பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மணிப்புரி நடனம் - மத்திய அமெரிக்கா வழங்கிவரும் ஒரு வகை நாட்டியம் மணிப் புரி நடனமாகும். இது மணிப்புரி மக்களின் சுடவுள் வழிபாட்டிலும் சமூக வாழ்க்கையிலும் கலந்து இன்பமும் ஊக்க மும் அளித்து வரும் பழைய கலையாகும். பௌர்ணமி நாளன்று இரவு முழுதும் மணிப்புரி நடனம் நடைபெறும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் உண்டு. பெரும்பாலும் அது கிருஷ்ணன் கோயிலாக இருக்கும். எல்லாக் கோயில் களிலும் நடன அரங்கு இருக்கும். ஆண்கள் மட்டும் ஆடும் நடனமும், மணமாகாத பெண்கள் ஆடும் தனிவகை நடனமும் உண்டு. இவை தவிர இருவரும் சேர்ந்து ஆடும் நடனங்களும் உள்ளன. 18ஆம் நூற்றாண்டில் மணிப்புரியை ஆண்ட மன்னர் ஜெயசிங் ஜெயசிங் காலத்தில் கிருஷ்ணன் கோயில்கள் எழுப்பப்பட்டு ராதை, கோபிகையருடன் கிருஷ்ணன் ஆடிப்பாடி மகிழும் 'இராச லீயை' நடனங் கள் தொடங்கின. இம்ப்பாலிலிருந்து பைகோ சந்திர மகா ராஜா அளித்த உதவியாலும் ஆதரவாலும் இந்த நாட்டியம் புத்துயிர் பெற்றது. கவியரசர் டாகுர் போன்றவர்களின் ஊக்கத்தாலும் இக்கலை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. கண்ணனின் குறும்புச் செயல்களை விளக்கும் 'இராச லீலை நடனங்கள், சிவன் - பார்வதி நடனம், ஆனந்த தாண் டவ நடனம், பழங்குடி மக்கள் ஆடும் மணிப்புரி நடனம் 79 நடனங்கள் இன்று ஆடப்படுகின்றன. மிருதங்கம், குழல், 'பெனாங்' என்னும் இசைக்கருவி முதலியவை இசைக்கப் படுகின்றன. நடிகர்கள் பாடிக்கொண்டே ஆடுவார்கள்; பின்னணிப் பாடல்களுக்கு ஏற்ப ஆடுவதும் உண்டு. மணிப்புரி நடனத்துக்காகப் பல வண்ண ஆடைகள் அணிவார்கள். இந் நாட்டியத்தில் நளினமான உடல் அசைவுகள் வியக்கத்தக்கவையாக இருக் கும். பாதத்தின் முற்பகுதியை ஊன்றிக் குதிகாலைச் சிறிது தூக்கி ஆடுவார்கள். முன் பாதங்கள் தரையில் பதியச் சுழன் நாடுவது மணிப்புரி நாட்டியத்தின் தனிச் சிறப்பு. இன்று பலநாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்கின்ற வகையில் மணிப் புரி நடனம் அமைந்திருக்கிறது. உலகப் புகழ்பெற்றுள்ள இந்திய நடனங்களில் இதுவும் ஒன்று. மத்திய அமெரிக்கா : வட அமெரிக் காக் கண்டத்திற்கும் தென் அமெரிக்காக் கண்டத்திற்கும் இடையிலுள்ள குறுகலான நிலப் பகுதி மத்திய அமெரிக்கா. இதில் ஏழு நாடுகள் உள்ளன. அவை குவாட்டெ மாலா, எல் சால்வடார், ஹாண்டுராஸ், நிக்கராகுவா, காஸ்ட்ட ரீக்கா, பானமா ஆகிய குடியரசு நாடுகளும், பிரிட்டனின் குடியேற்றப் பகுதியான பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் நாடும் ஆகும். மத்திய அமெரிக்காவுக்குக் கிழக்கில் கரிபியன் கடலும், மேற்கில் பசிபிக் சமுத்திரமும் உள்ளன. சுமார் 1,25,00,000 மக்கள் இங்கு வாழ்கின்றனர். கடற்கரைப் பகுதிகள் தாழ்வான சமவெளிகளாகும். இங்கு வெப்பமும் மழையும் அதிகம். மக்கள் வாழ்வதற்கு இவை ஏற்றவை அல்ல. ஆனால் இங்கு வாழை மிகச் செழிப்பாக வளர்கிறது. வாழைத் தோட்டங்கள் பெருமளவில் இருப்பதால் இந்நாடுகளை 'வாழைக் ருடியரசுகள்' என்று சொல்வதுண்டு. கரும் பும் பருத்தியும் இங்கு மிகுதியாகப் பயிராகின்றன. காடுகளும் அடர்ந்து வளர்ந்துள்ளன. மரம் வெட்டுதல் இங்கு முக்கியத் தொழில், மத்திய பகுதி உயர்ந்த மலைப்பிரதேச மாகும். இங்குப் பல எரிமலைகள் உள்ளன. மலைகளுக்கும் சமவெளிகளுக்கும் இடைப் பட்ட பீடபூமி இதமான வெப்புநிலை கொண்டது. மக்களிஸ் பெரும்பாலோர் இங்குதான் வாழ்கின்றனர். காப்பியும் சோளமும் மிகுதியாக விடைாகின்றன. காப்பி இந்நாடுகளின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். இங்குக் கால்நடைகளும் வணர்க்கப்படுகின் றன.