பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மத்தியப் பிரதேசம் - மத்துவாசாரியார் வழியே செல்லும் பயணம் குறுகிய வழியாயிற்று; எனவே கப்பல் போக்கு வரத்து மேலும் அதிகமாயிற்று. பெரும் பாலும் எல்லா நாடுகளின் கப்பல்களும் இக்கடல் வழியாகவே செல்கின்றன. பார்சலோன, மார்சேல்ஸ், ஜெனோவா நேப்பிள்ஸ், வெனிஸ், டிரியெஸ்ட்டே, ஆல்ஜியர்ஸ், அலெக்சாந்திரியா முதலியன இக்கடலின் கரையிலுள்ள முக்கிய துறைமுகங்கள். பண்டைக் காலத்தில் இக்கடலை அடுத் துத்தான் பல சிறந்த நாகரிகங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன. எகிப்தியர். அசிரியர், பாபிலோனியர், கிரேக்கர், ரோமானியர் நாகரிகங்கள் இவற்றுள் முக்கியமானவை. மத்தியப் பிரதேசம் : இந்தியாவி லுள்ள மாநிலங்களில் மிகப் பெரியது. மத்தியப் பிரதேசம். இதன் பரப்பு 4,43,430 சதுர கிலோமீட்டர். நாட்டின் மத்தியப் பகுதியிலிருப்பதால் இது இப் பெயர் பெற்றது. வடக்கில் உத்தரப் பிரதேசமும், கிழக்கில் பீகார், ஒரிஸ்ஸா மாநிலங்களும் தெற்கில் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங் களும் மேற்கில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களும் உள்ளன. மத்தியப் பிரதேசத்தின் மக்கள்தொகை 4,14,49,700 (1971). மக்களில் பெரும் பாலோர் உழவர்கள். பில் (Bhil), கோண்டு (Gond) முதலிய ஆதிக்குடி இனத்தவர் பலர் இங்கு வாழ்கின்றனர். இம் மாநிலம் பெரும்பாலும் பீடபூமி யாகும். விந்திய மலைகளும் சாத்புரா மலை களும் இங்கு உள்ளன. யமுனை ஆற்றின் துணையாறுகளான சம்பல், சிந்து, பேட்வா ஆகியனவும், சுங்கையுடன் இணையும் சோன் ஆறும், நருமதை, தபதி, மகாநதி ஆறுகளும் இங்கு உற்பத்தியாகின்றன. மலைகளிலும் பீடபூமியிலும் அடர்ந்த காடு கள் வளர்ந்துள்ளன. இக்காடுகளில் தேக்கு போன்ற பயன்மிக்க மரங்கள் இருக்கின்றன. புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி, காட்டெருமை முதலிய விலங்கு கள் இங்கு வாழ்கின்றன. ரேவா என்னு மிடத்தில் சில வெள்ளைப் புலிகள் வாழ் கின்றன. உலகில் வேறெங்கும் வெள்ளைப் புலிகள் இல்லை. கானா கானா என்னுமிடத்தில் மான்களின் புகலிடம் உள்ளது. கோதுமை, தெல், சோளம், கரும்பு. பருத்தி முதலியன முக்கிய விளைபொருள் கள். இம் மாநிலத்தில் தாதுவளம் மிகுதி. இரும்பு, நிலக்கரி, மாங்கனீஸ், கண்ணும் புக் கல் முதலியன கிடைக்கின்றன. பன்னா என்னுமிடத்தில் வைரக் கற்கள் கிடைக் 81 மத்தியப் பிரதேசத்தில் சாஞ்சி என்னுமிடத்திலுள்ள தூபி கின்றன. தாதுவளம் மிகுதியாகக் கிடைப் பதால் பெரிய தொழிற்சாலைகள் இங்கு. உள்ளன. இந்தியாவிலேயே மிகப் பெரிய சிமென்டுத் தொழிற்சாலை இங்கு உள்ளது. நாட்டின் மிகப் பெரிய இரும்பு எஃகு ஒன்று ஆலைகளுள் இங்கு என்னுமிடத்திலிருக்கிறது. பத்திரிகை களுக்கு ஏற்ற காகிதம் தயாரிக்கும் பெரிய ஆலையும் பிற தொழிற்சாலைகளும் இம்மாநிலத்திலுள்ளன. பிலாய் மத்தியப் பிரதேசம் கலைச்சிறப்பு மிக்கது. அசோகரால் அடித்தளமிடப் பட்ட சாஞ்சித் தூபியும், பாக் (Bagh), உதயகிரி ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோயில்களும், உதயப்பூர், காஜுராஹோ குவாலியர், சியாரஸ்ப்பூர் ஆகிய இடங் களிலுள்ள கோயில்களும் புகழ்பெற்றவை. உஜ்ஜயினி இந்துக்களுக்குப் புண்ணியத் தலம். 18ஆம் நூற்றாண்டில் ஜெய்சிங் என்ற அரசரால் கட்டப்பட்ட வானிலை ஆராய்ச்சி நிலையங்களுள் ஒன்று இங்கு உள்ளது. போப்பால் இம்மாநிலத்தின் தலைநகரம். இந்தூர், ஜபல்பூர், ராய்ப்பூர், பிலாஸ்பூர் முதலியவை மற்ற முக்கிய நகரங்கள். மத்துவாசாரியார் (1118-1198): வைணவ சமயத்தைப் பரப்பிய பெரியார் களில் ஒருவர் மத்துவர். மைசூர் மாநிலத் தின் ஒரு பகுதியாகிய தென் கன்னடத்தில் சிவரூப்யம் என்ற கிராமத்தில் மத்துவர் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் மத்திய சேகர பட்டர்; தாய் வேதவதி. மத்துவருடைய இயற் பெயர் வாசுதேவர். இவரை ஆனந்த தீர்த்தர், தீர்த்தர், அனுமான தீர்த்தர் என்றும் அழைப்பார்கள்.