பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 போலோ அவர்கள் நல்ல கல்வி பெற்று, திருந்தி வாழ்வதற்காக, காவல்துறையின் சிறைச்சாலைப் பிரிவினரால் நடத்தப்படும். 'பார்ஸ்ட்டல்' பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிருர்கள். காவல்துறையின் ஒரு பிரிவு 'குதிரைப் போலீஸ் படை' (Mounted Police) ஆகும். இப்படையினர் திருவிழாக்களிலும் பெருங்கூட்டங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டத்தினரைக் கட்டுப்படுத்துவர். இங்கிலாந்து, இலங்கை முதலிய சில நாடுகளிலும், இந்தியாவில் கேரளம், டெல்லி, தமிழ்நாடு முதலிய பகுதிகளிலும் பெண் போலீஸ் படையினர் உள்ளனர். காணுமற்போன பெண் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தல், பெண் கைதிகளைச் சோதனையிடுதல், அவர்களை நீதிமன்றத் திற்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை இவர்கள் செய்கின்றனர். மாநிலங்களில் நடக்கும் பெரிய நிகழ்ச்சி களின்போது, அந்தந்த மாநிலக் காவல் துறையினருக்கு உதவி புரிவதற்காகமத்திய அரசின்கீழ் உள்ள படைக்கு "சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ்” என்று பெயர். போலீஸ் அதிகாரிகளுக்கும், படையின ருக்கும் பயிற்சி அளிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் பயிற்சி நிலையங்கள் உள்ளன. மக்களுக்கு உதவி புரியவும், பாது காப்பு அளிக்கவுமே காவல் துறையினர் உள்ளனர். எனவே குற்றங்களைத் தடுப் பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கவேண்டும். போலோ (Polo) : உங்கள் பள்ளியில் ஹாக்கி விளையாட்டைப் பார்த்திருப்பீர் கள். ஒரு முனையில் வளைந்த நீண்ட கழியைக் கொண்டு பந்தை அடித்து விளையாடுவார்கள். அதபோல், குதிரை யின்மீது அமர்ந்துகொண்டு, நீண்ட கழியினால் பந்தை அடித்து ஆடுவது 'போலோ' ஆட்டமாகும். இது ஒரு பழமையான ஆட்டம். இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரசீகர்கள் இவ்வாட்டத்தை ஆடினர். அங்கிருந்து இந்தியர்கள் இதை அறிந்து கொண்டனர்.ஆங்கிலேயர் இதை இந்தியர் களிடமிருந்து சுற்றுக்கொண்டு. 1850க்குப் பிறகு சில மாறுதல்களுடன் இங்கிலாந்தில் இதைப் பரப்பினர். அங்கிருந்து அமெரிக்கா விற்கும் மற்ற நாடுகளுக்கும் இந்த விளை யாட்டு பரவியது. போலோ ஆட்டக்களம் 275 மீட்டர் நீளமும் 138 மீட்டர் அகலமும் உள்ள புல்தரை. அகலப் பக்கங்களின் நடுவில் 8 மீட்டர் இடைவெளியில் இரண்டிரண்டு கம்பங்கள் நடப்பட்டிருக்கும். இக் கம்பங் களுக்கு இடையில் பந்து செல்லுமாறு அடித்து 'கோல்' (Goal) டும். பத்து வெள்ளை வர்ணம் தீட்டப் பட்டிருக்கும். பந்தை அடிக்கப் பிரம்பு அல்லது மூங்கிலினாலான 34 நீளமுள்ள கழியை ஆட்டக்காரர்கள் பயன்படுத்துவர். போடவேண் மீட்டர் இவ்விளையாட்டில் இரு கட்சிகள் இருக் கும். ஒவ்வொரு கட்சியிலும் கட்சியிலும் நான்கு ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். எதிர்க் கட்சியின் கோலினுள் பந்தை அடிப்பதே ஆட்டத்தின் குறிக்கோள். ஆட்டக்காரர் கள் விதிகளை மீருமல் பார்த்துக்கொள்ள இரண்டு நடுவர்கள் இருப்பார்கள். குறிப் பிட்ட நேரத்திற்குள் அதிகமான கோல் போடும் கட்சியினர் வெற்றி பெற்றவர் களாவர். போலோ மிக விரைவான ஓர் ஆட்டம். இதை விளையாடுவதற்கு ஆட்டக்காரர்கள் குதிரைகளை வேகமாக ஓட்டும் திறமை பெற்றிருக்க வேண்டும். குதிரைகள் விரை வாகப் புறப்படவும். ஓடவும், நின்று திரும்பவும் தக்க பயிற்சி பெற்றவையாக இருக்கவேண்டும். போலோ, மார்க்கோ (Marco Polo, 1254-1324): பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தரைவழியாகவே பல மலைகளை யும் பாலைவனங்களையும் கடந்து ஐரோப்பா விலிருந்து கிழக்கு ஆசியா வரை பயணம் செய்தவர் மார்க்கோ போலோ. இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இத்தாலி நாட்டில் வெனிஸ் நகரிலிருந்து 1271-ல் புறப்பட்டு பாக்தாத், பாரசீகம் (FFIT IT GOT), ஆப்கானிஸ்தானம், பாமிர் மலைகள், கோபி பாலைவனம் வழியாக மூன்றரை ஆண்டுகள் பயணம் செய்து சீனாவில் உள்ள பீக்கிங் நகரை அடைந்தார். அப்போது ஆசியாவின் பெரும்பகுதியை ஆண்டுவந்த கூப்ளைக்கான் என்பவரைப் பீக்கிங்கில் சந்தித்தார் மார்க்கோ