பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 மண் மட்பாண்டம் முதலிய மாவட்டங்களில் செய்யப்படும் மட்பாண்டங்கள் புகழ்பெற்றவை. மண் (Soil) : பூமியின் மேற்பரப் பில் சுமார் 15 முதல் 20 சென்டிமீட்டர் கணத்திற்கு மண் உள்ளது. மண்ணுக்குக் கீழே அடிமண்ணும் (Sub-soil), அதற்கும் அடியில் பாறையும் இருக்கும். மண்ணில் மட்கிப்போன தாவரங் களும், விலங்கு உடல்களும், தாது உப்பு களும், நுண்ணுயிர்களாகிய பாக்ட்டீரியங் களும் (த.ஈ) (5.8.) கலந்திருக்கும். இவை தவிரக் களிமண்ணும், மணலும் (த.க.) சிறு கற்களும் உள்ளன. தாவரங்கள் நமக்கு முக்கிய உணவா கின்றன. தாவரங்களின் வளர்ச்சிக்கு நிலத்திலுள்ள மண்தான் முக்கியம். தாவரங்கள் மண்ணிலிருந்து தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெறு கின்றன. மலை அடிவாரத்தில் சிறிய கற்கள் நிரம்பியிருக்கின்றன. இந் நிலம் சரளை நிலம் எனப்படும். இதில் நீர் தங்காது. ஆகவே தாவர வளர்ச்சிக்கு இது ஏற்றதல்ல. மிகுதியாக மணல் உள்ள இடங்களில் தாவரங்கள் போதிய நீரைப் பெறவும் வேர்கள் பற்றிக்கொள்ளவும் வழியில்லை. இதுவும் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதாகாது. களிமண்ணில் நீரும் காற்றும் உட்புகாமல் மேலேயே தேங்கி நிற்கும். இதில் தாவரங்களின் வேர் இறங்குவது கடினம். தாவரங்களும், விலங்குகளும் மடிந்த பிறகு, மட்சி மண்ணோடு கலந்து விடுகின் றன. சாணம் போன்ற எருவும் சேர்ந்து இம்மண் ஓரளவு பக்குவமடைகின்றது. இவ்வகை மண்ணில் இரண்டு பங்கு மண்புழு கலிமண்ணும் மூன்று பங்கு மாலும் கவத் திருக்குமானால், இது செழிப்புள்ள வண் டல்மண் (Loam) ஆகும். இம்மண் இறுகிக் கெட்டியாகாமல் உதிரியாக இருக்கும். எனவே காற்று உட்புக முடியும். இதில் வேண்டிய அளவு நீர் தங்கும். வேர் எளிதாகவும் பரவும். தாவர வளர்ச்சிக்கு இம்மண் சிறந்தது. கரிசல்மண் கறுப்பாக இருக்கும். இதில் மணல் மிகக்குறைவாகவும் வண்டலும், களிமண்ணும் சற்று மிகுதியாகவும் இருக் கும். பருத்தி விளைவதற்கு இம்மண் ஏற்றது. மண்ணின் வளம் குறைந்தால் பசுந் தழை உரம் அல்லது ரசாயன உரமிட்டு அதைச் செழிப்பாக்கலாம். மண்புழு : மழைகாலத்தின்போது மண்புழு ஊர்த்து ஊர்ந்து செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது புழுவில் (த.க.) ஒரு வகை. இதற்கு நாங்கூழ் என்றும் பெயர் உண்டு. மண்புழு உலகெங்கும் காணப்படு கிறது. இவற்றில் ஆயிரக்கணக்கான இனங்கள் உண்டு. இவற்றுள் சில, மூன்று சென்டிமீட்டர் நீளமே இருக்கும்; மற்றும் சில, மூன்று மீட்டர் வரை நீளமிருக்கும். இந்தப் பெரிய புழுக்களைப் பாம்பு என்று கருதி மக்கள் மருள்வதும் உண்டு. மண்புழுவின் உடல் பல வளையங்கள் ஒன்றுடன் ஒன்று வரிசையாக இணைக்கப் பட்டதுபோல் இருக்கும். ஒவ்வொரு வளையமும் ஒரு கண்டம் (Segment) எனப்படும். உடல் முழுவதையும் ஒளிபுகக் கூடிய மெல்லிய தோல் மூடியிருக்கும். இத்தோல் வழியாகவே மண்புழு மூச்சு விடும். இவ்வாறு மூச்சுவிட இதன் தோல் எப்போதும் ஈரமாக இருக்கவேண்டும். தோல் உயர்ந்துபோனால் மூச்சுவிட முடியாமல் மண்புழு இறந்துவிடும். ஆனால் நீருக்குள்ளேயும் இது வாழமுடியாது. எனவேதான் மழைகாலத்தில் இது தரைக்கு மேலே வந்துவிடுகிறது. மண்புழு மண்ணைக் குடைந்து அந்தக் குடைவிலே வாழ்கிறது. இது மண்ணைக் குடையும் முறையே வேடிக்கையாக இருக் கும். ஆணியால் மண்ணைக் குடைந்தால் மண் ஆணிக்குள்ளே செல்லாது. ஆனால் மண்புழு குடையும்போது அதன் வாய் திறந்திருக்கும். அதன் வழியாக மண் உள்ளே செல்லும். அந்த மண்ணிலுள்ள சிறு உயிர்களும் மட்கிய தாவரச்சத்து களும் இதற்கு உணவாகின்றன. எஞ்சிய மண் வால்புறமாக வெளியே வந்துவிடும். மண்புழுவுக்குக் கண், காது இல்லை. எனினும் ஒளியையும் அதிர்ச்சியையும்