பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாஸ்க்கோ -

மாஸ்க்கோவிலுள்ள கிரெம்லின் மாளிகைகள்

சோவியத் ஆட்சி ஏற்படுவதற்குக் காரண மாக இருந்த புரட்சித் தலைவர் லெனி னுடைய உடலை ஒரு கண்ணாடிப் பெட்டி யில் இன்றும் பக்குவமாக வைத்துள்ள னர். அழகிய பளிங்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள இவ்வுடலை நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துச் செல்கின்றனர். மாஸ்க்கோ நகரில் பல பெரிய விளையாட்டு அரங்கங்களும் பூங்காக்களும் உள்ளன. மாஸ்க்கோ பல்கலைக்கழகக் கட்டடம் மிக உயரமானதாகும். மாஸ்க்கோவிலுள்ள இசை, நடனக் கலை அரங்குகள் உலகப் புகழ் பெற்றவை. பார்க்க : சோவியத் யூனியன்.

மாஸ்க்கோ பல்கலைக்கழகக் கட்டடம் மிசிசிப்பி 13 மிசிசிப்பி -மிசௌரி ஆறுகள் : வட அமெரிக்காக் கண்டத்திலுள்ள மிகப் பெரிய ஆறு மிசிசிப்பி. இதன் நீளம் சுமார் 3,700 கிலோமீட்டர். இதனுடைய முக்கியமான துணையாறு மிசௌரி. இதன் நீளம் 4,300 கிலோமீட்டர். இரண்டும் சேர்ந்து உலகிலேயே மிக நீளமான ஆறு களாக உள்ளன. வட அமெரிக்காக் கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள ஐட்டாஸ்க்கா என்ற ஏரியிலிருந்து மிசிசிப்பி ஆறு உற்பத்தியா கிறது. தெற்கு நோக்கிப் பாய்ந்து இது மெக்சிக்கோ வளைகுடாவில் கலக்கிறது. கடலில் இது கலக்கும் முன்பு இதனுடன் சுமார் 250 துணையாறுகள் சேருகின்றன. இத் துணையாறுகளில் மிகப் பெரியது மிசௌரி. இது ராக்கி மலையில் உற்பத்தி யாகிறது. செயின்ட் லூயி என்னும் இடத் திற்கு அருகில் இரண்டு ஆறுகளும் ஒன்று சேர்கின்றன. ஆனாலும் இவற்றின் நீர் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் வெகுதூரம் தனித்தனியாகவே ஓடுகின்றன! மிசௌரி ஆற்றின் நீர் செந்நிறமாக உள்ளது. மிசிசிப்பி ஆற்றின் நீர் பளிங்கு போன்ற வெண்ணிறமாக உள்ளது. இவ்விரண்டு ஆறுகளின் நீரும் இவ்விதம் ஒன்று கலக் காமல் தனித்தனியே ஓடுவதைக் காண விந்தையாக இருக்கும். மிசிசிப்பி ஆறு, கடலில் கலக்குமுன் பல கிளைகளாகப் பிரிகின்றது. இவற்றிற் கிடையே உள்ள கழிமுகப் பகுதி, ஆற்றின் வண்டல் மண் படிந்து மிகச் செழிப் பாக இருக்கிறது. முன்பு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சில சமயங்களில் பெரும் அழிவு ஏற்பட்டது உண்டு. ஆனால் இப்போது அணைகளும் கால்வாய்களும் கட்டி, வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பல அணைகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். மிசிசிப்பி-மிசௌரி ஆறுகள் போக்கு வரத்துக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இந்த ஆறுகளில் படகுகளின் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்லும் வழக்கம் நீண்ட காலமாகவே உள்ளது. நீராவிக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் இவற்றில் போக்குவரத்து மிகுந்தது. இதன் விளைவாக, ஆற்றோரத்தில் பல நகரங்களும் துறைமுகங்களும் உருவாகி வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றில் இன்றுங்கூட, பெரிய இழுவைப் படகுகளில் இரும்பு, நிலக்கரி, மரங்கள், எந்திரங்கள், கார்கள் முதலியன ஏற்றிச் செல்லப்படுவதைக் காணலாம். கடலிலிருந்து வெகு தூரம் வரை பெரிய கப்பல்களும் இந்த ஆறு களில் செல்கின்றன.