பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 அட்லான் போர்ச்சுகல் விஸ்பன் க L ஸ்பெயின் கோதுமை பார்லி + ஒலிவ கனி பழம் மீன் தக்கை போர்ச்சுகல் - போர்டு போர்ச்சுகல் முக்கிய மதம். தலைநகர் ஸிஸ்பன் (Lib.n). இது ஓர் அழகிய இயற்கைத் துறைமுகம். ஐரோப்பாளிலுள்ள சிறந்த துறைமுகங் களுள் இது ஒன்று. இந்நாட்டின் வடபகுதி மலைப்பாங்கான பீடபூமி. தென்பகுதி பெரும்பாலும் சமவெளி. வடபகுதியில் மழை அதிகம். பெரும்பாலோர். உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கோதுமை. பார்லி ஆகியலை முக்கிய தானியங்கள். திராட் சைத் தோட்டங்கள் இந்நாட்டில் மிகுதி. திராட்சையிலிருந்து மது தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற னர். ஒலிவ மரங்களும் இங்கு அதிகம். இவற்றிலிருந்து ஒலிவ எண்ணெய் தயாரிக் கிறார்கள். தென்பகுதியில் ஆரஞ்சு, எலுமிச்சை, அத்தி முதலிய பழங்கள் மிகுதி யாகப் பயிராகின்றன. கார்க் எனப்படும் தக்கையைக் கொடுக்கும் ஒக் மரங்கள் இந் நாட்டில் அதிகம். தக்கை இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களுள் ஒன்று. மீன்பிடித்தல் இந்நாட்டின் மற்றொரு முக்கியத் தொழில். மீன்களை உப்பிட்டு உலர்த்தி, டப்பிகளில் அடைத்து வெளி நாடுகளுக்கு அனுப்புகின்றனர். வெள்ளைக் களிமண்ணால் இங்கு செய்யப்படும் ஓடு களும் பீங்கான் சாமான்களும் உலகப் புகழ்பெற்றவை. செம்பு, இரும்பு, துத்த நாகம் முதலியன இங்கு கிடைக்கும் உலோகங்கள். இந்நாட்டிலுள்ள டங்ஸ்ட் டன் உலோகச் சுரங்கங்கள் ஐரோப்பாவி லேயே மிகப் பெரியவை. 15, 16ஆம் நூற்றண்டுகளில் இந்நாடு பெரும்புகழ் பெற்று விளங்கியது. புதிய நாடுகளைக் கண்டுபிடித்துக் குடியேறுவதில் போர்ச்சுகேசியர் முன்னணியிலிருந்தனர். ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் புதிய குடியேற்றங் களை இவர்கள் அமைத்தனர். கடல் வழியே தென் ஆப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டு முதன் முதலாக இந்தியாவை L வாஸ்க்கோ அடைந்த போர்ச்சுகேசியரே. வெகுகாலமாகப் காமா ஒரு போர்ச்சுகல் ஒரு முடியாட்சி நாடாக இருந்தது. 1910-ல் குடியரசாயிற்று. Guri, Gamerf (1863-1947): சாலைகளில் இன்று எத்தனையோ விதமான மோட்டார் கார்களை நாம் பார்க்கிறோம். முதன் முதலில் கார்களைப் பெருமளவி லும், குறைந்த செலவிலும் தயாரித்தவர் ஹென்ரி போர்டு, அமெரிக்காவில் மிச்சிகன் என்னுமிடத் தில் போர்டு பிறந்தார். தந்தையின் தொழிலான வேளாண்மையில் போர்டு அக்கறை காட்டவில்லை எந்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதிலேயே ஆர்வம் கொண்டார். சிறுபிள்ளைப் பருவத்திலேயே கடிகாரங்களைப் பழுது பார்த்துப் பொருள் ஈட்டத் தொடங்கி விட்டார். எந்திரங்களைப் பற்றி அறியவேண்டும் என்ற ஆர்வத்தால் இவர் தம் 16-ஆம் வயதில் டிட்ராயிட் நகருக்குச் சென்று ஒரு தொழிற்சாலையில் சேர்ந்தார். அங்கு எந்திரங்களைப் பற்றி ஆராய்ந்து 1893-ல் தமது முதல் மோட்டார் எஞ்சினைத் தயாரித்தார். அடுத்த மூன்று ஆண்டு களுக்குள் முதல் மோட்டார் காரைத் தயாரித்து அதைத் தாமே ஓட்டிக் காட்டினார். ஹென்ரி போர்டு