பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பது போன்று முப்பது முதல் நாற்பது நீண்ட மட்டைகள் உள்ளன. மட்டை சுளின் இடையே குலைகுலையாகப் பழங்கள் தொங்கும். பழம் சுமார் இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டர் நீளமும், பழுப்பு கலந்த மஞ்சள் நிறமும் கொண்டது. பழத்தின் உள்ளே கொட்டை இருக்கும். மரங்கள் பயிரான 6 முதல் 10 ஆண்டு களில் காய்க்கத் தொடங்கும். பனைமரத்தைப்போல ஆண் மரம் வேறு; பெண் மரம் வேறு. பெண் மரம்தான் பழங்களைத் தரும். ஒரு குலையில் நூற்றுக்கணக்கான காய்கள் தொங்கிப் பின்னர் பழுக்கும். பேரீச்ச மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுகிறது. அடிமரம் எரிபொருளாக வும், வீடு கட்டவும் உதவுகிறது. கூரை வேயவும், பாய், கூடைகள் முடையவும் நிலை பயன்படுகிறது. மட்டையிலிருந்து நார் உரித்துக் கயிறு திரிக்கிறர்கள் பழங் களை உலர்த்திப் பக்குவப்படுத்தினால் அவை நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.. பழங்களிலிருந்து பலவகை உணவுப் பண்டங்கள் செய்கிறர்கள். விதையி லிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். எண்ணெய் எடுத்தது போசு எஞ்சிய பகுதி கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படு கிறது. பேரீச்சம்பழத்தின் சாற்றைக் காய்ச்சி வெல்லம் தயாரிக்கிறார்கள். பேனா: நாம் போைவைக்கொண்டு எழுதுகிறோம். உலகெங்கும் இன்று காகிதத் தில் எழுதப் பயன்படும். பயன்படும் கருவியாகப் பேனா விளங்குகிறது. இந்தியாவில் பண்டைக் காலத்தில் ஓலை களில் எழுத்தாணியால் எழுதினர்கள். பண்டைய ரோமானியர் பலகை மீது மென்மையான மெழுகைப் பூசி அதன் மீது எலும்பு, தந்தம் அல்லது உலோகத் தாலான கூர்மையான கருவியால் (Stylus) எழுநினார்கள். பின்னர் பப்பைரஸ் (Papyrus) என்ற ஒருவகை நீர்த்தாவரத்தினால் ஆன தாளை எழுதுவதற்குப் பயன்படுத்தினார் சீவி கூர்மையாகச் நாணலைக் முனையில் பிளவு செய்து மையில் தோய்த்து அதில் எழுதினார்கள். கள். காகிதம் தயாரிக்கப்பட்டதும், அதில் எழுத இறகுகளைப் பேனாவாகப் பயன்படுத் தினர். 1780-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் ஹாரிசன் என்பவர் எஃகுப் பேனாவை உருவாக்கினார். எஃகினால் ஒரு குழாய் செய்து, அதன் நுனியில் பேனாமுள் (Nib) போன்று அரத்தினால் அராவி, அவர் இப்பேனாவைச் செய்தார். பிராமா (Bramah) என்பவர் 1809-ல் இறகைப் பேனா முள் போல் தனியாக வெட்டிக் பேனா 47 கைப்பிடியில் (Holder) செருகிவைத்து எழுதும் பேனாவைத் தயாரித்தார். இறகு முள் விரைவில் தேய்ந்துவிடாமல் தீண்ட நாள் உழைக்குமாறு முனையில் தங்கம் வைத்த முள்ளை 1818-ல் சார்லஸ் வாட் என்பவர் பயன்படுத்தினார். பின்னர் ஜான் ஹாக்கின்ஸ் என்ற ஆங்கிலேயர் கொம் பினாலும், ஆமை ஓட்டினானும் முள் செய்து, அதன் முன்னல் வைரம், தங்கம், இரிடியம் (Iridium) போன்ற உலோகங்களை வைத்துக் கெட்டிப்படுத்தினர். இவற் றுள் இரிடியம் நீண்டநாள் தேயாமல் இருக்கும் எனக் கண்டு, அதையே பேனா முள் முனையில் வைக்கலாயினர். 1822-ல் ஜான் மிச்சல் (John Mitchell) என்னும் அமெரிக்கர் எந்திரத்தினால் கட்டைப்பேனா வைச் செய்தார். இதன்பின், இறகுப் போனாவிற்குப் பதில் சுட்டைப்பேனா மிகுதி யாகப் பயன்பட்டது. கட்டைப் பேனாவை மையில் தொட்டு எழுதுவதற்குப் பதில், அதனுள்ளேயே மை நிரப்ப வசதி செய்ய முயன்றனர். இதன் பயனாக ஒருவகை ஊற்றுப் பேனா வைக் (Fountain pen) கண்டுபிடித்தனர். ஆனால் இதில் மை சரியாக வராமல், எழுதும்போது திடீரென நின்றுவிடுவதாக இருந்தது. இக்குறையைப் போக்கி, 1883-ல் அரயி வாட்டர்மன் (Lewis Waterman) என்ற அமெரிக்கர் இன்று உள்ளதுபோன்ற ஊற்றுப் பேனாலை அமைத்தார். ஊ மிக உள்ளன. ஊற்றுப் போனாளில் குழாய் (Barrel), கழுத்து (Neck), உமிழி (Feeder), மூடி (Cover) ஆகிய உறுப்புகள் இவற்றை வல்கனைட்டு, பிளாஸ்ட்டிக் அல்லது உலோகத்தினஸ் செய்கிறார்கள். பேனாவின் உடல்போன்ற குழாயும் கழுத் தும் திருகினால் பொருத்தப்படுகின்றன. உயரத்தில் காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால் ஊற்றுப் போனா கசியும். எனவே விமானம் எவ்வளவு கசியாமல் உயரத்தில் பறந்தாலும் மை எழுதக்கூடிய பேனாவை ஒருவகைப் இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெ ரிக்கர் அமைத்தனர். இதை முன் மாதிரி யாகக் கொண்டு, மில்ட்டன் செயினால்ட்ஸ் (Milton Reynolds) என்ற அமெரிக்கர் குண்டு முனைப் பேனாவை (Ball-point pen ) முதலில் செய்தார். இந்தப் போழூளின் முனையில் ஒரு மில்லிமீட்டர் விட்டமுள்ள எஃகுக் குண்டு இருக்கும். இக்குண்டு, பிசு பிசுப்பான தனிவகை மையுள்ள குழாயின் முனையில் சுழலும் வகையில் அமைந்திருக் கும். காகிதத்தில் எழுதும்போது குழாயி லிருந்து சீரான அளவு மை வரும். மை தீர்த்ததும் பழைய குழாயை எடுத்துவிட்டு,