பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 லியனார்டோ டா வீன்சி பாராட்டுதலைப் பெற்றார். தம் சொந்த மாநிலத்தில் காங்கிரஸில் பல பொறுப் புகளை ஏற்றுத் தொண்டாற்றினார். லால் பகதூர் 1950-ல் அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளரானார். 1952 முதல் 1964 வரை மத்திய அமைச் சரவையில் ரெயில்வே அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராகவும், வர்த் தக அமைச்சராகவும் பணியாற்றினார். 1964 மே 27-ல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு (த.க) காலமான பிறகு, ஜூன் 9-ல் லால் பகதூர் பிரதமரானார். 1965 செப்டெம்பரில் பாக்கிஸ்தான் இந்தியாமீது திடீர்த் தாக்குதல் தொடுத் தது. இவர் இந்தியப் படைகளை அனுப்பிப் பாக்கிஸ்தான் படையைத் தோற்கடிக் கச் செய்தார். சமரசப் பேச்சு நடத்துவ தற்காக லால் பசுáரையும், பாக்கிஸ் தான் குடியரசுத் தலைவரையும் தம் நாட் டுக்கு ரஷ்யப் பிரதமர் அழைத்தார். லால் பகதூர் அங்கு சென்று, தாஷ்க்கென்ட் நகரில் நடந்த சமரசப் பேச்சுகளில் கலந்து கொண்டார். இப் பேச்சுகளில் இவர் காட் டிய அரசியல் அறிவையும் பெருந்தன்மை யையும் கண்டு உலக நாடுகள் வியந்து பாராட்டின. 1966 ஜனவரி 10-ல் இந்தியா-பாக்கிஸ்தான் சமாதான உடன் படிக்கை தாஷ்க்கென்டில் கையெழுத் தாயிற்று. கையொப்பமிட்ட சில மணி நேரத்திற்குள் லால் பகதூர் மாரடைப் பினால் காலமானார். வால் பகதூர் தம் வாழ்நாள் முழுதும் நாட்டுப் பணியிலேயே ஈடுபட்டிருந்தார். மிகவும் எனிய வாழ்க்கை நடத்தினார். துணிந்து முடிவெடுக்கும் திறனும், அம் முடிவைச் செயலாக்கும் செயலுறுதியும் உடையவராக இவர் விளங்கினார். லியனார்டோ டா வீன்சி (Leonardo da Vinci. 1452-1519): பல்வேறு துறை களில் சிறந்து விளங்கிய மேதை லியனார்டோ டா வீன்சி. இவர் சிறந்த ஓவியராகவும், சிற்பியாகவும், கட்டடக் கலையூராகவும், இசை மேதையாகவும் விளங்கினார். விஞ்ஞானத் துறையிலும் இவருடைய அறிவுத் திறமை வியக்கத் தக்கதாக இருந்தது. மேலும் கணிதம். பொறியியல், தாவரவியல், உயிரியல், வாளவியல் ஆகிய துறைகளிலும் இவர் பேரறிஞராக விளங்கினார். பறவைகள் பறப்பதைக் கூர்ந்து கவனித்து வானத்தில் பறப்பதற்கென்று சறுக்கு விமானத்தின் மாதிரி ஒன்றை இவர் வரைந்தார். போருக்குப் பயன்படும் டாங்கிகளையும். படைக் கலங்களையும் உருவாக்குவதற்குப் படங்களை வரைந்தார். மனிதனின் உட லியனார்டோ டா வீன்சி லமைப்பைப் பற்றியும் இவர் விளக்கமான குறிப்புகளை எழுதியுள்ளார். இத்தாலியில் பிளாரன்ஸ் அருகே வீன்சி என்னும் கிராமத்தில் வியனார்டோ பிறத் தார். இசையிலும் சித்திரம் வரைவதிலும் இவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. ஓவியக் கலையைப் பயின்று பல அழகான ஓவியங்களை இவர் வரைந்தார். 1478-ல், குழந்தை இயேசுவின் அருகிலிருக்கும் மரியம்மையின் ஓவியத்தைத் தீட்டினார். இது பலரைக் கவர்த்தது. லியனார்டோ 1482-ல் மிலான் நகருக் குச் சென்றார். அங்கு லூடோவிக்கோ (Ludovico ) என்னும் இளவரசரின் அரண்மனை ஓவியராக நியமிக்கப்பட்டார். இவர் பொறியியல் நிபுணராக இருந்ததால் இளவரசர் மாளிகையின் அரண்களை வலுப்படுத்த உதவினார். பின்பு வெனிஸ், பிளாரன்ஸ், ரோம் முதலிய இடங்களில் சில ஆண்டுகள் தங்கினார். 1494-ல் இவர் வரைந்த 'இறுதி விருந்து (The Last Supper) என்னும் ஓவியம் உலகப் புகழ் பெற்றது. இவர் பிளாரன்ஸில் இருந்தபோது. மோனா லீஸா' (Mona Lis) என்ற நேப்பிள்ஸ் நகரப் பெண்ணின் அழகிய படத்தை வரைந்தார். 1516ஆம் ஆண்டில் பிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்சிஸ் அழைப்பின் பேரில் இவர் பிரான்ஸ் சென்றார். அங்கு இவருக்கு அளிக்கப்பட்ட மாளிகையில் தங்கி அமைதியாகத் தம் வாழ்நாளைக் கழித்தார்.