாசியம் வண்ணந் தீட்டி வீட்டை அழகுற விளங் கச்செய்கிறீர்கள். இது பழமையைப் போக் கிப் புதுமையைப் புகுத்தும் விழாவாகும். போக்கிப் பண்டிகை என்பது போகிப் பண்டிகை என மருவியதாகக் கூறுவார் கள். தை முதல் நாளன்று புத்தாடை அணிந்து வீடெங்கும் மாக் கோலமிட்டு புதிய பானைக்குக் கோலமிட்டு, அதில் மஞ்சள்கொத்துக் கட்டி, புதிய நெல்லைக் குத்திக் கிடைத்த பச்சரிசியை அதிலிட்டு முற்றத்தில் பொங்கல் இடுவார்கள். பானை யில் பொங்கல் பொங்கும்போது "பொங் கலோ பொங்கல்" என்று அனைவரும் உரக்க ஒளி எழுப்பி மகிழ்வார்கள். பின்னர் வாழையிலையில் பூசனிக்காய், வள்ளிக் கிழங்கு மற்றும் காய்கறிகள், பழங்கள், கரும்பு, பொங்கலிட்ட அமுது முதலியன படைத்துச் சூரியனை வழிபடு வார்கள். மாட்டுப் பொங்கலன்று. உழவனுக்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு விழாக் கொண்டாடுகின்றனர். மாடுகளைக் குளிப் பாட்டிக் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி நெற்றியில் குங்குமம் இட்டுக் கழுத்தில் மஞ்சள், கரும்பு முதலியவற்றைக் கட்டி அலங்கரிப்பர். பொங்கலீட்ட அமுதை மாடுகளுக்குப் படைத்து மகிழ்வார்கள். தை மூன்றாம் நாள் நடைபெறும் விழா 'கன்னிப் பொங்கல்' என்றும், 'காணும் பொங்கல்' என்றும் இடத்திற்குக் தக்க வாறு வழங்குகிறது. திருமணமாகாத மகளிர் அன்று பொங்கலிட்டு ஆடிப்பாடி விழாக் கொண்டாடுவார்கள். அன்று பொங்கல் இடுதல் 49 மாட்டுப் பொங்கல் மக்கள் ஒருவரையொருவர் கண்டு மகிழ் வதுடன் பெரியோர்களை வணங்கி வாழ்த் துப் பெறுவார்கள். சில ஊர்களில் கன்னிப் பொங்கலுடன் மஞ்சிவிரட்டு' என்னும் விளையாட்டு நடைபெறுகிறது. கட்டுக்கடங்காமல் பாய்ந்து செல்லும் காளையை அடக்கிய வீரனுக்குக் கன்னி ஒருத்தியை மணம் செய்து கொடுக்கும் பண்டைய வழக் கத்தை நினைவுபடுத்துவது இது. உலகில் பெரும்பாலான நாடுகளில் உழவர்கள் அறுவடையைக் கொண்டாடு கிறார்கள். அதைப் போன்றதே பொங் கல் விழா. நெடுங்காலமாகத் தமிழ் நாடெங்கும் சிறப்பான முறையில் இன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கும்மி, கோலாட்டம் முதலிய கேளிக்கை களும் அன்று நடைபெறும். பொட்டாசியம்: தண்ணீர் தீப்பற்றி எரியும் விந்தையைப் பார்த்திருக்கிறீர் கனா? சிறிதளவு பொட்டாசியத்தை நீரில் போட்டால் அது நீருடன் உடனே வினைப்பட்டுப் பெருமளவு வெப்பத்தை உண்டாக்கும். நீரிலுள்ள ஹைடிரஜன் பிரித்து வெளியாகும். அதிக வெப்பத் தினால் இந்த ஹடிரஜன் தீப்பற்றி எரியும். கார பொட்டாசியம் ஒரு தனிமம் (த.சு.). உலோகங்களில் இதுவும் ஒன்று (பார்க்க : அமிலங்களும் காரங்களும்). இது வெள்ளிபோல வெள்ளையாக இருக் கும்; மென்மையானது; நீரைவிட இலேசானது; அதனால் இது நீரில் மிதக் கும். பெரும்பாலும் சோடியத்தின் (த.க.)