பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1 74 மகேந்திரவர்மன் - மங்கோலியா மகதநாட்டில் பாடலிபுத்திரத்திற்கு அருகில் குண்டலபுரம் என்ற ஊரில் கி.மு. 599-ல் இவர் பிறந்தார். இவருடைய தந்தை சித்தார்த்தர் ஒரு சிற்றரசர். இளமையிலேயே வர்த்த மானரின் மனம் துறவறத்தை நாடியது. அரச குடும்பத்தில் பிறந்த இவர் முப்பதாம் வயதில் தம்முடைய செல்லத் தையெல்லாம் மக்களுக்கு வழங்கிவிட்டுத் துறவியானர். கடுந்தவம் புரிந்து சீரிய ஞானம் பெற்றார். கடுந்தவத்தினால் விருப்புவெறுப்புகளை வென்றதால் இவரை 'மகாவீரர்' என்று அழைக்கலாயினர். . இவருக்கு முன்பே சமண மதம் இந்தியாவில் இருந்துவந்தது. சமண மதத் தின் கொள்கைகளை வருத்தவர்கள் தீர்த் தங்கரர்கள் (த.க.). இவர்கள் 24 பேர். இவர்களில் முதலாமவர் ரிஷப தேவர். தீர்த்தங்கரர்களின் வழிநின்று கொல் லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர் மனை நயவாமை, பேராசையின்மை முதலிய நல்லறங்களை மகாவீரர் மக்களுக் குப் போதித்தார். இவரைக் கடைசித் தீர்த்தங்கரர் என்பார்கள். மகாவீரர் இல்லறம், துறவறம் இரண் டையும் மக்களுக்குப் போதித்தார். இல்லறமே நல்லறம். இல்லறம் நடத்திய பின் வீடுபேறு பெற விரும்புவோர் துறவறம் மேற்கொள்ளவேண்டும்' என்று இவர் வலியுறுத்தினார். இவ்விரு அறநெறி களுடன் உலகியல் அரசியல் முறைகளையும் போதித்தார். இவருக்குப் அரசர் களும் அறிஞர்களும் சீடர்களாயினர். மகாவீரர் தம் 72ஆம் வயதில் பவாபுரி என்னும் இடத்தில் மறைந்தார். பல மகேந்திரவர்மப் பல்லவன்: பாறை களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில் களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இத்தகைய கோயில்களைத் தென்னிந்தியா வில் முதன்முதலாக அமைத்தவர் முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் ஆவார். இவர் காஞ்சீபுரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட பல்லவ (த.க.) அரசர்களில் சிறத்தவர், இவருக்கு விசித்திரசித்தன், குணபரன் சேத்தகாரி பரம மகேசுவரன், மத்த விலாஸன் என்ற சிறப்புப் பெயர்களும் இருந்தன. இவருடைய தந்தை சிம்மவிஷ்ணு. மகேந்திரவர்மன் கி.பி. 600 முதல் 630 வரை ஆட்சி செய்தார், இவர் தம் ஆட்சியின்போது, வடக்கே கோதாவரி முதல் தெற்கே திருச்சிராப்பள்ளிவரை பல்லவ அரசை விரிவுபடுத்தினார். மகேந்திரன் முதலில் சமணராயிருந் தார். அப்போது அவர் பிற மதத் வல்லவர். பின் தினரைத் துன்புறுத்திவந்தார். திருநாவுக்கரசர் (த.க.) என்னும் அப்பர் பெருமானால் சைவரானூர், வடமொழியி லும், இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளிலும் இவர் 'மத்த விலாசப்பிரகசனம்' என்ற நாடகத்தை வடமொழியில் இவர் எழுதினார். இவர் காலத்தில் கலைகள் ஓங்கி வளர்த்தன. வல்லம், மகேந்திரவாடி. தளவானூர் முதலிய இடங்களில் குடைவரைக் கோயில் களை அமைத்தார். உலகப்புகழ் பெற்ற கற்கோயில்களையுடைய மாமல்லபுரம் (த.க.) நிறுவும் பணியை இவரே தொடங் கினார். இப்பணியை இவருடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் (த.க.) நிறைவேற்றினார். திருச்சி மலைக்கோட்டை, மண்டகப்பட்டு, குடுமியாமலை போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகள் இவருடைய பெருமையைக் கூறுகின்றன. மங்கம்மாள்: தமிழ்நாட்டில் மதுரை யைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட புகழ்பெற்ற அரசி மங்கம்மாள். இவர் மன்னரான சொக்க மதுரை நாயக்க நாத நாயக்கருடைய மனைவியாவார். இவருடைய மகன் நான்காம் முத்து வீரப் பர் ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தபின் நோய்வாய்ப்பட்டு 1689-ல் இறந்தார். பின்னர் மங்கம்மாள் தம் பேரனாகிய இரண்டாம் சொக்கநாதருக்குக் காப்பாள ராக இருந்து நிருவாகத்தை நடத்தினார். மங்கம்மாள் திறமை வாய்ந்தவர்; வள்ளல். இவருடைய முன்னோரான திருமலைநாயக்கருடைய ஆட்சிபோன்று இவருடைய ஆட்சியும் சிறப்புற்றிருந்தது. 1693ஆம் ஆண்டில் ஒளரங்கசீப்பின் படைத் தவர் ஸுல்பிகர் கான் படையெடுப்பைத் தவிர்க்க எண்ணி மொகலாயருக்குக் கப்பம் கட்ட மங்கம் மாள் இசைந்தார். 1701-ல் மைசூர் அரசருக்கு எதிராகத் தஞ்சை மராட்டிய மன்னருடன் இவர் போர் உடன்படிக்கை செய்துகொண்டார். மங்கம்மாள் தாம் ஆட்சி செய்த 17 ஆண்டுக் காலத்தில் சாலைகள், 'சத்திரங் கள். குளங்கள், தங்கும் விடுதிகள் முதலியவற்றை அமைத்தார். கோயில் திருப்பணி போன்ற அறச் செயல்களையும் மேற்கொண்டார். 1706-ல் சொக்கநாதர் பட்டத்திற்குரிய வயது அடைந்ததும் அவரிடம் இவர் ஆட்சியை ஒப்படைத் தார். அதே ஆண்டில் இவர் காலமானார். மங்கோலியா : ஆசியாக் கண்டத் திலுள்ள ஒரு குடியரசு நாடு மங்கோலியா. ரஷ்யாவுக்கும் சினாவுக்கும் இடையில் இது