பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 போக்குவரத்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பொன்மீன் இளம் பச்சை நிறமுடையதாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்று மாகச் சில தங்க நிறப் புள்ளிகள் அதன் உடலில் காணப்பட்டன. அதைக் கண்ட சீன நாட்டினர் உடம்பெல்லாம் பொன் போல் மின்னும் மீனை உண்டாக்க நினைத் தார்கள். தங்க நிறப் புள்ளிகள் நிரம்பிய மீன்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் இனம் பெருகுமாறு செய்தனர். இம் முயற்சியால் பல ஆண்டுகள் கழித்து முழுவதுமே பொன்னிறமான மீன் தோன் றியது. பின்னர் ஜப்பானியரும் அமெரிக் கரும் இம்முயற்சியில் ஈடுபட்டனர். பொன்னிறம், சிவப்பு, கறுப்பு, வெள்ளை எனப் பல நிறங்களில் தங்கப் புள்ளிகள் கலந்த மீன்கள் இன்று உள்ளன. நிறத்தை மட்டுமின்றி வடிவத்தையும் மாற்ற முடியும் என்று அறிந்து, விசிறிபோன்று அலையும் வால்கள், மென்மையான செதில் கள், பிதுங்கும் விழிகள் ஆகியவற்றை யுடைய பொன்மீன்களையும் உண்டாக்கி யுள்ளனர். கெண்டை மீன் வகையில் ஒன்று பொன்மீன். இது நன்னீரில் வாழ்கிறது. பெரிய தொட்டியில் நிறைய நீர்விட்டு இதை வளர்க்கவேண்டும். இதற்கு ஒரு நாளில் ஒருவேளைதான் சிறிதளவு உணவு தரவேண்டும். பொன்மீன் உயிரோடிருக்க அதிக ஆக்சிஜன் தேவை. இதற்காகச் சில நீர்த்தாவரங்களைத் தொட்டியில் வைக் கிறார்கள். போக்குவரத்து (Transportation) : ஓரி டத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நடந்து செல்லலாம்; வண்டி, சைக்கிள் இவற்றில் விரைவாகச் செல்லலாம். இன்னும் வேகமாகவும் நெடுந்தொலைவும் செல்வதற்கு மோட்டார் சைக்கிள், கார், பஸ், ரெயில், கப்பல், விமானம் முதலிய வற்றில் போகலாம். பொருள்களையும் இச் சாதனங்களில் ஏற்றிச் செல்லலாம் இவ்வாறு பயணம் செய்வதற்கும், பொருள்களை ஏற்றிச் செல்வதற்கும் பயன் படுவனவற்றைப் போக்குவரத்துச் சாத னங்கள் என்கிறோம். போக்குவரத்தை நிலவழிப் போக்கு வரத்து, நீர்வழிப் போக்குவரத்து, வான் வழிப் போக்குவரத்து என மூவகையாகப் பிரிக்கலாம். இவற்றுள் நிலவழிப் போக்கு வரத்தே முதன் முதலில் தோன்றியது. ஆதியில் மனிதன் நடந்தே இடம்விட்டு இடம் சென்றான். அவன் பொருள்களைத் போக்குவரத்துச் சாதனங்களில் சில