பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 இறகுப் பேனா ஊற்றுப் பேனா பைபிள் - பொங்கல் விழா கட்டைப் பேனா குண்டுமுனைப் பேனா உமிழி கழுத்து குழாய் மூடி குண்டுமுனைப் பேனாவுக்கான மைக்குழாய் பேனாக்களில் சிலவகை வேறொரு புதிய குழாயைப் பொருத்தி எழுதலாம். பைபிள் : உலகில் பல மதங்கள் உள்ளன. எல்லா மதங்களுக்கும் அவற்றின் தத்துவங்களை எடுத்துக்கூறும் வேதநூல் கள் உண்டு. கிறிஸ்தவ மதத்தின் (த.க.) வேதநூல் பைபிள் ஆகும். இதைத் தமிழில் விவிலிய நூல் என்றும் கூறுவர். பைபின் ஒரு தனி நூல் அல்ல. இது 66 நூல்களின் தொகுப்பாகும். பொதுவாக பைபிள், பழைய ஏற்பாடு (Old Testament), புதிய ஏற்பாடு (New Testament ) என்ற இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. பழைய ஏற்பாட்டில், ஆதியில் மனிதனை ஆண்டவன் படைத்தது முதல் இயேசு கிறிஸ்து (த.க.) பிறந்தது வரையுள்ள ஆதர்களின் வரலாறும், யூகத் தத்துவ ஞானிகளின் பொன்மொழிகளும் அடங்கி யுள்ளன. இது யூதர்களுக்குப் புனித மானது. புதிய ஏற்பாட்டில், கிறிஸ்து. அவருடைய சீடர்கள் ஆகியோரின் வரலாறும், கிறிஸ்துவின் போதனைகளும் கூறப்பட்டுள்ளன. இது கிறிஸ்தவர்களுக் குப் புனிதமானது. கி.பி. 69 முதல் கி.பி. 99 வரையுள்ள 30 ஆண்டுகளில், பழைய ஏற்பாடு எபிரேய (Hebrew) மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் முதலில் எழுதப் பட்டன. 4ஆம் நூற்றண்டின் இறுதியில் புனித ஜெரோம் என்பவர் பைபிளை முதன் முதலில் லத்தீன் லத்தீன் மொழியில் மொழியில் மொழி பெயர்த்தார். ஆங்கிலத்தில் பைபிள் முழுதும் முதன்முதலில் 1382-ல் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின் அம் மொழியில் பல மொழிபெயர்ப்புகள் வெளி வந்தன. எனினும், 1611-ல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸ் ஆணையின் பேரில் வெளியான மொழிபெயர்ப்புதான் இன்றும் அதிகாரபூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பாகப் போற்றப்படுகிறது. இன்று உலகில் சுமார் 500 மொழி கனில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டுள் னது. இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழில்தான் இந்நூல் மொழிபெயர்க்கப் பட்டது. 1714-ல் தமிழ் பைபிள் அச்சாகியது. பைபிளில் நீதி புகட்டும் கதைகளும், இலக்கிய நயம் மிக்க கவிதை களும், உள்ளம் கவரும் பாடல்களும். சிறந்த பழமொழிகளும் நிறைந்துள்ளன. பொங்கல் விழா: தமிழ்நாட்டில் எத்தனையோ விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் சிறப்பானது பொங்கல் விழா. விழா. இதனை 'உழவர்களின் திருநாள்' என்று சொல் வார்கள். வயலில் பாடுபடும் உழவன் மார்கழி மாதத்தின் இறுதியில் நெல்லை அறுவடை செய்து வீட்டிற்குக் கொண்டு வருகிறான். பயிர்செழிக்க உதவிய சூரிய னுக்கு நன்றி செலுத்திக் கொண்டாடும் விழாவாகப் பொங்கல் விழா தை மாதம் முதல் நாளில் அமைந்திருக்கிறது. தை இவ்விழா பொதுவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி இறுதி நாளன்று போகிப் பண்டிகையும், முதல் நாள் பொங்கல் விழாவும், மறுநாள் மாட்டுப் பொங்கல் விழாவும், அதற்கு மறு நாள் கன்னிப் பொங்கல் விழாவும் கொண் டாடப்படுகின்றன. போகிப் பண்டிகையன்று வீட்டிற்கு வெள்ளையடித்துக் கழுவி. மெழுகி,