பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பௌதிகம் — மக்கள்தொகை கின்றன? இவற்றுக்கெல்லாம் பௌதிகம் விளக்கம் தருகிறது. வெப்பம், ஒளி, ஒலி, மின்சாரம், காந் தம், எந்திரவியல், அணுசக்தியியல், கதி ரியக்கவியல் என்று பௌதிகத்தில் பல பிரி வுகள் உள்ளன. எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு சக்தியை வேறு வகைச் சக்தியாக மாற்றலாம். ஆனால் எந்த ஒரு சக்தியையும் புதிதாக உற்பத்தி செய்யவோ, அடியோடு அழித்துவிடவோ இயலாது என்பது பௌதிகத்தின் அடிப் படை விதியாகும். பௌதிகத்தின் சில பிரிவுகள் குறித்துப் பண்டைக்கால முதலே ஆராய்ந்தறிந் துள்ளனர். எனினும் 16, 17ஆம் நூற் றாண்டுகளில்தான் பௌதிகம் மிக வேகமாக வளர்ந்தது. கொள்கையளவில் நிலவிவந்த கருத்துகளைப் பரிசோதனைகள் மூலம் உண்மை என்று காண்பிக்கும் முறை அப்பொழுதுதான் தோன்றியது. ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பினால் பெனதிகம் இன்றுள்ள நிலைக்கு முன்னேறி யுள்ளது. ஆர்க்கிமிடீஸ், காலிலீயோ, நியூட்டன், பாரடே, டேவி, எடிசன், ரன்ட்கன், ஐன்ஸ்ட்டைன் போன்றவர்கள் பௌதிகத் துறையில் அழியாப்புகழ்பெற்று விளங்குகிறார்கள். இந்திய பௌதிக விஞ்ஞானிகளுாள் நோபெல் பரிசு பெற்ற சர் சீ.வி. ராமன், சர் ஜே. சி. போஸ், ய 69 எச்.ஜே. பாபா முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள். விஞ்ஞானிகளுக்கும் பொறியியல் அறிஞர்களுக்கும் பொது மக்களுக்கும் பலவகைகளிலும் பௌதிகம் பயனுடைய தாக இருக்கிறது. குடாக்கிய திரவங்கள், வாயுக்கள் இவற்றின் இயக்கம் பற்றிய உண்மைகள், ஆழ்கடல் ஆராய்ச்சியில் நீரோட்டங்களை விளக்கவும் வானிலை ஆராய்ச்சியில் வானிலையை முன்னதாக அறிவிக்கவும் உதவுகின்றன. வெப்பம் பற்றிய பௌதிக உண்மைகள் மோட்டார் கார், விமான எஞ்சின்களையும், குளிர் சாதன எந்திரங்களையும் அமைக்கத் துணை புரிந்தன. மின்சாரம், காந்தம் பற்றிய பரிசோதனைகளினால் மின்விளக்கு, மின்சார மோட்டார், வானொலி, தொலைபேசி முதலியன கண்டுபிடிக்கப்பட்டன. பௌதிகத்தின் சாதனைகள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகின்றன. மக்கள்தொகை : குழந்தைகள் கலைக் களஞ்சியத்தில் ஒரு நாட்டைப் பற்றியோ ஒரு நகரத்தைப் பற்றியோ நீங்கள் படிக் கும்போது அதன் மக்கள்தொகை குறிப் பிடப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அந்த நாட்டில் அல்லது நகரத்தில் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள் என்பதை குறிக்கும். வானொலி அணுசக்தி அது வெப்பம் ஒலி ஒளி பௌதிகத்தின் பிரிவுகள் சில 10 எந்திரவியல் மின்சாரம் காந்தம்