பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 பொலீவார் - பொறியியல் 16ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட் டினர் இங்குக் குடியேறி ஆட்சி செலுத் தினர். 300 ஆண்டுகள் இவர்களுடைய ஆட்சி நீடித்தது. 1825-ல் பொலிவியா சுதந்தரம் பெற்றது. பொலீவார், சைமன் (Simon Bolivar, 1783-1830) : தென் அமெரிக்காவைச் சேர்ந்த விடுதலை வீரர் சைமன் பொலீ வார். ஸ்பெயின் நாட்டின் ஆட்சியின்கீழ் அடங்கியிருந்த பல நாடுகள் இவருடைய முயற்சியால் விடுதயை பெற்றன. வெனிசூலா நாட்டில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் பொலீவார். ஸ்பெயின் நாட்டில் படித்துக்கொண் டிருந்தபோது இவருடைய உள்ளத்தில் தாய்நாட்டுப் பற்று வளர்ந்தது. எனவே இவர் 1811-ல் தென் அமெரிக்காவுக்குத் திரும்பியவுடன் ஸ்பெயின் நாட்டினரை வெளியேற்றுவதற்குப் போராடினார். முதலில் இவருக்குத் தோல்வியே ஏற்பட் டது, எனினும் இவர் மனம் தளரவில்லை. விடாமுயற்சியுடன் ஸ்பானியர்களை எதிர்த் துப் போரிட்டு இறுதியில் வென்றார். நியூ கிரானாடா, வெனிசூலா ஆகிய இரு நாடுகளையும் கொலம்பியா என்ற பெயலில் இணைத்து 1821-ல் அதன் தலைவரானார். இவருடைய தலைமையில் பெரு, ஈக் வடார் ஆகிய நாடுகளும் விடுதலை பெற் றன. 1825-ல் பெரு நாட்டின் தென் பகுதி தனியாகப் பிரிந்தது. பொலீ வாரைச் சிறப்பிக்க விரும்பிய மக்கள், அதற்கு பொலிவியா என்று பெயரிட் சைமன் பொலீவார் டனர். எனினும் பின்னர் பொலிவியாவி தும் கொலம்பியாவிலும் இவருக்கு எதிர்ப் புத் தோன்றியது, சிலர் இவரைக் கொல்ல வும் முற்பட்டனர். எனவே இவர் பதலி யிலிருந்து விலகிக் கொண்டார். மக்கள் நன்றி மறந்துவிட்டனர் என வருந்தினார். 1830-ல் இவர் காலமானார். பொறியியல் (Engineering) : உங்களில் சிலர் சாத்தனூர் அணை, மேட்டூர் அணை இவற்றைப் பார்த்திருக்கலாம். அணைகள், வானளாவிய கட்டடங்கள், பெரிய பாலங்கள் இவையெல்லாம் பொறி வியஸின் சாதனைகளாகும். விஞ்ஞானத் தில் பௌதிகம், ரசாயனம், கணிதம் முதலிய பல பிரிவுகள் உள்ளன. இவற்றை மக்களின் நலத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு துறையே பொறியியல் ஆகும். எனப் ஒரு காலத்தில் ராணுவத்திற்குத் தேவையான போர்க் கருவிகளைச் செய் வோரே பொறியியலர் (Engineer) பட்டனர். அத்துறையே பொறியியல் என வழங்கப்பட்டது. ராணுவத்திற்காக மட்டும் பணியாற்றிய நிலை நீங்கி, மக்களுக்கு வேண்டிய சாலைகள், பாலங் கள், அணைகல் முதலியன கட்டவும் பொறியியலாளர்கள் முற்பட்டனர்.' இதனால் பொதுப்பணிப் பொறியியல் (Civil Engineering) தோன்றியது. பிறகு பொறியியல் பல வழிகளிலும் வளர்ச்சி யடைந்து, பலவகையான பொறியியல் பிரிவுகள் தோன்றின. பொறியியலில் நான்கு பெரும் பிரிவு கள் உள்ளன. 1. எந்திர சாதனங்கள், மோட்டார் வண்டிகள், பம்ப்புகள் இவற் றின் அமைப்பைத் திட்டமிட்டு, அவற் றைத் தயாரித்தல் எந்திரப் பொறியிய லாகும் (Mechanical Engineering). 2. மின்சார உற்பத்தி வினியோகம் இவற்றுக்குத் தேவையான மின்னாக்கிகள், மின்மட்ட மாற்றிகள் (Transformer), விசைகன், வீடு களில் மின் இணைப்புகள் செய்தல் முதலிய துறைகள் பற்றியது மின் பொறி யியல் (Electrical Engineering) எனப்படும். 3. கட்டடங்கள் கட்டுதல், கால்வாய் வெட்டுதல், குடைவுவழி, சாலை, அணை, இருப்புப் பாதை முதலியன அமைத்தல் பொதுப்பணிப் பொறியியல் ஆகும். 4. அமிலம், உரம், பிளாஸ்ட்டிக் கண்ணாடி முதலியவற்றை உற்பத்தி செய் வதைப்பற்றிக் கூறுவது ரசாயனப் பொறி யியல் (Chemical Engineering). சுரங்கப் பொறியியல், போக்குவரத்துப் பொறியியஸ், நீரியல் பொறியியல், உற்பத் திப் பொறியியல் போன்ற ஏராளமான துணைப் பிரிவுகளும் உண்டு.