பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போட்டோக் கலை - போர்ச்சுகல் 61 இரவிலும், போதிய அளவு ஒளி இல்லாத இடங்களி லும் போட்டோ எடுக்க உதவும் மின் ஒளி அமைப்பைப் படத்தில் காணலாம். இதைக் காமிராவுடன் பொருத்தி போட்டோ எடுப்பார்கள். ஒரே எதிர்ப்படத்தைக் கொண்டு நாம் எத்தனை நேர்ப்படங்கள் வேண்டுமானா லும் எடுத்துக்கொள்ளலாம். மேலும். நமக்கு வேண்டிய அளவில் பெரிதாகவும் நேர்ப்படங்களை எடுக்கலாம். இதற்குப் 'பெரிதாக்கி' Enlarger) என்னும் கருவி உள்ளது. லூயி டகர் (Louis Daguerre) என்னும் பிரெஞ்சுக்காரர் 1839-ல் முதன் முதல் போட்டோப் படங்கள் எடுத்தார். அதன் பின் போட்டோக் கலை பல விதங்களில் வளர்ச்சியடைந்துள்ளது. தொடக்கத்தில் ஈறுப்பும் வெள்ளையும் கலந்த போட்டோ ஒரு கட்டடத்தைப் பல கோணங்களிலிருந்து போட்டோ எடுக்கலாம். இது ஒரு தனிக் கலை. மற்றொரு கட்டடத் தின் தூண்களும் வளைவுகளும் படத்திலுள்ள கோபுரத் திற்குச் சட்டம்போல் அமைந்து, அதற்கு ஒரு தனிக் கவர்ச்சியை அளிக்கின்றன. படத்திலிருக்கும் மூவரும் ஒருவரே ! ஒரே பிலிமில் மூன்று முறை போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஓர் இடத்தில் அமர்த்தி போட்டோ எடுத்திருக்கிறார்கள், 1930-ல் தான் எடுத்து வந்தார்கள். வண்ணப் போட்டோ முறை கண்டுபிடிக் கப்பட்டது. இப்பொழுது பொருள்களை அவற்றின் இயற்கை நிறங்களுடன் போட் டோப்படம் பிடிக்கிறார்கள். இதற்குத் தனியாக வண்ண பிலிம் உண்டு. போட்டோக் கலை இன்று நமக்கு மிகவும் பயன்படுகிறது. இன்று நாம் பார்க்கும் சினிமா (த.க.) போட்டோக் கலையிலிருந்து வளர்ச்சியடைந்ததே ஆகும். போட்டோப் படங்கள் இல்லாத செய்தித்தாள்களை இன்று காண்பது அரிது. இக் கலையின் மூலம், முக்கிய நிகழ்ச்சிகளையும், தலைவர் களையும் படம் பிடித்து என்றென்றும் வைத்துக்கொள்ளலாம். இயற்கைக் காட்சிகளைப் படமெடுக்கலாம். கண்ணுக் குப் புலப்படாத மிகச் சிறிய உருவங்களை யும் பெரிதாக்கிக் காட்டும் மைக்ராஸ் கோப் (த.சு.) என்ற கருவியில் காமிராவை இணைத்து நோய்க் கிருமிகள் போன்ற மிக நுண்ணிய உருவங்களைப் படம் எடுக்க லாம். தொலைநோக்கி (Tescope) என்ற கருளியில் காமிராவைப் பொருத்தி மிகத் தொவிலுள்ள கிரகங்களையும் நட்சத் திரங்களையும் படம் எடுக்கலாம். பார்க்க: காமிரா: சினிமா. போர்ச்சுகல் (Portugal): ஐரோப் பாக் கண்டத்தின் மேற்குக் கோடியிலுள்ள நாடு போர்ச்சுகல். இதற்கு வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடு நாடு உள்ளது. தெற்கிலும் மேற்கிலும் அட்லான்டிக் சமுத்திரம். அட்லான்டிக் சமுத்திரத் திலுள்ள மடியரா, ஏசோர்ஸ் தீவுகளும் இந் நாட்டைச் சேர்ந்தவையே, இந் நாட் டின் பரப்பு 91,500 சதுர கிலோமீட்டர் மக்கள்தொகை 95,82,600 (1969). கத்தோலிக்கக் கிறிஸ்தவம் இந் நாட்டின்