பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

லாப்லாந்து - லால் பகதூர் சாஸ்திரி லாப்லாந்தில் போக்குவரத்துக்குப் பயன்படும் பனிச் சறுக்கு வண்டி. இதைப் பனிமான்கள் இழுத்துச் செல்கின்றன. சுவீடன். பின்லாந்து ஆகிய நாடுகளின் வட பகுதியிலும், வெண்கடலையொட்டி யுள்ள ரஷ்யப் பகுதியிலும் லாப் என்ற இன மக்கள் வாழ்கிறர்கள். லாப் மக்கள் வாழும் இப் பகுதிகள் யாவும் சேர்ந்து லாப்லாந்து என வழங்கப்படுகிறது. லாப் மக்களின் எண்ணிக்கை சுமார் 35,000. இவர்களுக்குத் தனிமொழி உண்டு. வட துருவத்திற்கு அருகிலிருப்பதால் இங்குக் குளிர் மிகுதியாக இருக்கும். குளிர்காலத்தில் சூரியனையே பார்க்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் லாப் மக்களின் வாழ்க்கைக்கு உதவியாக இருப்பது பனிமான் (Reindeer). பனிமான் பால் கொடுக்கிறது. அதன் இறைச்சி யையும் இவர்கள் உண்பர். பனிமானின் தோலினால் ஆடைகளும், காலணிகளும், தங்கியிருப்பதற்குக் கூடாரங்களும் செய்து கொள்கிறார்கள். பனியில் சறுக்கிச் செல் லக்கூடிய சறுக்கு வண்டிகளை (Sledge) இழுத்துச் செல்வதும் பனிமான்களே. பனிப் பிரதேசத்தில் வளரும் பாசம். சிறு தாவரங்கள் ஆகியவை பனிமாளின் உணவு. எனவே இவை வளரும் மேய்ச்சல் பகுதிகளை நோக்கி லாப் மக்கள் நாடோடி களாகச் சென்றுகொண்டிருப்பார்கள். மீன் பிடித்தல் இவர்களுடைய மற்றொரு முக்கியத் தொழில். இப்பொழுது சில இடங்களில் இரும் புத் தாது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்குச் சாலைகளும் ரெயில் 95 பாதையும் அமைத்திருக்கின்றனர். லாப் மக்களுக்குக் கல்வியும், மின்சார வசதி யும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இவர்களில் சிலர் நிலை யாகத் தங்கி வாழத் தொடங்கியுள்ளனர். லால் பகதூர் சாஸ்திரி (1904-1966); இந்தியாவின் பிரதம மந்திரியாக விளங் கியவர் லால் பகதூர் சாஸ்திரி. இந்தியா வின் விடுதலைக்காகப் போராடிய தலைவர் கலில் ஒருவர். உத்தரப்பிரதேசத்தில் காசி அருகி லுள்ள மொகல்சரை என்ற சிற்றூரில் 1904 அக்டோபர் 2ஆம் நாள் லால் பகதூர் பிறந்தார். இவருடைய தந்தை சாரதா பிரசாத்: தாய் தாய் இராம்துலாரி தேவி. பிறந்த சில மாதங்களிலேயே இவர் தந்தையை இழந்தார். காசியில் தன் தாய்மாமன் வீட்டில் தங்கிப் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். ஈடுபாடு கொண்டார். காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழை யாமை இயக்கத்தில் இவர் தம் 17ஆம் வயதில் காசி வித்தியா பீடத்தில் சேர்ந்து, தொடர்ந்து கல்விபயின்று று 'சாஸ்திரி' என்ற பட்டத்தை 1926-ல் பெற்றார். இப் பட்டப் பெயரே, பிற்காலத்தில் இவருடைய பெயராக நிலைத்துவிட்டது. மக்களின் வறுமையையும், அறியாமை யையும் போக்கும் பணியில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சி நடத்திய இயக்கங்களில் பங்குகொண்டு, பலமுறை சிறை சென்றார். தம் விடாமுயற்சியினாலும், உழைப்பின லும் காத்தி, நேரு போன்ற தலைவர்களின் லால் பகதூர் சாஸ்திரி