பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மித மிதவை ( Buoy ) : நெடுஞ்சாலையில் செல்லும்போது மேடு பள்ளங்களைப் பார்த்து விலகிச் செல்ல முடியும். ஆனால் கடல், ஆறு முதலியவற்றில் கப்பலிலோ, படகிலோ செல்லும்போது நீரினுள் மூழ்கி யிருக்கும் பாறைகளையும், ஆழம் குறைந்த இடங்களையும் எப்படித் தெரிந்துகொள் வது? பாறைகளில் மோதினால் படகு உடைந்துவிடும். ஆழம் குறைந்த பகுதி களில் சென்றால் கப்பலின் அடிப் பாகம் தரையில் தட்டி நகர முடியாமல் நின்று விடும். சில சமயங்களில் சேதமும் ஏற்படும். இவ் விபத்துகளைத் தவிர்க்க ஆபத்தான இடங்களைக் காட்டுவதற்கு ஏதாவது சாதனம் இருக்கவேண்டும். இதற்குத்தான் மிதவை பயன்படுகிறது. துறைமுகங்களிலும் கப்பல்களுக்கு வழி காட்டியாக மிதவைகள் பயன்படுகின்றன. முதன் முதலில் மரக் கட்டைகளும் மரப் பெட்டிகளுமே மிதவைகளாகப் பயன் பட்டுவந்தன. நாளடைவில் உலோகத் தால் பல வடிவங்களில் மிதவைகள் செய்து மிதக்கவிட்டார்கள். இவை இடம் விட்டுப் பெயராமல் இருக்க வேண்டு மல்லவா? அதற்காக அவற்றின் அடிப்பகுதி யில் கனமான எடையைப் பொருத்தி அந்தந்த இடங்களில் சங்கிலியால் தரை யுடன் அவை பிணைக்கப்பட்டிருக்கும். மிதவைகள் பொதுவாகக் கூம்பு வடிவி லும் உருளை வடிவிலும் இருக்கும். பாறை கள் இருக்குமிடம், ஆழம் குறைந்த இடம், மிக ஆபத்தான இடம், செல்ல வேண்டிய திசை - இவை போன்று பலவற்றைக் குறிக்க மிதவைகளில் வெவ்வேறு நிறத் சிலவகை 1 TERLOTTO TLIt LITERAI வை தில் வர்ணம் தீட்டியிருப்பார்கள். குறுக் காகவோ நெடுக்காகவோ பட்டை தீட்டு வதும் உண்டு. மிதவைகளில் எண்களையும் குறிப்பிட்டிருப்பார்கள். சில மிதவைகளில் விளக்குகள் இருக் கும். இரவு நேரத்தில் இவை பயன்படுகின் றன. மிதவையினுள்ளேயே அழுத்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும் வாயு இந்த விளக்குக்கு எரிபொருளாகப் பயன்படு கிறது. மின்கலத்தின் மூலம் எரியும் மின் சார விளக்குகளும் சில மிதவைகளில் உண்டு. விளக்கு ஒளியின் நிறமும் அதன் அளவும் இடத்திற்கேற்றவகையில் மாறு படும். இவ்வாறு மிதவைகளின் மூலம் அவை குறிக்கும் செய்தியை மாலுமி களுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இத்தகைய மிதவைகளை ஒருவகைக் கலங் கரை விளக்கம் என்றே சொல்லலாம். சில மிதவைகளில் மணி பொருத்தப் பட்டிருக்கும். அலைகளின் ஆட்டத்தால் மிதவை அசைந்து மணி ஓசை கேட்கும். சலனமற்ற நீர்ப் பகுதிகளில் இது பயன் படாதாகையால் மின்சாரத்தாலோ வாயு வாலோ மணியோசை தொடர்ந்து கேட் கும் வகையிலும் மிதவைகளை அமைத் துள்ளார்கள். ஊதல் ஒலி உண்டாக்கும் மிதவைகளும் உண்டு. ஒலி உண்டாக்கும் மிதவைகளால் ஒரு நன்மை உண்டு. பனி மூடியுள்ள பகுதி களில் விளக்கு ஒளி தெரியாதல்லவா? அத்தகைய இடங்களில் மணியோசை யாலோ, ஊதல் ஒலியாலோ மிதவைகள் எச்சரிக்கை செய்கின்றன . மிதவைகள்