பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குழந்தைகள் கலைக்களஞ்சியம் பிரீஸ்ட்லி, ஜோசப் (Priestly, Joseph 1733-1804): சோடா பானத்தை முதன் முதல் தயாரித்தவர் இங்கிலாந்து நாட் டைச் சேர்ந்த ஜோசப் பிரீஸ்ட்லி ஆவார். வாயுக்களைப் பற்றி ஆராய்வதில் பிரீஸ்ட்லி மிகுந்த ஆர்வங் காட்டினார். ஆக்சிஜன், கார்பன் மானாக்சைடு, கந்தக டையாக் சைடு, அம்மோனியா முதலிய பல முக்கிய மான வாயுக்களை இவர் கண்டுபிடித்தார். இவர் ரசாயனத்தில் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந் தார். ஜோசப் பிரீஸ்ட்லி ஏழு வயது ஆகும்முன் பிரீஸ்ட்லி தாய் தந்தையரை இழந்தார். கல்வி பயிலும் பொழுது இவர் லத்தீன், கிரேக்க மொழி, எபிரேய மொழி, ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி மொழி முதலிய பல்வேறு மொழிகளில் தேர்ச்சிபெற்றார். சில ஆண்டு கள் மத குருவாகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். பிரீஸ்ட்லி பிரெஞ்சுப் புரட்சியை (த.க.) ஆதரித்ததால், இவரது வீட்டை யும் சோதனைக் கூடத்தையும் 1791-ல் சிலர் தீ வைத்துக் கொளுத்திவிட்டனர். 1794-ல் இவர் தம் மனைவியுடன் அமெரிக்கா சென்று இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். வரலாற் பிரெஞ்சுப் புரட்சி: உலக றில் முக்கியமான ஒரு நிகழ்ச்சி பிரெஞ்சுப் புரட்சி. சுதந்தரமும், சமத்துவமும் மனிதனின் பிறப்புரிமை; நாட்டை ஆளு வதற்குரிய உரிமைகள் எல்லாம் நாட்டின் குடிகளுக்கே உண்டு' என்னும் குடியரசுத் தத்துவம் உலகெங்கும் பரவுவதற்குப் பிரெஞ்சுப் புரட்சி வழிவகுத்தது. இப் புரட்சிக்கு பிரான்ஸ் நாட்டின் அன்றைய அரசியல் நிலைமையே காரண மாகும். அரசன் எல்லா அதிகாரங்களையும் தன் கையில் வைத்துக்கொண்டு தன் விருப் பப்படி ஆட்சி செலுத்தி வந்தான். திருச் சபையினரும், பிரபுக்களும் தம் உரிமை களை அனுபவித்து வந்தனர். அவர்கள் வரி செலுத்தவேண்டியதில்லை. எல்லா வரி களும் ஏழை எளியோரிடமே வசூலிக்கப் பட்டன. இதனால் மக்கள் மனங் குமுறிக் கொண்டிருந்தனர்.