பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போலீஸ் சாஃபச் சந்திப்புகளும் இருக்கும், இவற்றில் ஓட்டுவதற்கு ஏற்றவாறு சிறிய அளவில் வண்டிகள் இருக்கும். இன்று போக்குவரத்து நிறைந்த இடங்களிலும் சிறுவர்களே சில நேரங் களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்து கிருர்கள். அதற்கான பயிற்சியைக் காவல் துறையினர் அவர்களுக்குத் தருகின்றனர். திருட்டு நேராமலிருக்க இரவு நேரத் தில் காவல்துறையினர் நகரைச் சுற்றி வந்து கண்காணிக்கின்றனர். சட்ட விரோதமாக நடப்பவர் யாராயிருந் தாலும் அவரைத் தடுக்கின்றனர்; மீறினால் கைதுசெய்து வழக்குத் தொடர்கின்றனர். மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளி களைக் கண்டுபிடிக்கவும் இந்தியாவில் பண்டைக்கால முதலே காவல்படை இருந்துவந்திருக்கிறது. தமிழ் நாட்டில் பழங்காலத்தில் நகரங்களில் இரவில் ஊர்க் காவலர்கள் காவல்புரிந்தனர். அரசன் மாறுவேடம் பூண்டு அவர்களைக் கண் காணித்தான். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க ஒற்றர்களும் இருந்தனர். சோழர் காலத்தில் ஊரைக் காவல்புரிவோருக்கு ஊதியம் கொடுப்பதற்கு ஊர் மக்களிடம் 'நாடு காவல்' என்ற வரி வசூலிக்கப்பட் டது. முஸ்லிம்கள், விசயநகர மன்னர் காலத்திலும் ஊர்க்காவல் முறை நடந்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இக்கால முறைப்படிப் போலீஸ் துறை உருவாயிற்று. இப்போது ஒவ்வொரு 65 மாநில அரசின்கீழும் ஒரு போலீஸ் படை உள்ளது. காவல் துறையில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது துப்பறியும் பிரிவாகும் (Criminal Investigation Department). இப்பிரிவினர் கொலை, கொள்ளை இலற் றைச் செய்யும் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதுடன், லஞ்ச ஊழல், கருப்புச் சந்தை, கள்ளக்கடத்தல் போன்றவற்றை யும் கண்டுபிடிக்கின்றனர். குற்றம் நடந்த இடங்களில் காணப்படும் கைரேகை, காலடி அடையாளங்களைக் கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்குக் 'கை ரேகைப் பதிவு நிறுவனம்' (Finger Print Bureau) உதவுகிறது. ஒவ்வொரு மாநிலக் காவல் துறையிலும், அரசியல் நிகழ்ச்சிகளைக் கணிப்பதற்காகவும் கண்காணிப்பதற்காக வும் இயங்கிவரும் பிரிவிற்குத் 'தனிப்பிரிவு' என்று பெயர். குற்றங்களைத் துப்புத்துலக்கு வதற்குக் குற்றஞ்சார்ந்த வேதியல் ஆய்வுக் கூடங்கள்' (Forensic Science Laboratories) துணைசெய்கின்றன. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் தடயங்களை மோப்பம் பிடித்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியாக இருக்க நாய்ப் படையும் உண்டு. குற்றங்கள் பற்றிய தகவல்களையும், குற்றவாளிகள் நட மாட்டம் பற்றிய அறிவிப்புகளையும் விரைவில் அனுப்பப் போலீஸ் பிரிவில் தனி வானொலிப் பிரிவும் (Police Radio) உண்டு. சிறுவர்கள் குற்றம் புரிந்தால், வானொலிப் பிரிவினர் நாய்ப் படையினர் போலீஸ் கூட்டத்தைச் சமாளிக்கும் காவலர் கைரேகைப் பதிவைக் காட்டும் படம்