பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 போட்டோக் கலை போட்டோ எடுத்தல் போட்டோ எடுக்கப் பயன்படும் காமிராவில் பிலிம் இருக்கும். இந்த பிலிமில் வெள்ளி புரோமைடும், வெள்ளி அயோடைடும் கலந்த ரசாயனக் குழம்பு பூசப்பட்டிருக்கும். படம் எடுக்க வேண்டிய பொருளின் பக்கம் காமிரா லைத் 'திருப்பி அப் பொருனின் உருவம் தெளிவாகத் தெரியும்படிச் செய்ய வேண்டும். காமிராவில் உள்ள விசையை அழுத்தினால் லென்ஸின் முன்புறமுள்ள மூடி விலகும். லென்ஸின் வழியாக ஒளி உள்ளே சென்று பிலிமின்மீது பட்டதும், பிலிமிலுள்ள ரசாயனக் குழம்பு மாற்றம் அடைகிறது; ஒளிக்கதிர் பட்ட இடங்கள் கறுப்பாகி, காமிராவின் முன்னால் உள்ள பொருளின் உருவம் பிலிமில் பதிகிறது. இந்த பிலிமை இருட்டறைக்குள் வைத்து, உருத் துலக்கி (Developer) என்னும் திரவத்தில் சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிலியில் கண்ணுக்குத் தெரியா மல் இருக்கும் உருவத்தை, இத் திரவம் தெளிவாகத் தெரியச் செய்கிறது. இந்த பிலிமில் ஒளி பட்ட இடங்கள் தவீர மற்றப் பகுதிகளில் ரசாயனப் பொருள்கள் அப்படியே இருக்கும். அவற்றை நீக்கு வதற்கு பிலிமை வேறு ஒரு திரவத்தில் போடவேண்டும். சில நிமிடங்கள் அத் நிரவத்தில் ஊறிய பின் பிலிமை மீண்டும் நன்றாகக் கழுவவேண்டும். இந்த பிலியில். உருவத்தில் வெள்ளையாக இருப்பணவ கறுப்பாகவும், கறுப்பாக இருப்பவை வெள்ளையாகவும் எதிர்மாறாகப் பதிந்திருக் கும். அதனால் இதை எதிர்ப்படம் (Negative) என்பர். இந்த எதிர்ப்படத்தைக் கொண்டு பொருளின் நேர்ப்படத்தை (Positive) எடுக் கலாம். ஒளியுணர்வுள்ள ஒரு புரோமைடுக் காகிதத்தை எடுத்து, அதன் மேல் நாம் உண்டாக்கிய எதிர்ப்படத்தைப் பொருத்திவைத்து, சிறிது நேரம் வெளிச் எதிர்ப்படம் நேர்ப்படம் சத்தில் காட்டினால், அதன் தெளிவான பகுதிகள் வழியே ஒளி தடைபடாமல் சென்று அக் காகிதத்தின்மீது விழும். இப்பொழுது அக் காகிதத்தை எடுத்து உருத் துவக்கித் திரவத்தில் நனைத்தால் எதிர்ப்படத்திற்கு நேர்மாருக, அதாவது ஒளிபட்ட இடமெல்லாம் சுறுப்பாகவும், ஒளிபடாத இடம் வெள்ளையாகவும் மாறும். ஆகையால், இப்படம் ஒளி வேறு பாடுகளில் பொருளின் இயல்பான தோற் றத்தில் அமைந்திருக்கும். இப்படத்தைத் தான் போட்டோ என்று நாம் சொல் கிறோம். உருத் துலக்கித் திரவத்தில் போட்டோ பிரதி எடுத்தல்