பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 பௌத்த மதம் - பௌதிகம் துறந்தார். இத்துன்பங்களைப் போக்குதற் சூரிய வழிகளைக் காண உறுதி பூண்டு, கடுத்தவம் புரிந்தார். இறுநிவில் ஞானம் பெற்று நல்வழிகளைக் கண்டார். 'உலக வாழ்க்கை துன்பமயமானது. தன்னலமும் ஆசையுமே துன்பங்களுக்கெல் லாம் காரணம். ஆசையை விட்டொழிப் பதே துன்பங்களிலிருந்து விடுதலை பெற வழி. கொலை, களவு, பிறர் மனைவியை விரும்புதல், பொய்மை, பழிச்சொல், தீச் சொல், பயனில்லாச்சொல், பகைமை, பொருமை, அவநம்பிக்கை ஆகிய பத்துக் குற்றங்களையும் நீக்கி, தூய நம்பிக்கை, தூய குறிக்கோள், தூய சொல், தூய நடத்தை, தூய தொழில், தூய முயற்சி தூய சிந்தனை, தூய தியானம் ஆகிய எட்டு அறநெறிகளையும் கடைப்பிடித்தால் பிறவா இன்பமாகிய பேரின்பம் பெறலாம்' என்பன இவர் கண்ட உண்மைகள். இவற்றை நாடெங்கும் சென்று மக்களுக்கு எடுத் துரைத்தார். இலையே பெளத்த மதத் தின் அடிப்படைக் கொள்கைகளாயின. புத்தரின் சீடர்கள் பௌத்த மதத்தை வட இந்தியா முழுதும் பரப்பினர். கி.மு. 270- இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட அசோகர் (த.க.) பெளத்த மதத் தில் சேர்ந்து. தென்னிந்தியாவிலும், இலங்கை, கம்போடியா முதலிய நாடுகளி லும் இம்மதத்தைப் பரப்பினார், பின்னர் பர்மா, தாய்லாந்து, லாவோஸ், சீனா, கொரியா, மங்கோலியா. திபெத்து, ஜப்பான், வியட்நாம் முதலிய ஆசிய நாடு களிலும் இம்மதம் பரவியது. ஆனால். இந்தியாவில், இந்து சமய மறுமலர்ச்சி யாலும், இஸ்லாம் மதம் பரவியதாலும், பௌத்த மதத்தின் செல்வாக்கு குறைந் தது. இன்று இந்தியாவில் பௌத்த மதத் தைச் சேர்ந்தவர்கள் சுமார் 35 இலட்சம் பேர்களே உள்ளனர். கனிஷ்கர் என்னும் மன்னர் காலத்தில் பௌத்த மதம் ஹீனயானம், மகாயானம் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஹீன யானத்தைச் சேர்ந்தவர்கள், புத்தரைச் சில வாழ்க்கை விதிகளை வகுத்த ஒரு மனிதர் என்று கருதுகின்றனர். மகா யானத்தைச் சேர்த்தவர்கள் புத்தரைக் கடவுளாகக் கருதி, அவருக்குக் கோயில் கட்டி வழிபடுகின்றனர், பௌத்தத் துறவிகள் தங்கியிருந்த மடங்களை விகாரைகள் என்பர். இவை கல்வியை வளர்க்கும் கலைக்கூடங்களாக விளங்கின. பௌத்தர்கள் பண்டைத் தமிழகத்தில் பல பள்ளிகள், மடங்கள், கோயில்கள், அறச்சாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றை நடத்தி வந்தார்கள். பௌத்தர்கள் வடமொழியிலும் தமிழி லும் இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளனர். புத்தர் ஞானம் பெற்ற இடமாகிய புத்த கயா (பீகார்), அவர் புத்த மதத்தைப் போதிக்கத் தொடங்கிய இடமான சாரநாத் (த.சு.) ஆகியவை பௌத்தர்களின் புண்ணியத் தலங்களாகும். மண், பௌதிகம் (Physics) : நீர், மலை, தாதுப்பொருள்கள், காற்று, வாயு முதலியவை உயிரில்லாதவை இவை போன்ற பல்வேறு பொருள்களின் அமைப்பு, த ன்மைகள், பயன்கள் முதலியவற்றை ஆராய்ந்தறிவது பௌதி கம் எனப்படும். 'சக்தி' (Energy) என்பது வேலை செய்யக்கூடிய ஆற்றல். வெப்பம், ஒளி, ஒலி போன்றவை சக்தியின் வெவ் வேறு வடிவங்களேயாகும். இவற்றின் இயல்புகள், இயக்கங்கள் பற்றி ஆராய் வதும் பெளதிகமாகும். மின்சாரம், ஈர்ப்பு முதலியவற்றை இயற்கை விசைகள் (Natural Forces) என்பார்கள். இவை குறித் தும் பௌதிகம் ஆராய்கிறது. மின்சார தொழிற்சாலைகளில் பலவிதமான எந்திரங்களையும் கருவிகனையும் பயன் படுத்துகிறோம். நம் அன்றாட வாழ்வில் கடிகாரம், சைக்கிள், கார், அடுப்பு.வானெலி, தொேைபரி முதலிய எத்தனையோ சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறேம். இவை எல்லாம் ஏதாவது ஒரு பௌதிக விதியின் அடிப்படையில் அமைந்த வையே. பௌதிக ஆராய்ச்சிகளின் மூலமாகப் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. சாதாரணமாகத் திரவநிலையில் உள்ள நீரைச் சூடாக்கினால் அது ஆனியாகி வாயு நிலையை அடைகிறது. அதே நீரைக் குளிர வைத்தால் உறைந்து திடநிலையைப் பெறு கிறது. இதற்கு என்ன காரணம் என்பதைப் பௌதிகம் விளக்குகிறது. இரும்பைவிட வெண்ணெய் எனிதில் உருகுவதேன்? பாலில் போடும் சர்க்கரை மறைவது எப்படி? வானொலி, தொவைக்காட்சி, தொலைபேசி. காமிரா முதலியவை எவ்வாறு வேலை செய்கின் தன? இடியோசையைக் கேட்கும் முன்பே நம் கண்ணுக்குத் தெரிவதேன்? மிகத் தொலைவிலுள்ள நட்சத்திரங்களின் ஒளி நமக்கு எவ்வாறு புலப்படுகிறது? ஒலி, ஒளி என்ன வேகத் தில் செல்கின்றன? வானவெளியில் பயணம் செய்யும்பொழுது என்னென்ன மாறுதல்கள் உண்டாகின்றன? அருவிகள். மின்னாக்க நிலையங்களை எவ்விதம் இயக்கு மின்னலின்