பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவியா பொருளாதாரத்தில் நான்கு முக்கிய பகுதிகள் உண்டு. இவற்றுள் முதலாவது உற்பத்தி (Production). உற்பத்திக்கு உதவு இயற்கைச் செல்வங்களாகும். பவை உணவுப் பொருள்களை விளைவிக்க நிலம் இருக்கிறது. மேலும், நிலத்தில் புதைந் துள்ள கனிவளங்களிலிருந்து உலோகங்கள் கிடைக்கின்றன. இயற்கைச் செல்வங்களை மனிதன் தன் உழைப்பால் பொருள்களாக மாற்றிய பின், அவை மக்களுக்கு வழங்கப் படுவது பகிர்வு (Distribution) எனப்படும். பொருள்களுக்கு விலை கொடுத்து வாங்கு வது பரிமாற்றம் (Exchange). வாங்கிய பொருள்களை மக்கள் பயன்படுத்துவது நுகர்வு (Consumption) ஆகும். நமக்குத் தேவைப்படும் பொருள்கள் எப்போதும் ஒரே விலைக்குக் கிடைப் பதில்லை. ஒரு பொருள் மிகுதியாக இருந்து, அதற்கான தேவை குறைவாக இருந்தால் அதன் விலை குறைவாகவே இருக்கும். பொருள் குறைவாகவும், தேவை மிகுதியாகவும் இருந்தால் அப் பொருளின் விலை அதிகமாகும். பொருள்களை வாங்குவதற்கு இன்று நாம் பயன்படுத்தும் நாணயங்கள் முற் காலத்தில் இல்லை. ஒருவர் தாம் உற்பத்தி செய்த பொருள்களை மற்றவர்களுக்குக் கொடுத்து. தமக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்வார். இதற் குப் பண்டமாற்று என்று பெயர். இதில் பல சிரமங்கள் இருந்தன. எனவே எவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடிய தங்கம், வெள்ளி போன்ற அரிய உலோகங்களைப் பொதுவான பொருளாகப் பயன் படுத்தினர். இதிலிருந்து நாணயங்கள் உருவாயின. பின்னர் காகிதப் பணமுண் டாயிற்று. அதன்பிறகு வங்கிகள் போன்ற நிதி நிலையங்கள் தோன்றித் தொழிலுக்கும் வாணிகத்திற்கும் ஊக்கம் அளித்தன. பெரூ டிட்டிக்க ஏரி சில் பிரேசில் ஆறு பொலிவியா லோ பாஸ் ஓ கோச்சாகாம்பா ருச்சி ஆர் ஆர்சென்மனா பராகுவே பொலிவியா ப செம்பு எண்ணெய் வெள்ளீயம் காரீயம் மூண்ட போர்களின் விளைவாக இதன் எல்லை சுருங்கிவிட்டது. மக்கள்தொகை 35 லட்சம். மக்களில் பெரும்பாலோர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். இந் நாட்டின் மேற்குப் பகுதியில் ஆண்டீஸ் மலைத்தொடர் செல்கிறது. இங்குள்ள பீடபூமியில்தான் மக்களுள் பெரும்பாலோர் வாழ்கின்றனர். தலை நகரம் லா பாஸ் (La Paz). உலகிலேயே மிக உயரமான இடத்திலுள்ள பெரிய நகரம் இதுவே. இந் நகரமும், மற்ற முக்கிய நகரங்களான சூக்ரே, கோச்சாவாம்பா முதலியனவும் பீடபூமியில்தான் உள்ளன. பொலிவியாவின் செல்வத்திற்கு ஆதார மான தாதுவளச் சுரங்கங்களும் இப் பகுதி யில்தான் உள்ளன. பொருளாதார நடவடிக்கைகள் இன்று மிகவும் விரிவடைந்துள்ளன. பொருள் உற்பத்தி, பரிமாற்றம், மக்கள் ஈட்டும் செல்வம், செலவிடும் பணம். வாங்கும் கடன், சேமிக்கும் பொருள், வேலை வாய்ப்பு யில் பொருளாதாரத் திற்குட்படும். வாழ்க்கையைச் வளமாக நடத்த ஒவ்வொருவருக்கும் பொருளா தாரம் பற்றிய அறிவு அவசியமாகும். எல்லாமே பொலிவியா : தென் அமெரிக்காக் கண்டத்தின் மத்திய பகுதியிலுள்ள குடியரசு நாடு பொலிவியா. இதன் பரப்பு சுமார் 11,00,000 சதுர கிலோமீட்டர். சென்ற நூற்றாண்டில் இந்நாட்டின் பரப்பு இன்று இருப்பதைப்போல் இருமடங்கு இருந்தது. அருகிலுள்ள நாடுகளுடன் இந் நாட்டின் கிழக்குப் பகுதி சமவெளி யாகும். இதன் வடபகுதியில் மாடியா. குவாப்பூரே, மாமொரே, பேனி முதலிய ஆறுகள் பாய்கின்றன. இவை ஆமெசான் ஆற்றின் துணையாறுகளாகும். இப்பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. தென்பகுதி பரத்த புல்வெனி. இந் நாட்டின் வட எல்லை டிட்டிக்காக்கா ஏரி உள்ளது. உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள ஏரி இதுவாகும். ஆண்டீஸ் மலைப் பகுதிகளில் பொதி சுமப்பதற்கு லாமா, அல்பாக்கா ஆகிய விலங்குகளை மக்கள் வளர்க்கின்ற னர். கரும்பு. காப்பி, கோக்கோ, பருத்தி. முதலியன இந் நாட்டில் வினைதின்றன. இந் நாட்டில் வெள்ளீயம் மிகுதியாகக் கிடைக்கிறது. தாமிரம், துத்தநாகம், காரீயம் முதலியன இங்கு கிடைக்கும் மற்ற தாதுப்பொருள்கள். பெட்ரோலிய எண்ணெயும் கிடைக்கிறது. 55