பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மிதவை மிதவை உயிர்கள் (Plankton) : கடல், ஏரி, குளம், குட்டை முதலிய நீர்நிலைகளில் மிதந்துகொண்டே அலைந்து திரிந்து வாழும் தாவரங்களும் உயிரினங் களும் மிதவை உயிர்கள் எனப்படும். உலகிலுள்ள உயிர்த் தொகுதிகளில் எல்லாம் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பவை மிதவை உயிர்களேயாகும். நீரில் மிதப்பதற்கு ஏற்றவாறு இவற்றின் உடலமைப்பு உள்ளது. மிதவை உயிர்களை, வாழ்க்கை முறைக்கு ஏற்ப, இரண்டு பெரும் பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். ஒன்று மிதவைத்தாவரங்கள்(Phyto plankton). இவை சாதாரணமாகப் பச்சை நிறத்தில் இருக்கும்; நீரிலுள்ள உப்புகள், கார்பன் டையாக்சைடு போன்றவற்றை உறிஞ்சிக் கொண்டு, சூரிய வெளிச்சத்தின் உதவி யால் இவை தம் உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய உணவுப்பொருள்களைத் தயாரித் துக்கொள்கின்றன. எனவே, இவை நீரின் மேல்மட்டத்தில் சூரிய ஒளி எட்டக்கூடிய பகுதிகளிலேயே வாழ்கின்றன. ஆல்காக் கள் (த.க.) என்னும் பாசித் தொகுதி யைச் சேர்ந்த ஓரணுத் தாவரங்கள் யாவும் இப் பிரிவைச் சேர்ந்தவை. மிதவைப் பிராணிகள் (Zoo plankton) என்பவை மற்றொரு பிரிவு. இவை மிதவைத் தாவரங்களைத் தமக்கு உண வாகக் கொண்டு வாழ்கின்றன. எனவே, பெரும்பாலும் மிதவைத் தாவரங்கள் வாழும் நீரின் மேல்மட்டங்களிலேயே மிதவைப் பிராணிகளும் காணப்படுகின் றன. புரோட்டோசோவா(த.க.) என்னும் ஓரணு உயிர், ஜெல்லி மீன், கடல் வண் ணத்தி, நீர்த்தெள்ளு, கடல் சாமந்தி, நண்டு, இறால், ஈர்க்கிறால், மெல்லுடலி கள்(த.க.), ஓட்டுமீன்கள் (த.க.), நட்சத் திர மீன், ஒடிநட்சத்திரம், கடல் முள் ளெலி, கடல் வெள்ளரி போன்ற முள் தோலிகள், மீன் முதலியவற்றின் இளம் பருவ நிலைகளாகிய லார்வாக்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை. மிதவைப் பிராணிகளில் புரோட்டோ சோவாவும், புழு, ஓட்டுமீன், மெல்லுடலி, முள்தோலி போன்றவற்றின் லார்வாக் களும், மீன்முட்டையும் மிக நுண்ணியவை. கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய பொருள்களை மிகப் பெரிதாக்கிக் காட்டும் மைக்ராஸ்கோப்பின் (த.க.) உதவியின்றி இவற்றைப் பார்க்க முடியாது. இவற்றை நுண் மிதவை உயிர்கள் (Micro plankton) என்பார்கள். ஜெல்லி மீன்கள், சீப்புமீன் (Comb fish) லார்வா போன்றவை , பெரியவை. இவற்றைப் பருமிதவை உயிர் (Macroplankton) என்பர். நீர்த்தெள்ளு , மீன்பேன், கெண்டைப் பேன் முதலியவை